Wednesday, November 11, 2015

அற்புதங்கள் நடத்தும் முருகப் பெருமான் : கந்த சஷ்டி விழா சிறப்பு கட்டுரை


17.11.2015 அன்று கந்த சஷ்டி விழா!


தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தொடர்ந்து சண்டை-சச்சரவு ஏற்படுவதையும் இதில் அசுரர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவதையும் எண்ணி கவலை அடைந்தார் சுக்கிராசாரியார். தன் குலத்தில் பிறந்த அசுரர்களை மேலும் அசுர பலம் கொண்டவர்களாக மாற்ற முடிவு செய்தார். இதற்கு வழி தேடிய போது காசியப்ப முனிவரை பற்றி யோசித்ததார்.

காசியப்பர் முனிவர் அசுரர்களுக்கு தந்தையை போன்றவர். இந்த முனிவர் அசுரகுலத்தில் பிறந்தாலும் குணத்தில் சாந்த சொரூபி. மிக நல்லவர். சக்தி வாய்ந்தவர். காசியப்ப முனிவர் மூலமாக ஒரு குழந்தையை பிறக்கச் செய்தால், காசியப்ப முனிவரின் ஆசியுடன் பெரும் வித்தைகளை அறிந்து அசுகுலத்தையும் முனிவரின் மகன் காப்பான் என்று முடிவு செய்து, தன் சக்தியால் மாயை என்ற பெண் மோகினியை உருவாக்கி, “அசுரகுலம் காக்க நீ காசியப்பரை மணந்து ஒரு மகனை பெறுவாயாகஎன்று ஆசி கூறி அனுப்பினார்.

மோகினியான மாயை, ஒரு காட்டில் அழகான நந்தவனம் அமைத்து அந்த நந்தவனத்தில் ஒரு அரண்மனையை கட்டி காசியப்ப முனிவரின் வருகைக்காக எதிர்பார்த்து இருந்தாள். ஒருநாள் காசியப்பர் அந்த காட்டு வழியாக வந்த போது, அங்கே மாயையின் அரண்மனையை கண்டார். முனிவர் அந்த அரண்மனைக்குள் சென்று பார்த்த போது, அங்கு மாயையை கண்டார்.

பெண்ணேஇந்த காட்டில் தனியாக தைரியத்துடன் வசிக்கிறாயே. உனக்கு அச்சமாக இல்லையா?” என்று வினவினார்.
மன தைரியம்தான் என் தாய்-தந்தை. அவ்வாறு இருக்கும் போது, அச்சம் என்பது எனக்கில்லை.” என்று பதிலுரைத்தாள் மாயை

மாயையின் பேச்சும் அழகும் துணிவும் முனிவரை கவர்ந்தது. மாயையை திருமணம் செய்துக் கொண்டார் காசியப்ப முனிவர்.

சூரபத்மன் பிறந்தான்

காசியப்பருக்கும்-மாயைக்கும் மூத்த மகனாக பிறந்தவனுக்குசூரபத்மன்
என்று பெயர் சூட்டினர். அவனை தொடர்ந்து சிங்க முகம் கொண்ட சிம்மபத்ரன், யானைமுகம் கொண்ட தாரகன், ஆட்டின் முகம் கொண்ட கஜாமுகி, என்ற பெண்ணும் பிறந்தார்கள். மூவரும் அசுர குணத்துடன் இருந்தார்கள். காசியப்பருக்கும்-மாயைக்கும், இந்த மூவர் மட்டுமல்லாமல் மேலும் நிறைய குழந்தைகள் பிறந்தார்கள். அவர்கள் அனைவரும் அண்ணன் சூரபத்மனின் நாட்டில் போர் வீரர்களாக திகழ்ந்தார்கள்.

ஒருநாள் தமக்கு பிறந்த அத்தனை வாரிசுகளையும் அழைத்த காசியப்ப முனிவர், “நீங்கள் எல்லோரும் சிவபெருமானை நினைத்து தவம் செய்து நல்ல வரங்களை பெற்று அதன் மூலமாக இந்த உலகத்திற்கு நன்மைகளை செய்ய வேண்டும்என்று கூறினார்.

தன் கணவரின் பேச்சை கேட்ட மாயை, கடும் கோபத்தோடு தன் பிள்ளைகளை அழைத்து, “என் அன்பான பிள்ளைகளேதந்தை சொல் கேட்காதீர்கள். உங்களையும் உங்கள் தந்தை தன்னை போல் ஒன்றும் இல்லாத நாடோடியாக-ஆண்டியை போல உருவாக்க பார்க்கிறார். அவர் பேச்சை கேட்டு நீங்கள் வறுமையில் வாழ்வதா?. உலகத்திற்கு நன்மை என்கிற பெயரில் தேவர்களிடம் பணிவதா? நீங்கள் அசுரகுலத்தில் பிறந்தவர்கள். நம்மை தேவர்கள் ஆட்டிபடைக்கிறார்கள் அவர்களை வீழ்த்த வேண்டும்என்றாள் மாயை.

அப்படி என்றால் நாங்கள் சிவனை நினைத்து தவம் செய்ய வேண்டாமா?. வரம் கேட்க வேண்டாமா?” என்றார்கள் பிள்ளைகள்.

தாராளமாக சிவனை நினைத்து தவம் செய்யுங்கள். வரம் கேளுங்கள். ஆனால் அந்த வரம், யாரும் உங்களை அழிக்க முடியாத வரமாக இருக்க வேண்டும். அந்த வரத்தினால் தேவலோகத்தையே உங்கள் காலடியில் வைக்கும் படியாக நீ்ங்கள் செய்ய வேண்டும்என்றாள் மாயை

தங்கள் தாய் கூறியது போல், சூரபத்மனின் தலைமையில் அசுரர்கள் அனைவரும் சிவனை நினைத்து தவம் செய்தார்கள்.

அத்துடன் சிவனை வரவழைக்க மிக பெரிய யாகத்தை செய்தார்கள் அசுரர்கள். அந்த யாகத்தை கண்டுக் கொள்ளவில்லை இறைவன். இதனால் பொறுமை இழந்த சூரபத்மன் அந்த யாகத் தீயில் குதிக்க சென்றான்.

அப்போது சிவபெருமான் தோன்றினார். “யாரும் எங்களை அழிக்க முடியாத வரம் வேண்டும்என்று வேண்டினார் சூரபத்மன்.

சூரபத்மா.. தோன்றுபவை யாவும் அழியக் கூடியதே. ஆனால் என் சக்தியை தவிர வேறு எதனாலும் உங்களுக்கு அழிவில்லை.” என்று வரம் தந்தார் சிவன்.

ஈசனிடம் வரத்தை பெற்ற சூரனின் அட்டகாசம் தலைகால் புரியாமல் அரங்கேறியது. தேவர்களிடம் வீண் வம்புக்கு சென்றார்கள்-தேவர்களை கண்டாலே துரத்தி அடித்தார்கள். தேவலோகத்தில் நுழைந்தார்கள். சொத்துகளை அபகரித்தார்கள்-சேதப்படுத்தினார்கள். தேவ மங்கையர் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.


அசுரர்களின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்தது. தங்களை காப்பாற்றும்படி
தேவலோகமே கதறியபடி சிவபெருமானை சரண் அடைந்தது. சிவன் தன் நெற்றி கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை உருவாக்கினார். சரவணப் பொய்கை என்ற குளத்தில் அந்த தீப்பொறிகள் போய் விழுந்தன. ஆறு பொறிகளும் ஆறு குழந்தைகளாக வடிவெடுத்தன. அந்த குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் சீராட்டி-தாலாட்டி  வளர்த்தார்கள்.

அன்னை பார்வதிதேவி அந்த ஆறு குழந்தைகளையும் தன் சக்தியால் ஒன்றுபடுத்தினார். ஓரே மாதிரி ஆறு குழந்தைகளாக முதலில் தோன்றியதால், “ஆறுமுகன்என்றும், கார்த்திகை பெண்கள் வளர்த்ததால்கார்த்திகேயன்என்றும் பெயர் சூட்டினார். இவரை போல அழகானவர் வேறு எவரும் இல்லை என்பதால், “முருகன்என்று அழைக்கப்படுகிறார்.

சூரபத்மனை அழிக்க புறப்பட்ட முருகனுக்குவீரவேல்தந்து, முருகனின் போர் படையின் சேனாதிபதியாக வீரபாகுவை நியமித்து ஆசி கூறினாள் அன்னை பார்வதி.

முருகபெருமானின் தலைமையில் நடந்த போரில் அசுர படையினர் பெரும் அளவில் அழிந்தார்கள். இறுதிகட்டம் நெருங்கியது. முருகபெருமானிடம் போர் செய்ய முடியாமல் மாயையின் மகனான சூரபத்மன், மாமரமாக மாறினான். அந்த மரத்தை கந்தன் தன் வேலால் இரண்டாக பிளந்தார். சூரபத்மன் வீழ்ந்தான். மரமாக மாறி இரண்டாக பிளந்த சூரபத்மனின் ஒருபாகத்தை சேவலாகவும் மறுபாகத்தை மயிலாகவும் மாற்றினார்.

தன் வெற்றிக்கு அடையாளமாக சேவலை தன் கொடியில் சின்னமாகவும்,  மயிலை தன் வாகனமாகவும் மாற்றினார் முருகப் பெருமான்.

சூரசம்ஹாரம் நடந்த இடம்

சூரசம்ஹாரம் நடந்த இடம் திருச்செந்தூர். சூரனை வதம் செய்ய ஆறுநாள் ஆனது. ஆறு நாளை சஷ்டி என்பார்கள் சூரபத்மன் வீழ்ந்து முருகப் பெருமான் வெற்றி பெற்ற நாள்-வெற்றி திருநாள் கந்தசஷ்டி என்று அழைக்கப்படுகிறது.. ஜப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி வரை கந்தசஷ்டி நாட்கள் ஆகும்.

முருகனை வணங்கி அருள் பெற்றவர்கள்

முருகனை வணங்கி அருள் பெற்றவர்கள் எண்ணற்ற பலர் உண்டு. அத்தனை பேரையும் சொல்ல இங்கு பக்கங்கள் போதாது. அதில் குறிப்பாக குமரகுருபரரை பற்றி சுருக்கமாக சொல்கிறேன். இவர் பிறக்கும் போதே ஊமையாக பிறந்தார்உன் குறை தீர திருச்செந்தூர் செல் என்றார் ஒருவர். குமரகுருபரரும் நம்பிக்கையுடன் திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்து வணங்கி, திருச்செந்தூரில் 42 நாட்கள் விரதம் இருந்தார். ஆனாலும் பலன் கிடைக்காததால், “இறைவனே கைவிட்டான். இனி உயிர் வாழ்வது வீண்.” என்று முடிவு செய்து கடலில் விழுந்து உயிர் விட முடிவு செய்து கடலில் குதிக்கச் சென்றார்.

அப்போது அர்ச்சகர் வடிவில் முருகன் அவர்முன் தோன்றி,

பேச சக்தி கிடைத்தும் நீ பேசாமல் இருந்தால் எப்படி?” என்று சிரித்து கொண்டே கேட்ட போது, அர்ச்சகரின் கையில் இருந்த பூவை பார்த்து, “பூமருவும்என்று தொடங்கி கந்தர் கலிவெண்பா பாடினார்

அருணகிரிநாதர்

தன் குணங்களால் துயர் அடைந்து, வாழ்க்கை வெறுத்து, திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து குதித்த அருணகிரிநாதரை காப்பாற்றி, அவருக்கு அருள் தந்து, உலக புகழ் அடைய செய்தார் முருகப் பெருமான்.

தன் பக்தனுக்காக சபையில் வந்து வாதாடிய முருகன் 

காஞ்சி குமரக்கோட்டத்தில் கச்சியப்ப சிவாச்சாரியாருக்குகந்தபுராணம்எழுத முதல் அடியானஆனைமுகன்என்ற வரியை முருகன் எடுத்து தந்தார். கச்சியப்ப சிவாச்சாரியார், “கந்த புராணம்எழுதி முடித்தவுடன் அதை அரங்கேற்றம் செய்த போது, “ஆரம்பமே இலக்கண பிழைஎன்று அரங்கத்தில் இருந்த புலவர்கள் விமர்சித்தார்கள்.

மக்கள் பலர் கூடியிருக்கும் சபையில் தமக்கு இப்படி ஒரு அவமானம் ஏற்பட்டுவிட்டதே என்று மனம் வருந்தினார் கச்சியப்ப சிவாச்சாரியார். சிவாச்சாரியரின் மனவருத்தத்தை அறிந்த முருகப்பெருமான், வயதான புலவர் உருவத்தில் தோன்றி, இலக்கண பிழை என்று விமர்சித்த புலவர்களுக்கு சரியான விளக்கம் அளித்தார். புலவர் உருவத்தில் வந்தது முருகப்பெருமான் என்பதை அறிந்த பிறகு ஆனந்தம் அடைந்தார்கள்.

முருகப்பெருமானின் அருளால்கந்தபுராணம்நல்லபடியாக சிறப்பானமுறையில் அரங்கேறியது.

கந்தசஷ்டிவிரதம் இருந்தால் அழகு, அறிவு, செல்வம், தைரியம், திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற எண்ணற்ற பல நல்ல வரங்கள் முருகப்பெருமானின் அருளால் கிடைக்கும்.


Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 










© 2015www.bhakthiplanet.com All Rights Reserved