ஆடிப்பெருக்கு திருநாள்! சிறப்பு கட்டுரை
Written by
Niranjana
03.08.2015 அன்று ஆடிப்பெருக்கு திருநாள்!
தெய்வ
வழிபாடு விசேஷங்களுக்கு மட்டுமின்றி விவசாயிகளுக்கும் உகந்த மாதம் இந்த
ஆடி மாதம். ஆம், உழவு
பணிகளை துவங்கும் மாதம். பஞ்சபூதங்களில் ஒன்றான
தண்ணீரை நாம் தெய்வமாக மதிக்கிறோம்.
தண்ணீரை அதிகம் செலவு செய்தால்
பணம் விரையம் ஆகும் என்கிறது
சாஸ்திரம். கங்கை-காவேரி மற்றும்
பல நதிகளை புண்ணிய நதிகளாக,
தெய்வீக இடமாக கருதி போற்றி,
அங்கு பூஜை செய்வார்கள். எல்லாம
மாதங்களிலில் பூஜை செய்வதை விட
ஆடிமாதம் பூஜித்தால் விசேஷம் என்று ஏன்
கருதுகிறார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை அறிந்துக்கொள்வோம்.
காவேரி நதியின் மகிமையை உணர்த்திய பெருமாள்!
அகத்திய
முனிவரிடம் காவேரி எடுத்தெறிந்து பேசியதால்
கோபம் கொண்ட அகத்திய முனிவர்
காவேரியை தன் கமண்டலத்தில் அடைத்து
வைக்க, இதை கண்ட தேவர்கள்,
விநாயகரிடம் முறையிட, விநாயகப்பெருமான், காக்கை உருவத்தில் வந்து,
அகத்தியர் முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டார். விக்னங்களை
போக்கும் விக்னேஷ்வரனால் காவேரி தாய் மீண்டும்
பரந்துவிரிந்து ஓடினாள். காவேரி நதி ஒரு
புண்ணிய நதியாகும். இதில் ஸ்நானம் (நீராடினால்)
செய்தால் பாவங்கள் நீங்கும். இதை மக்கள் உணர்வதற்கு
புராணத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது.
மக்கள்
தங்களுடைய பாவங்களை போக்க கங்கையில் நீராடி
நீராடி கங்கைக்கே பாவம் அதிகமாக சேர்ந்து
தோஷம் ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர
என்ன செய்ய வேண்டும்? என்று
விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை.