சாஸ்திரங்களை
நம்பிக்கையுடன் கடைபிடித்தால் நிச்சயம் பலன் தரும். இந்த
உலகத்தில் எது உருவானாலும் அதற்கு
காரணங்கள் இருக்கும். காரணம் இல்லாமல் எதுவுமே
நடக்காது.
சாளக்கிராமம்
உருவானகதையை பலபேர் பலவிதமாக சொல்கிறார்கள்.
ஆனால் சிவ –விஷ்ணு அம்சமாக
இருப்பதுதான் சாளக்கிராமம் என்கிறது கந்தபுராணம்.
தேவர்களுக்கும்
அசுரர்களுக்கும் யார் முதலில் அமிர்தத்தை
சாப்பிடுவது என்ற போட்டி வந்தது.
அமிர்தத்தை
சாப்பிட்டால் இன்னும்பல சக்திகள் அசுரர்களுக்கு ஏற்படும். அப்படி ஏற்பட்டால் காலம்
காலமாக தாங்கள் அசுரர்களுக்கு அடிமையாக
வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும் என்று பயந்தார்கள் தேவர்கள்.
இவர்களின்
மனபயத்தை புரிந்துகொண்ட விஷ்ணுபகவான், மோகினி உருவம் எடுத்து
அசுரர்களின் மனதை திசை திருப்பினார்.
விஷ்ணுபகவான்
எப்படி அசுரர்களை சமாளிக்கிறார் என்பதை தெரிந்துக் கொள்ள
சிவபெருமான அந்த இடத்திற்கு வந்தார்.
மோகினி, அசுரர்களை மட்டும் கவரவில்லை சிவனையும்
கவர்ந்தாள். சிவனின் கை மோகினின்
மேல்பட்டவுடன் நாணமுற்றாள் மோகினி. அப்போது, கண்டகி
என்ற நதி உருவானது.
அந்த
நதிநீரில் வஜ்ரதந்தம் என்ற புழுக்கள் உருவாகி,
அங்கு இருக்கின்ற களிமண்ணை கொண்டுகூடு கட்டிக் வாழ்கிறது. அந்தபுழுக்கள்,
கண்டகிநதியில் கலந்து இறந்துவிடும். சிலர்
வலை வீசி புழுக்கூடுகள் நடுவில்
இருக்கும் பொன்னை மட்டும் எடு்த்துக்கொண்டு
கூடுகளை விட்டுவிடுவார்கள். அந்த புழுகூடுகளே சாளக்கிராமமென்று
அழைக்கப்படுகிறது. சிவ – விஷ்ணுவின் அருளால்
உருவானதே சாளக்கிராமம்.
சாளக்கிராமம் இருக்க வேண்டிய நிறங்கள்
நீலநிற
சாளக்கிராமம் செல்வத்தை கொடுக்கும் – பச்சைநிறம் ஆராக்கியத்தையும் – கறுப்பு நிறம் நல்ல
புகழையும் – பொன்நிற சாளக்கிராமம் விரோதிகளை
அடக்கும் சக்தி ஏற்படுத்தும் – சாம்பல்
நிறசாளக்கிராமம் பூஜைக்கு ஏற்றது அல்ல. வீட்டிலும்
வைத்து பூஜிக்கக்கூடாது. சாளக்கிராமத்திற்கு பாலால் அபிஷேகம் செய்து,
துளசியை சமர்பித்து பூஜை செய்ய வேண்டும்.
அபிஷேகம் செய்த நீரைதலையில்தெளித்துகொண்டால், எந்த வித தோஷமும்
அண்டாது. சாளக்கிராமத்திற்கு தினமும் அபிஷேகம் செய்யவேண்டும்.
சாளக்கிராமத்தை விற்பனை செய்யும் சில
வியபாரிகளே தினமும் அந்த சாளக்கிராமத்தின்
மீது தண்ணீர் தெளித்து பூக்களை
வைப்பார்கள்.
ஸ்ரீமகாவிஷ்ணுவின்
அனுகிரகத்தை பெற சாளகிராமத்தை தினமும்
பூஜை செய்து வந்தால் சகலசெல்வங்களுக்கும் அதிபதியாகலாம்.
Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here
Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here
RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal
2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan Click Here
சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
© 2016 bhakthiplanet.com All
Rights Reserved