Saturday, May 11, 2013

நாத்தனார் தொல்லை யாருக்கு?



Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  

நாத்தனார் நட்பும், நார்த்தங்காய் உப்பும் வீண் போகாது. நார்த்தங்காய்க்கு போடவேண்டிய உப்பை சரியாக போட்டால் காய் காலாவதி ஆகாது. அதைப்போலவே நாத்தனாரிடம் நட்பு பாராட்டினால் குடும்பத்தில் விரிசல் இல்லை. சுனாமி இல்லை. மாமியாருக்கு அடுத்து நாத்தனார் ராஜ்யம்தான் சில குடும்பங்களில் நடக்கிறது. உடன் பிறநத சகோதரிகள் அந்த வீட்டின் தாய் போல எனவும், அந்த வீட்டின் குலதெய்வம் எனவும் கிராமபுறங்களில் ஒரு ஆணின் உடன்பிறந்த சகோதரிகளுக்கு மரியாதை இருக்கிறது. 

  
“என்னங்க… உங்கம்மா சிவனேன்னு கம்முன்னு இருந்தாகூட, உங்க தங்கச்சி ஏதாவது கொளுத்தி போட்டு பிரச்சனை பண்றா. அவள கொஞ்சம் கண்டிச்சி வையுங்க.” என்று தன் கணவனுக்கு சில பெண்கள் கொம்பு சீவி விடுவார்கள் அந்த நேரத்தில் அந்த கணவனோ பூம், பூம் மாடு போல, “பார்க்கலாம் பார்க்கலாம்” என்று தலையாட்டுவான்.
சில குடும்பங்களில் நாத்தனார்தான் All in All அழகுராஜாக்கள். அம்மா-அப்பாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பத்தையும் அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நாத்தனார்களும் இருக்கிறார்கள்.
மாமியார் சும்மா இருந்தாலும் நாத்தனார் சில குடும்பங்களில் சும்மா இருப்பதில்லை.
குடும்பம் என்கிற மலர்களை ஒன்றாக கோர்த்து மாலையாக்கும் நாத்தனார்களும் உண்டு. அதே மாலையை நாறு நாறாக பீய்த்து குடும்பத்தையே நாறடிக்கும் நாத்தனார்களும் உண்டு.
புகுந்த வீடு செல்லும் பெண்ணுக்கு அந்த வீட்டில் இருக்கும் நாத்தனார் நல்ல தோழியாக இருப்பாளா – தொல்லையாக இருப்பளா? என்பதை அந்த மணப் பெண்ணின் ஜாதகமே எடுத்துக்காட்டும்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7-ம் இடம் கணவனின் இடம். அந்த 7-ம் இடத்திற்கு 3-ம் இடம் கணவனின் தங்கையை பற்றி அறிவது அதாவது நாத்தனார் குணத்தை அறிவது.
அதாவது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 9-ம் இடம் நாத்தனார் இடம். அந்த 9-ம் இடத்தில் பாபிகள் எனப்படும் சூரியன், சனி, செவ்வாய், ராகு, கேது இருந்தால் அந்த பெண்ணும் அவளுக்கு அமைந்த நாத்தனாரும் எலியும் பூனையுமாக இருப்பார்கள்.
அதே 9-ல் மேற்கண்ட கிரகங்கள் இருந்து, குரு பகவான் பார்வை செய்தால், பூனை இருக்கும் வீட்டில் எலி, பேரன்-பேத்தி எடுத்த கதையாக அந்த வீட்டின் மருமகள் எப்படியோ நாத்தனாரை சமாளித்து விடுவாள்.
ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 9-க்குரியவன் 2,5,9,11-ல் இருந்தால், நாத்தனாருடன் மோதல் இல்லாமல் நிம்மதியாக இருப்பாள். 9-க்குரிவன் 6,8,12ல் இருந்தால் அந்த பெண்ணின் குடுமி நாத்தனார் கையில்.
சரி. நாத்தனார் பிரச்னை செய்கிறாள் என்று வைத்துக் கொள்வோம் நாத்தனாரை எப்படி நட்பாக்கிக்கொள்வது அல்லது எப்படி அவளுடன் பெரிய பிரச்சனை இல்லாமல் சமாளிப்பது?
இதற்கு, பெரிய செலவு தரக் கூடிய பரிகாரம் எதுவும் வேண்டாம். உங்களுடைய லக்கினாதிபதிக்கு ஏற்ற விலை குறைந்த சாதாரண ரத்தினம் ஒன்றை தேர்வு செய்து வெள்ளியில் மோதிரமாக அணிந்து அத்துடன், உங்களின் இஷ்ட தெய்வத்தையும் மனதார வேண்டி வந்தால், Non Stop-பாக இம்சை தரும் நாத்தனார், உங்கள் விஷயத்தில் தலையிட மாட்டாள். செய்து பாருங்கள். ! 

For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 

Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/

Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
 
http://bhakthiplanet.com/ebooks/



For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com  

© 2013 www.bhakthiplanet.com All Rights Reserved

தாமத திருமணம் ஏன்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  

மலர்கள் உள்ள கொடிகள், பழங்கள் உள்ள மரங்கள் எப்படி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறதோ அதை போலவே திருமணம் செய்துக் கொண்டு குடும்பமாக இருக்கும்போது கிடைக்கும் மதிப்பு, மரியாதை அற்புதமானது. லட்சாதிபதியாக இருக்கலாம், கோடீஸ்வரராக இருக்கலாம் ஆனால் வாடகை வீட்டில் இருந்தால் மதிப்பு குறைவுதான். சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் அவனுக்கு சிறு வீடு அது சொந்த வீடு என்றால் அதனுடைய மதிப்பே வேறு. அதைப்போலவே தனி மரமாக இருப்பதைவிட தோப்பாக இருக்க வேண்டும்.


சிலர் கை நிறைய சம்பாதிப்பதால் திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள். சிலர் சுதந்திரமாக இருக்க வேண்டும், யார் கட்டுப்பாட்டிலும் இருக்கக் கூடாது என்று திருமணத்தை தள்ளிப் போடுகிறவர்களும் உண்டு. இப்படி திருமணத்தை தள்ளிப் போடுவதன் காரணம் என்ன என்று ஜோதிட ரீதியாக பார்த்தால், ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7-ம் இடம் என்று கூறப்படும் களத்திரஸ்தானம் கெட்டிருந்தால் அல்லது களத்திரகாரகன் சுக்கிரன் கெட்டிருந்தால் திருமணம் தடைப்படுகிறது. தாமதப்படுகிறது.

பொதுவாக காளசர்ப்பயோக ஜாதகம், திருமணத்தை தாமதப்படுத்துகிறது. அதாவது இராகு, கேது பிடிக்குள் எல்லா கிரகங்களும் இருந்தால் வயது 33-க்கு மேல்தான் திருமணம் நடக்கிறது. 2-ம் ஸ்தானத்தில் சூரியன், இராகு, கேது, செவ்வாய் அல்லது 7-ம் ஸ்தானத்தில் தனித்து சூரியன் யாருடனும் சேரமல் இருந்தால் திருமணம் தாமதப்படுகிறது.

7-க்குரியவன் மறைந்தாலும் திருமணத்தை தாமதம் செய்கிறது.

அதாவது ரிஷப லக்கினமாக இருந்து, செவ்வாய் 12-ல் மறைந்தாலும் தாமத திருமணம். என்னதான் திருமணம் தாமதம் ஏற்பட்டாலும் குடும்பஸ்தானத்தை  குரு பார்த்தால், பூர்வீக புண்ணிய ஸ்தானத்தை அதாவது புத்திர ஸ்தானத்தை குரு பார்த்தால் தடை ஏதும் இல்லாமல் திருமணம் நடக்கும். பொதுவாக 7-ம் இடம் வலுத்து இருந்தால் பயமில்லை.
அதாவது, 7-ல் சூரியன்-புதன், சூரியன்-சுக்கிரன்-ராகு அல்லது கேது என்று இப்படி பாபிகள் அமர்ந்தாலும், குரு பார்வை இருந்தால், சுபர் சேர்க்கை, சுபர் பார்வை இருந்தால் திருமணத்தை நடத்தி வைக்கும்.

குடும்ப சூழ்நிலை காரணமாகவும், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையாலும் பல பெண்கள் திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள். சிலரோ படித்து ஒரு வேலையில் சேர்ந்து திருமணம் செய்து கொள்ளாமல் சொந்த வீட்டை வாங்கிவிட்டு அதற்கு மாத மாதம் EMI கட்டுவதும், தங்கை, தம்பிகளை கரையேற்றுவதுமாக இருந்தால், பிற்காலத்தில் அவர்களே திருமணத்தை தள்ளி போட்டு தவறு செய்துவிட்டோமோ என்று எண்ணும்படி ஆகிவிடும்.

ஆகவே, படிப்பும் வேலையிலும் அதனால் கிடைக்கும் வசதிகளிலும் மூழ்கி திருமணத்தை மறந்து பிற்காலத்தில் தனி மரமாக நிற்காதீர்கள். எல்லோருக்கும் திருமண நேரம் அமையும். அந்த நல்ல நேரத்தை தள்ளி போட வேண்டாம்.

உங்களுக்கு தாமத திருமணம் அமைகிற ஜாதகமாக இருந்தால் அதற்கு பரிகாரம் ஆகக் கூடிய திருக்கோயில்கள் எங்கிருந்தாலும் தேடி சென்று பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள். அம்பாள் அருளால் திருமணம் ஜாம் ஜாம் என்று நடக்கும்.

முக்கியமாக பெற்றோர்களே, பிள்ளைகளுக்கு திருமண வயது வந்துவிட்டால் அவர்களுக்கு என்று ஒரு குடும்பத்தை அமைத்து தர முயற்சியை தொடங்குங்கள். இதைவிட வேறு ஒரு முக்கியமான கடமையும் வேலையும் உங்களுக்கு இருக்க முடியாது.!

For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 

Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/

Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
 
http://bhakthiplanet.com/ebooks/



For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

© 2013 www.bhakthiplanet.com All Rights Reserved

பணத்தில் புரள்பவர்கள் யார்? கடனில் மூழ்குபவர்கள் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  

கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன். இராவணனின் மன நிலையை சரியாக எடுத்துச் சொல்ல கம்பன் எழுதிய அற்புத வரிகள் இது. கடன்பட்டவனுக்கு நிம்மதி இருக்காது.


கடன் வாங்கினாலே எவருக்கும் தலை வணங்காதவனையும் கடன்காரனிடம் தலை குனிந்து நிற்கச்செய்யும். “கடன் வாங்கி அதில் நிலம் வாங்கி, அந்த கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் வாங்கிய நிலத்தை விற்றேன், ஆனால் வாங்கிய கடன் மட்டும் இன்னும் அப்படியே நிற்கிறது“ என்று சொல்பவர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.  இது உண்மையும்கூட. கடன் வாங்கினாலே அந்த கடனை அடைப்பது என்பது சுலபமில்லை. கடன் தொகை சிறிய அளவில் இருந்தாலும் அதற்கான வட்டியோ பல மடங்கு அனகோண்டாவை போல நீண்டுக்கொண்டே இருக்கும்.  

கடன் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது. வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல கடனும் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால் வரவுக்கு மேல் கடன் இருந்தால், இதனால் அந்த தலைமுறைகூட பாதிக்கப்படுகிறது.  கடன் தொல்லையில் இருந்து விரைவில் விடுதலை கிடைக்க சுலபமான பரிகாரம் என்ன? என்பதை பற்றி தெரிந்துக்கொள்வதற்கு முன், கடன்படும் ஜாதகம் எது? என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

ஒருவருடைய ஜாதகத்தில் லக்கினத்திற்கு 6-க்குரியவன், 2-ல் அல்லது 9-ல் இருந்தாலும், லக்கினத்திற்கு 12-ம் அதிபதி, 9-ல் இருந்தாலும், லக்கினத்திற்கு 2-ம் அதிபதி, 9-ம் அதிபதி, 6 அல்லது 8-ம் இடத்தில் இருந்தாலும், லக்கினத்திற்கு 6-ம் இடத்தில் பாவ கிரகங்கள் என்று சொல்லக் கூடிய சூரியன், ராகு, கேது, செவ்வாய் இருந்தாலும், கடனுக்கு வட்டி கட்ட இன்னொரு கடன் வாங்கி, அதற்கும் சேர்த்து வட்டி கட்டும் நிலையில் இருப்பார்கள்.

சரி. வாட்டி வதைக்கும் கடன் தொல்லையில் இருந்து விடுபட என்ன பரிகாரம்?

கடன் வாங்கியவரிடம் செவ்வாய்கிழமை அன்று வாங்கிய கடன் தொகையில் ஏதாவது ஒரு சிறு தொகையை தந்துவிடுங்கள். கடன்கள் அத்தனையும் படிபடியாக ஒழிய நல்வழி கிடைக்கும்.

அல்லது -

வாங்கிய கடனுக்கு மாதா மாதம் சரியாக வட்டி கட்டும் நபர்களாக நீங்கள் இருந்தால், வட்டி செலுத்தும் நாளை செவ்வாய்கிழமையாக தேர்ந்தெடுங்கள். கடனை விரைவில் அடைப்பீர்கள்.

ஒருவர் ஜாதகத்தில் 6-ம் அதிபதி யார் என்று கவனியுங்கள். உதாரணமாக கடக லக்கினம் என்று வைத்துக்கொள்வோம். 6-ம் அதிபதி குரு 2-ல், 9-ல், 11-ல் இருந்தால் அந்த ஜாதகர் கடன்காரர் ஆவார். ஆகவே, அப்படிபட்ட ஜாதகர்கள், மஞ்சல் நிறம் கொண்ட ரத்தின கல், அல்லது புஷ்பராக ரத்தினத்தை வெள்ளியில் மோதிரமாக ஆள்காட்டி விரலில் அணிந்தால் கடன் என்கிற தரித்திரம் விலகும். வளங்கள் பெருகும்.

பணத்தில் புரள்பவர்கள் யார் ?

எதற்கும் ஒரு லக் வேண்டும் என்பார்கள். அந்த லக்கை எப்படி தெரிந்துக்கொள்வது? அதுவும் ஜோதிடசாஸ்திரபடி எப்படி அறிவது என்றால், ஒருவர் ஜாதகத்தில் லக்கினத்தை வைத்து அவர்களுடைய அதிர்ஷ்டத்தை அறியலாம். ஒருவரின் லக்கை அறிவதற்கு காரணமாக இருப்பதால்தான் என்னவோ அதனை (லக்)கினம் என்று அழைக்கிறோம் ? 

ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2-ம் அதிபதி 9-ல் இருந்தாலோ, 11-ல் இருந்தாலோ அல்லது 9-11க்குரியவருடன் சேர்ந்து 9-11 இருந்தாலோ அல்லது 9-ம் அதிபதி 2.ல் இருந்தாலோ அல்லது 9-ம் அதிபதியும் 11-ம் அதிபதியும் சேர்ந்து 5-ல் இருந்தாலோ, 2-ம் அதிபதியும், 9-ம் அதிபதியும் “சார பரிவர்த்தனை” பெற்று இருந்தாலோ அப்படிபட்ட ஜாதகர்கள் பணத்தில் புரள்வார்கள். கீரை கட்டுபோல இவர்களிடத்தில் பணக்கட்டு இருக்கும். அது மட்டும் அல்ல, லக்கினாதிபதி – இரண்டாம் அதிபதி 9-ல் அல்லது 11-ல் இருந்தாலும் பணத்திற்கு பஞ்சமே ஏற்படாது.!

For More Articles in ENGLISH & TAMIL Visit: www.bhakthiplanet.com
 

Matrimony
Free Register For All Community REGISTER NOW  http://www.manamakkalmalai.com/

Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
www.bhakthiplanet.com
 
http://bhakthiplanet.com/ebooks/



For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com  

© 2013 www.bhakthiplanet.com All Rights Reserved