முன்னோர்களின் ஆசியை அள்ளி தரும் ஆடி அமாவாசை
Written by
Niranjana
ஆடி அமாவாசை அன்று வீட்டிலோ அல்லது கோயிலிலோ முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது விசேஷமானதும் அவசியமானதும் ஆகும்.
பித்ரு சாபத்தில் இருந்து விலக…
இந்துக்கள்
ஒரு வருடத்தை இரண்டு காலமாக பிரித்துள்ளனர்.
அதில் தை முதல் ஆனி
மாதம் வரை பகல் காலம்.
இதை “உத்தராயண காலம்” என்றும், ஆடி முதல் மார்கழி
வரை இரவு காலம். இதை
“தட்சணாயன
காலம்”
என்றும் அழைக்கப்படுகிறது.
புராணப்படி
உத்தராயண காலம் என்பது தேவர்களின்
பகல் நேரம். தட்சணாயன காலம்
எனப்படும், அதாவது இரவு காலத்தில்
தேவர்கள் உறங்குவதாகவும், இதனால்தான் நரகாசுரன், மஹிஷாசுரன் போன்ற அசுரர்களின் அட்டகாசம்
அதிகமானதாகவும் அவர்களை தேவர்களால் எதுவும்
செய்ய முடியாமல் அவதிப்பட்டார்கள் எனவும், இதனால்தான் இந்த
மாதங்களில் அம்மனும், கிருஷ்ணரும் தேவர்களை காப்பாற்ற அவதாரம் எடுத்து வந்ததாக
புராணம் சொல்கிறது.
துஷ்டசக்திகளின்
அட்டகாசத்தால் பூலோகவாசிகளுக்கு பிரச்னை உருவாகும் என்பதால்தான்
ஆடி மாதம் பித்ருக்கள் மற்றும்
முன்னோர்களுக்கு உகந்த மாதமாக அமைத்து
அவர்களின் குடும்பத்தை துஷ்டசக்திகளிடம் இருந்து காக்க அவர்களை
பூலோகத்திற்கு அனுப்பி வைப்பதாக கருட
புராணம்
சொல்கிறது….மேலும் படிக்க