Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.
சித்திரையே
வருக சிறப்பான வாழ்க்கை தருக. “இந்த மன்மத வருட சித்திரையில் அவலங்கள், அச்சங்கள் மறையட்டும் மக்கள் கையில் ஐஸ்வரியங்கள் புரளட்டும். இனி துன்பங்கள் தூசி போல் பறக்கட்டும். பால் பொங்குவது போல் மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்கட்டும். அனைவரின் இல்லத்திலும் லஷ்மி தங்கட்டும்“ என்று இறைவனிடம் பிராத்தனை
செய்து, வருட பலன்களை பார்ப்போம்.
மன்மத
வருஷ சித்திரை மாதம், இவ்வாண்டு 14.04.2015 செவ்வாய்க்கிழமை பிற்பகல்
1.47 மணியளவில் (1.47
P.M.) மகர இராசி, கடக லக்கினத்தில்
பிறக்கிறது.
இந்த
சித்திரை மாதத்தில் லக்கினத்தில் உச்சம் பெற்ற குரு,
கடகத்திலிருந்து மகரத்தில் இருக்கும் சந்திரனை பார்வை செய்து, “கெஜகேசரி
யோகம்” பெறுகிறது. எதிரிகளின் சூழ்ச்சி, சண்டை, சச்சரவு அனைத்தும்
முறியடிக்கப்படும். முன்னேற்ற தடை நீங்கும். பொருளாதாரம்
வசதிப்படும். தங்கம் விலை கிடுகிடுவென
உயரும்.
ரியல்
எஸ்டேட், கட்டட வியாபாரம் முன்னேறும்.
தெய்வ பக்தி அதிகரிக்கும். நோய்நொடிகள்
தீரும். அதேசமயம் சனியை, செவ்வாய் பார்வை
செய்வதால் நெருப்பினாலும், நீரினாலும் விபத்தால் - சேதங்கள் நேரலாம். பொதுவாக சென்ற ஆண்டை
விட இவ்வாண்டு வியபாரம் விருத்தி அடையும். மருந்து, உணவு பொருட்கள் விலை
ஏறும். துணி, வாசனை திராவியம்,
அலங்கார பொருட்கள் அதிகம் லாபம் கொடுக்கும்.
கலைத்துறைக்கு சற்று சோதனை நேரமே.
எதிர்பார்த்த லாபம் அதிகம் கொடுக்காது.
ஆனாலும், தேவையில்லா பிரச்னைகள் ஏற்பட்டாலும், உச்சம் பெற்ற குரு
பகவானால் சங்கடங்கள் தீரும்.
சித்திரை
பிறப்பன்று, அதிகாலையில் கண் விழிக்கும்போது, வினை
தீர்க்கும் நாயகனான விநாயகப் பெருமானை
கண்டு வணங்கினால், தீவினைகள் நீங்கி, நல்லவை அனைத்தும்
தேடி வரும். அதுபோல, இந்த
சித்திரை மாதம் செவ்வாய்க்கிழமை பிறப்பதால்,
தமிழ் கடவுளான முருகப்பெருமானை வணங்கினால்,
செந்தில்வேலவன் நாம் செய்யும் நல்ல
செயல்களுக்கு துணை நின்று வெற்றியை
தருவார்.
அத்துடன்,
ஸ்ரீதுர்கை
அம்மனையும் வணங்குங்கள். ஸ்ரீமகாலஷ்மிக்கு இனிப்பு அல்லது சர்க்கரையுடன்
நெய் கலந்து, உங்கள் இல்லத்தில்
இருக்கும் ஸ்ரீமகாலஷ்மியின் படத்தின் முன் வைத்து வணங்கி,
தீப ஆராதனை செய்து, அந்த
இனிப்பு பிரசாதத்தை உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து
சாப்பிடுங்கள். தித்திக்கும் இனிப்பை போல, உங்கள்
வாழ்க்கையில் என்றும் இனிமையான சுபநிகழ்ச்சிகள்
தடை ஏதுமில்லாமல் நடைப்பெற அருள்புரிவாள் ஸ்ரீலஷ்மிதேவி.
அடுத்ததாக,
உங்கள்
இஷ்டதெய்வத்தையும், குலதெய்வத்தையும் வணங்குங்கள். இதன் பலனாக, இந்த
மன்மத வருட தமிழ் புத்தாண்டு
தினத்திலிருந்து நல்ல மாற்றங்களும், குடும்பம்
செழிப்பாகவும், உங்கள் விருப்பங்கள் அனைத்தும்
இறைவனின் ஆசியால் இனிதாகவும் நிறைவேறும்.
இந்த
மன்மத வருடம், நமக்கு வெற்றி
தருகிற வருடமாக அமையட்டும்.
தமிழ்
புத்தாண்டு அன்று நீங்கள் வாங்கும்
முதல் பொருள் சர்க்கரையாகவோ அல்லது
மஞ்சள், குங்குமமாகவோ இருக்கட்டும். சுபபொருட்களை வாங்குவதால் சுபங்கள் அனைத்தும் நம் இல்லம் தேடி
வரும்.
“சித்திரையே
வருக சிறப்பான வாழ்க்கை தருக” என்று வரவேற்று,
ஒவ்வோரு இராசிகாரர்களுக்கான மன்மத வருட பலன்களை
அறிவோம்...மேலும் படிக்க