Friday, July 8, 2016

தோஷத்தை நீக்கும் தண்ணீர்





Written By Niranjana

யாராவது உங்கள் இல்லத்திற்கு வந்தால் காபி கொடுக்கும் முன் தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். அவர்கள் காபி அருந்தவில்லை என்றாலும் தண்ணீராவது குடிக்க கொடுத்த பிறகே அவர்களை வழியனுப்ப வேண்டும். இப்படி செய்வதால் அவர்களின் மனநிலை எதுவாக இருந்தாலும் சரி, அவர்களின் எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அதன் தாக்கம் அந்த இல்லத்தை பாதிக்காது. பன்னீருக்கு இருக்கும் சக்தி வெறும் தண்ணீருக்கும் இருக்கிறதுஎன்றார் சூதவா முனிவர்.

மரணத்திற்கு பின்னர் மேல் லோகத்திற்கு செல்லும் போது நாம் பூமியில் வாழ்ந்த காலங்களில் சில பாவங்கள் செய்து இருப்போம். அந்த பாவங்களுக்கு  தண்டனை நிச்சயம் உண்டு.

ஆகவே இறைவனுக்கு வெறும் தண்ணீரில் அபிசேகம் செய்தாலே ஆடி தள்ளுபடி போல, செய்த பாவங்களுக்கு தண்டனை குறையும் என்கிறது சிவபுராணம். நாம் செய்த பாவங்களை இறைவன் பார்த்து கொண்டே இருக்கிறாரா? என்றால் நிச்சயமாக பார்க்கிறார். கோவில் திருவிழாவில் தீ மிதிப்பார்கள். அந்த தீ மிதிக்கும் முன் ஒரு நிமிடமாவது மழை தூறல் வரும். இதை பலர் அனுபவத்தில் பார்த்து இருப்பார்கள். இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் இறைவன் பார்த்து கொண்டேதான் இருக்கிறார்.


Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 






© 2016www.bhakthiplanet.com All Rights Reserved