Monday, May 16, 2016

முருகனை வணங்குவோருக்கு முன்னேற்றம் நிச்சயம்! வைகாசி விசாகம் சிறப்பு கட்டுரை.!




Written by Niranjana

21.05.2016 அன்று வைகாசி விசாகம்..!
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு மகிமை இருக்கிறது. ஆடி மாதம் என்றால் அது அம்மனுக்கு உகந்தது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது, கார்த்திகை மாதம் சிவபெருமானுக்கும், முருகப்பெருமானுக்கும், ஐயப்பனுக்கும் உகந்தது. அதுபோல வைகாசி மாதம் முருகப்பெருமான் உருவான மாதம். இந்த வைகாசி மாதம் முழுவதுமே முருகப்பெருமானின் சக்தி நிறைந்திருக்கிறது. வசிஷ்ட மகரிஷியிடம் மஹாராஷ்டிர தேசத்தின் மன்னனான விச்வசேனன் என்பவர், “என் எதிர்காலம் எப்படி இருக்கும்.?“ எனக் கேட்டார்.

நடந்தவைநடப்பவைநடக்க இருப்பவை அனைத்தையும் தெள்ளத் தெளிவாக கூறினார் வசிஷ்ட முனிவர். இதை கேட்ட அரசர் ஆச்சரியம் அடைந்தார். “உங்களால் எப்படி நேரில் பார்த்தது போல் சொல்ல முடிகிறது?. என்று கேட்டபோது, “வைகாசிமாதம் முழுவதும் விரதம் இருந்ததால் கிடைத்த அருள்என்றார் வசிஷ்ட மாமுனிவர்.

குடம் பாலில் ஒரு துளி தயிர்பட்டால் அந்த குடம் பாலும் தயிராகி, அந்த தயிரை கடைந்து வெண்ணையாக்கி, வெண்ணையை உருக்கி நெய்யாக்கி, அது பாலைவிட நல்ல விலை போவது போல, வைகாசி மாதம் விரதம் இருந்தால் முருகப்பெருமானின் அருளால் அந்த பக்தனுக்கு வாழ்வே சிறப்பாகும்எந்நாளும் வசந்த காலமாகவே மாறிவிடும்.

முருகப்பெருமான் பிறந்த கதை

சூரபத்மன், சிவபெருமானை நினைத்து கடுமையாக தவம் இருந்தான். இந்த தவத்தை ஏற்ற ஈசன், சூரபத்மன் முன் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும்?. என்று கேட்டார். “உயிர் இருக்கும்வரைதான் எதையும் சாதிக்கலாம். ஆகவே நாம் மரணம் இல்லா வரத்தை கேட்கலாம்என்ற எண்ணத்தில், “எனக்கு மரணமே வரக்கூடாது. அத்தகைய வரமே நான் விரும்புவதுஎன்று சூரபத்மன் சிவபெருமானிடம் கேட்க, அதற்கு இறைவன், “தோன்றும் யாவும் மறையக் கூடியதே. எல்லோருமே இறவா வரத்தை பெற்றால் உலகமே தாங்காது. ஆகவே இந்த வரத்தை உனக்கு தர முடியாதுஎன்றார் ஈசன்.

அப்படியா…? சரி. அப்படியானால் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவனால் எனக்கு மரணம் வரக்கூடாதுஎன்று சாமர்த்தியமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு கேட்டான் சூரபத்மன். இறைவனும்அவ்வாறே ஆகட்டும்என்று ஆசி வழங்கினார்.

இந்த வரத்தை பெற்ற பிறகு சூரபத்மனின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அந்த பூலோக மக்களையும், தேவர்களையும் கண்மூடிதனமாக தொல்லைப்படுத்திகொண்டு இருந்தான். இதனால் பொறுமை இழந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தங்களை காப்பாற்றும்படி வேண்டினார்கள்.

சிவபெருமான், சூரபத்மனை அழிக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அன்னை பார்வதி தேவி, “விநாயகனை அனுப்பினால் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்என்று கூற, அதற்கு இறைவன்,

விநாயகரால் சூரபத்மனை அடக்க முடியுமே அன்றி அழிக்க முடியாது. காரணம், ஒரு பெண்ணால் உருவான ஜீவனால் தமக்கு மரணம் நேரக்கூடாது என்ற வரத்தை என்னிடம் வாங்கினான். அதனால்தான் சொல்கிறேன், உன் சக்தியால் உருவான விநாயகப்பெருமானால் சூரபத்மனை அடக்கி வைக்கமுடியுமே தவிர நிரந்தரமாக தீர்க்க முடியாது.

விரோதத்தையும் நெருப்பையும் வேரோடு அழித்துவிட வேண்டும். இல்லை என்றால் பதுங்கி பாயும் புலி போல் விஸ்வரூபம் எடுத்துவிடும்.” என்ற இறைவன், தன் நெற்றிகண்ணால் ஆறு தீப்பொறிகளை தோன்றச் செய்து, அந்த தீப்பொறிகளை வாயுபகவானிடமும், அக்னிபகவானிடமும் தந்து, அந்த தீப்பொறிகளை கங்கையாற்றில் விடும் படி உத்தரவிட்டார் சிவபெருமான்.

இறைவனின் கட்டளையை ஏற்று, அத்தீப்பொறிகளை கங்கையில் சேர்ந்தார்கள். கங்கை தேவி அந்த தீப்பொறியை இமயமலைசாரலில் உள்ள சரவணப்பொய்கையில் சேர்ந்தார். அந்த சரவணபொய்கையில் இருந்த ஆறு தாமரை மலர்களில், அந்த தீப்பொறி சேர்ந்து ஆறு குழந்தையாக உருவெடுத்தது.

அந்த ஆறு குழந்தைகளை வளர்க்க, ஆறு கார்த்திகை பெண்களை நியமித்தார் திருமால். கார்த்திகை பெண்களும் முருகப்பெருமானை தங்களின் குழந்தையாகவே பாவித்து வளர்ந்தார்கள். பிறகு சக்திதேவியின் சக்தியால் அந்த ஆறு குழந்தைகளும் ஒரே குழந்தையாக வடிவெடுத்தது. இதனால் முருகப்பெருமானுக்கு ஆறுமுகன் என்ற பெயரும் ஏற்பட்டது.

அத்துடன், கார்த்திகை பெண்கள் முருகப்பெருமானை வளர்த்ததால் கார்த்திகேயன் என்ற பெயரும் பெற்றார். முருகப்பெருமான் தோன்றியது வைகாசி மாதம்விசாகநட்சத்திரம்பௌர்ணமி திருநாள்.

சூரபத்மனை அழித்து தேவர்களுக்கு மனநிம்மதியை தந்தார் ஆறுமுகப் பெருமான். அன்றிலிருந்து இன்றுவரை தம்மை வணங்கும் பக்தர்களுக்கு வெற்றியை தந்து அருள்பாலிக்கிறார்.

வைகாசி மாதம் முழுவதும் மட்டுமல்லாமல் தினந்தோறும், நம் தமிழ் கடவுளான முருகப்பெருமானை வணங்கினால் வணங்குபவர்களுக்கு பேராற்றல் கிடைக்கும்.

முருகப்பெருமானுக்கு முல்லை மலர் அணிவித்தால் இன்னல்கள் மறையும், தேன் அபிஷேகம் செய்தால் இசை ஞானமும், கல்வியில் ஏற்றமும், இனிய குரலும் கிடைக்கும். முருகப்பெருமானின் மகிமைகளை படிக்க படிக்க, கந்தன் அருள் கிட்டும். முருகப்பெருமான் தன் பக்தர்களை காக்க, அவர் நடத்திய அற்புதங்களை கூறவும்படிக்கவும் பல பிறவிகள் எடுக்க வேண்டும். அதில் சிலவற்றை படித்தாவது முருகனின் அருளை பெறுவோம்.

சுக்குக்கு மிஞ்சிய கஷாயம் இல்லைசுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை வைகாசி மாதம், விசாகநட்சத்திரத்தில் முருகப்பெருமானையும், வானத்தில் நட்சத்திரமாக திகழும் கார்த்திகை பெண்களையும் வணங்குவோம்.

நட்சத்திரங்களுக்கு மகிமை அதிகம்.

சந்திரன், சூரியனிடமிருந்து ஒளியினைப் பெற்று பிரதிபலிக்கின்றது. ஆனால் நட்சத்திரம், தன் சொந்த வெப்பத்தினாலேயே ஒளிர்கின்றது என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள். நட்சத்திரத்திற்கு சக்தி அதிகம் என்பதால்தான் கார்த்திகை பெண்களை வானில் நட்சத்திரமாக ஜொலிக்கும் அந்தஸ்தை தந்தனர் சிவ-சக்தி.

முருகப்பெருமானை வணங்கும்போது நட்சத்திரமாக திகழும் கார்த்திகை பெண்களையும் வணங்கினால், அவர்களின் அருளாசியும் கிடைக்கப்பெற்று நல்ல பலன் கிடைக்கும். முருகனை வணங்குவோருக்கு முன்னேற்றம் நிச்சயம்.

கந்தனுக்கு அரோகராமுருகனுக்கு அரோகராவேலனுக்கு அரோகரா!


Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 






© 2016www.bhakthiplanet.com All Rights Reserved