Written by Niranjhana
புதன்
கிழமை (1.1.2014) அன்று அனுமன் ஜெயந்தி
மார்கழி மாதம்
அமாவாசை அன்று,
மூல
நட்சத்திரத்தில் பிறந்தவர் அனுமான் “ஆண்
மூலம்
அரசாலும்.” என்பார்கள். அரசராக
திகழ்ந்த ஸ்ரீராமருக்கு துணை
இருந்து, இப்போதும் ஆஞ்சனேய பக்தர்களான நம்
மனதில்
தைரியத்தை தருகிற,
ஊக்கத்தை தருகிற
அரசராக
திகழ்ந்து நம்மை
காக்கும் பொறுப்பையும் ஏற்று,
ஸ்ரீராமபக்தர்களுக்கு நிழலாக
இருந்து காப்பாற்றுகிறார் நம்
அரசர்
ஆஞ்சனேயர்.
யுத்தகளத்தில் லட்சுமணன் மயங்கிவிழுந்த போது,
சஞ்சீவினி மூலிகை
இருந்தால் மட்டுமே லட்சுமணன் பிழைப்பார் என்றவுடன், சஞ்சீவினி மூலிகைக்காக அந்த
மலையையே தூக்கிவந்துவிட்டார் அனுமார்.
“தன்னை நம்பி
இருப்பவர்களுக்கு, தாம்
கஷ்டபட்டாலும் அவர்களை கைவிட
மாட்டேன்” என்ற
உயர்ந்த குணம்
கொண்டவர் அனுமார்.
அதனால்தான் ஸ்ரீராமரே அனுமானின் அடக்கம்,வீரம்,
நல்ல
குணம்,
தைரியம் பேச்சாற்றல் மற்றவர்களுக்கு சிரமம்
பாராமல் உதவும்
உயர்ந்த குணத்தை கண்டு,
“உனக்கு
என்ன
வேண்டும் ஆஞ்சனேயா?” என்று
கேட்க,
“எதுவும் எதிர்பார்த்து நான்
உங்களுடன் இருக்கவில்லை. எந்நாளும் நான்
தங்கள்
திருநாமத்தை உச்சரித்துக்கொண்டு இருக்கவே ஆசைப்படுகிறேன்” என்றார்.