Monday, July 27, 2015

அம்மனுக்கு வளையல் அணிவித்தால் மங்களங்கள் பெருகும்! ! ஆடிப்பூரம் சிறப்பு கட்டுரை

Written by Niranjana

16.08.2015 
ஆடிப் பூரம் 

ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள் தன் பக்தர்களை குழந்தைகளாக பார்த்தாலும் அம்மனுக்கு ஒரு கவலை இருந்தது. அதாவது திருமணமான எல்லா பெண்களையும் போல தானும் தாய்மை அடையவில்லையே என்று மனம் ஏங்கினாள்.

முருகனும், விநாயகனும் மற்றும் உன்னுடைய பக்தர்களும் உனக்கு குழந்தைகள்தான் என்று ஈசன், அம்மனை சமாதானம் செய்தாலும் அம்பாள் ஆறுதல் அடையவில்லை. அதனால் புட்லூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் நிறைமாத கர்ப்பிணியான வடிவத்தில் காட்சி தந்தாள். இதனால் தேவலோக பெண்கள் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அலங்காரம் செய்தார்கள். இதனால் அம்மனின் மனம் குளிர்ந்தது.

ஸ்ரீமகாவிஷ்ணு, விநாயகர் முன் தோப்புகரணம் போட்டதால் இன்றுவரை விநாயகர் முன் நாம் தோப்புகரணம் போடுவதுபோல, அம்மனுக்கு தேவலோகத்தினர் வளைகாப்பு நடத்தி, வளையல் அணிவித்து அம்மனை மகிழ்வித்ததால் இன்றுவரை அம்பாளின் பக்தர்களாகிய நாமும் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அம்மனின் மனதை சந்தோஷப்படுத்துகிறோம். அதுபோலவே இன்னும் ஒரு சம்பவமும் இருக்கிறது….மேலும் படிக்க


Sunday, July 26, 2015

முன்னோர்களின் ஆசியை அள்ளி தரும் ஆடி அமாவாசை

முன்னோர்களின் ஆசியை அள்ளி தரும் ஆடி அமாவாசை
Written by Niranjana

14.08.2015 ஆடி அமாவாசை!

ஆடி அமாவாசை அன்று வீட்டிலோ அல்லது கோயிலிலோ முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது விசேஷமானதும் அவசியமானதும் ஆகும்.

பித்ரு சாபத்தில் இருந்து விலக… 

இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு காலமாக பிரித்துள்ளனர். அதில் தை முதல் ஆனி மாதம் வரை பகல் காலம். இதை உத்தராயண காலம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை இரவு காலம். இதை தட்சணாயன காலம்  என்றும் அழைக்கப்படுகிறது.

புராணப்படி உத்தராயண காலம் என்பது தேவர்களின் பகல் நேரம். தட்சணாயன காலம் எனப்படும், அதாவது இரவு காலத்தில் தேவர்கள் உறங்குவதாகவும், இதனால்தான் நரகாசுரன், மஹிஷாசுரன் போன்ற அசுரர்களின் அட்டகாசம் அதிகமானதாகவும் அவர்களை தேவர்களால் எதுவும் செய்ய முடியாமல் அவதிப்பட்டார்கள் எனவும், இதனால்தான் இந்த மாதங்களில் அம்மனும், கிருஷ்ணரும் தேவர்களை காப்பாற்ற அவதாரம் எடுத்து வந்ததாக புராணம் சொல்கிறது

துஷ்டசக்திகளின் அட்டகாசத்தால் பூலோகவாசிகளுக்கு பிரச்னை உருவாகும் என்பதால்தான் ஆடி மாதம் பித்ருக்கள் மற்றும் முன்னோர்களுக்கு உகந்த மாதமாக அமைத்து அவர்களின் குடும்பத்தை துஷ்டசக்திகளிடம் இருந்து காக்க அவர்களை பூலோகத்திற்கு அனுப்பி வைப்பதாக கருட புராணம் சொல்கிறது….மேலும் படிக்க 

ஆடிப்பெருக்கு திருநாள்! சிறப்பு கட்டுரை

ஆடிப்பெருக்கு திருநாள்! சிறப்பு கட்டுரை
Written by Niranjana

03.08.2015 அன்று ஆடிப்பெருக்கு திருநாள்
தெய்வ வழிபாடு விசேஷங்களுக்கு மட்டுமின்றி விவசாயிகளுக்கும் உகந்த மாதம்  இந்த ஆடி மாதம். ஆம்,  உழவு பணிகளை துவங்கும் மாதம். பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீரை நாம் தெய்வமாக மதிக்கிறோம். தண்ணீரை அதிகம் செலவு செய்தால் பணம் விரையம் ஆகும் என்கிறது சாஸ்திரம். கங்கை-காவேரி மற்றும் பல நதிகளை புண்ணிய நதிகளாக, தெய்வீக இடமாக கருதி போற்றி, அங்கு பூஜை செய்வார்கள். எல்லாம மாதங்களிலில் பூஜை செய்வதை விட ஆடிமாதம் பூஜித்தால் விசேஷம் என்று ஏன் கருதுகிறார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை அறிந்துக்கொள்வோம்.

காவேரி நதியின் மகிமையை உணர்த்திய பெருமாள்!

அகத்திய முனிவரிடம் காவேரி எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் காவேரியை தன் கமண்டலத்தில் அடைத்து வைக்க, இதை கண்ட தேவர்கள், விநாயகரிடம் முறையிட, விநாயகப்பெருமான், காக்கை உருவத்தில் வந்து, அகத்தியர் முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டார். விக்னங்களை போக்கும் விக்னேஷ்வரனால் காவேரி தாய் மீண்டும் பரந்துவிரிந்து ஓடினாள். காவேரி நதி ஒரு புண்ணிய நதியாகும். இதில் ஸ்நானம் (நீராடினால்) செய்தால் பாவங்கள் நீங்கும். இதை மக்கள் உணர்வதற்கு புராணத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது.

மக்கள் தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர என்ன செய்ய வேண்டும்? என்று விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை.
அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணுமேலும் படிக்க 

Monday, July 20, 2015

வேண்டுதல் நிறைவேற்றும் ஆடித் தபசு திருநாள்! சிறப்பு கட்டுரை




Written by Niranjana

30.7.2015 அன்று  ஆடித் தபசு

தவம் என்றால் என்ன? நம் மனதில் என்ன விரும்புகிறோமோ அதனை அடையும்வரை காரியத்தில் கண்ணாக இருப்பதுதான் தவம்.  

நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். வெற்றி பெற்றவனோடு பேசும்போது நாமும் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணமும், அவரை போல் பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியும் ஏற்படும்.

மனிதர்களுக்கு அவர்களை அறியாமலே நிறைய ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றல் எப்போது வேலை செய்ய ஆரம்பிக்கிறது என்றால், சாதித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வரும்போதுதான் அந்த ஆற்றல் வெளிப்படுகிறது. அதுபோல, நமது நட்பும் சாதிக்க வேண்டும் என்கிற மன உறுதியும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களிடமே இருக்க வேண்டும்.

என்னடா இது வாழ்க்கை என்று சலித்துகொள்பவர்களிடத்தில் பழகினால், குட்டைக்குள் ஊறிய மட்டை எதற்கும் பயன்படாமல் போவது போல் போய் விடும்.

மழை தண்ணீர் குளத்தில் விழுந்தால் அதை உபயோகிக்கலாம். அதே மழை தண்ணிர் சாக்கடையில் விழுந்தால் யாருக்காவது பயன்படுமா? அதனால், உயர்ந்தவர்களின் நட்பும், நல்லோரின் நட்பும்தான் பயன் தரும். இப்படிதான் நல்ல படியாக வாழ வேண்டும் என்ற எண்ணமும் வரும். அதுவே, நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.

தபஸ் செய்யும் அம்பாளை தரிசித்தால் முயற்சி திருவினையாகும்

அம்பாள், தனக்கு நேர்ந்த சாபம் நீங்கி சிவபெருமானுடன் மீண்டும்  சேர மாங்காட்டில் ஊசி முனையில் தவம் இருந்து சிவபெருமானுடன் சேர்ந்து தன் தவத்தினால் சாதித்துவிட்டார். அதனால், சாதனை செய்ய வேண்டும், புகழ் பெற வேண்டும் என்கிற உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள் மாங்காடு காமாட்சி அம்மனை தரிசித்தால் நிச்சயம் அவர்கள் சாதிப்பார்கள்.   மேலும், திருமண பாக்கியம் அமையவும், பிரிந்த கணவன்மனைவி சேருவதற்கும் துணை செய்வாள் அன்னை.

அதுபோல,  திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயிலில்…மேலும் படிக்க