Wednesday, October 26, 2016

shaligram bestow several benefits



Simple Pariharam Videos Visit : www.youtube.com/niranjanachannel

Trees that prevent dhosham



Simple Pariharam Videos Visit : www.youtube.com/niranjanachannel

சகல நன்மை தரும் சாளக்கிராமம்




சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நிச்சயம் பலன் தரும். இந்த உலகத்தில் எது உருவானாலும் அதற்கு காரணங்கள் இருக்கும். காரணம் இல்லாமல் எதுவுமே நடக்காது.

சாளக்கிராமம் உருவானகதையை பலபேர் பலவிதமாக சொல்கிறார்கள். ஆனால் சிவவிஷ்ணு அம்சமாக இருப்பதுதான் சாளக்கிராமம் என்கிறது கந்தபுராணம்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யார் முதலில் அமிர்தத்தை சாப்பிடுவது என்ற போட்டி வந்தது.

அமிர்தத்தை சாப்பிட்டால் இன்னும்பல சக்திகள் அசுரர்களுக்கு ஏற்படும். அப்படி ஏற்பட்டால் காலம் காலமாக தாங்கள் அசுரர்களுக்கு அடிமையாக வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும் என்று பயந்தார்கள் தேவர்கள்.

இவர்களின் மனபயத்தை புரிந்துகொண்ட விஷ்ணுபகவான், மோகினி உருவம் எடுத்து அசுரர்களின் மனதை திசை திருப்பினார்.

விஷ்ணுபகவான் எப்படி அசுரர்களை சமாளிக்கிறார் என்பதை தெரிந்துக் கொள்ள சிவபெருமான அந்த இடத்திற்கு வந்தார். மோகினி, அசுரர்களை மட்டும் கவரவில்லை சிவனையும் கவர்ந்தாள். சிவனின் கை மோகினின் மேல்பட்டவுடன் நாணமுற்றாள் மோகினி. அப்போது, கண்டகி என்ற நதி உருவானது.

அந்த நதிநீரில் வஜ்ரதந்தம் என்ற புழுக்கள் உருவாகி, அங்கு இருக்கின்ற களிமண்ணை கொண்டுகூடு கட்டிக் வாழ்கிறது. அந்தபுழுக்கள், கண்டகிநதியில் கலந்து இறந்துவிடும்.  சிலர் வலை வீசி புழுக்கூடுகள் நடுவில் இருக்கும் பொன்னை மட்டும் எடு்த்துக்கொண்டு கூடுகளை விட்டுவிடுவார்கள். அந்த புழுகூடுகளே சாளக்கிராமமென்று அழைக்கப்படுகிறது. சிவவிஷ்ணுவின் அருளால் உருவானதே சாளக்கிராமம்.

சாளக்கிராமம் இருக்க வேண்டிய நிறங்கள்


நீலநிற சாளக்கிராமம் செல்வத்தை கொடுக்கும்பச்சைநிறம் ஆராக்கியத்தையும்கறுப்பு நிறம் நல்ல புகழையும்பொன்நிற சாளக்கிராமம் விரோதிகளை அடக்கும் சக்தி ஏற்படுத்தும்சாம்பல் நிறசாளக்கிராமம் பூஜைக்கு ஏற்றது அல்ல. வீட்டிலும் வைத்து பூஜிக்கக்கூடாது. சாளக்கிராமத்திற்கு பாலால் அபிஷேகம் செய்து, துளசியை சமர்பித்து பூஜை செய்ய வேண்டும். அபிஷேகம் செய்த நீரைதலையில்தெளித்துகொண்டால், எந்த வித தோஷமும் அண்டாது. சாளக்கிராமத்திற்கு தினமும் அபிஷேகம் செய்யவேண்டும். சாளக்கிராமத்தை விற்பனை செய்யும் சில வியபாரிகளே தினமும் அந்த சாளக்கிராமத்தின் மீது தண்ணீர் தெளித்து பூக்களை வைப்பார்கள்.

ஸ்ரீமகாவிஷ்ணுவின் அனுகிரகத்தை பெற சாளகிராமத்தை தினமும் பூஜை செய்து  வந்தால் சகலசெல்வங்களுக்கும் அதிபதியாகலாம்.

Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan Click Here 

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 







For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com





© 2016 bhakthiplanet.com  All Rights Reserved


தோஷம் தடுக்கும் மரங்கள்




வீட்டில் மரங்கள் அதிகமாக வளர்த்தால் அந்த வீட்டிற்கு தோஷங்கள் அண்டாது. மரத்தில் சித்தர்கள் தவம் செய்வதாக ஐதிகம். ஆனால் இலவ மரத்தை வீட்டில் வளர்க்கக் கூடாது.

கிளி இலவ மரத்தில் இருக்கும் காய் கனியும் வரை காத்து இருக்கும். அந்தக் காய் கனியாமல் வெடித்து பஞ்சாகும். அதை சற்றும் எதிர்பார்க்காத கிளி, ஏமாற்றத்துடன் சபித்துவிட்டுச் செல்லும். இப்படிக் காய் காய்க்கும் போதெல்லாம் காத்திருந்து ஏமாற்றம் அடையுமாம் கிளி. கிளியின் சாபத்தால் அந்த இல்லத்தில் சந்தோஷம் இருக்காது. வறுமை வாட்டும் அதே போல்தான் கருவேப்பிலைச் செடியும்.

கருவேப்பிலைச் செடியை இல்லத்தில் வைத்தால் மகா லஷ்மி இல்லத்தில் இருந்து அழுது கொண்டே செல்வாளாம். மாப்பிளையான விஷ்ணுவுக்கு கருவேப்பிலைச் செடியை சீதனமாக கொடுக்கமறந்தார் லஷ்மிதேவியின் தந்தை.

சீர்வரிசையை நீங்கள் தடபுடலாகச் செய்தாலும் சாதாரண கருவேப்பிலைச் செடியை உங்களால் தர முடியவில்லை பார்த்தீர்களா?“ என்று பகவான் சிரித்துக் கொண்டே கேட்டார். அந்த வார்த்தையைக் கேட்ட லஷ்மி தேவி கோபம் கொண்டு, கதிரவன் மேற்கில் சாயும் முன் நான் கருவேப்பிலைச் செடியுடன் வருகிறேன் என்றாள்.

கருவேப்பிலைச் செடியை தன் தந்தையிடமிருந்து வாங்கி, தன் கணவனின் ஊருக்குச் செல்லும் வழியில், சூரியன் மறைந்து விட்டது. அதனால் கவலையில் கருவேப்பிலைச் செடியிலேயே மகாலஷ்மி அழுது கொண்டே அமர்ந்தாள். கருவேப்பிலையைச் செடியைப் பார்த்தால் மகாலஷ்மி கோபம் கொள்வார்.

முருங்கை மரம், முனீஸ்வரர் இருக்கும் இடம் என்று காலம் காலமாக நம்பப்படுகிறது. எனவே முருங்கை மரம் வாசலுக்கு நேராக இருக்கக் கூடாது.

அசோக மரம், வேப்ப மரம், தென்னை மரம் போன்ற மரங்களை வீட்டில் வளர்க்கலாம்.

வீட்டில் எவ்வளவு செடிகள் இருக்கிறதோ, அந்த அளவுக்கு மகிழ்ச்சி இருக்கும். அதனால்தான் மன்னர்களும் முனிவர்களும் தவம் புரிய காடுகளுக்னுகுச் சென்றார்கள்.

மரங்களும் செடிகளும் தோஷத்தை அண்டவிடாமல் தடுக்கும். மரத்திற்கும் செடிகளுக்கும் ஒரு வாசனை இருக்கும். அந்த வாசனையை உணர வேண்டும் என்றால் அதிகாலையில் மரத்தின் அருகில் இருந்தால் தெரியும். அந்த வாசனையே வீட்டில் இருக்கும் தோஷத்தையும் விரட்டியடிக்கும். சாம்பிராணிப் புகைக்கு இருக்கும் சக்தி பச்சிலை வாசத்திற்கும் இருக்கிறது.

Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan Click Here 

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 







For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com





© 2016 bhakthiplanet.com  All Rights Reserved