Tuesday, October 8, 2013

வேப்ப மரம் உள்ள இடத்தில் குலதெய்வம் குடியிருக்கும்!

Written by Niranjana
 
ஒரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகமே தண்ணீரால் மூழ்கியது. அந்தக் காலத்தில் மிக பெரிய சுனாமி அதுவாகத்தான் இருக்கும்.  மறுபடியும் உலகத்தை உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் மறுபடியும் உலகத்தை உருவாக்கினார். முதலில் எதை உருவாக்குவது என்று தீவிர சிந்தனையில் இருந்த போது, வேதங்களை அதாவது வேத மந்திரங்களை வேப்பமரங்களாக மாற்றினார் சிவபெருமான். அதன் பிறகுதான் ஜீவராசிகளை படைத்து புதிய உலகத்தை உருவாக்கினார்.

வேப்பமரத்தை வெட்டினால், பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும். தெய்வத்திற்குச் சமமான தெய்வத்தால் உயிர் பெற்ற வேப்பமரத்தை வெட்டினால் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பாவம் போகாது.

யாகம் செய்யயும் இடத்தில் வேப்பமரம் இருந்தால், மந்திரங்களுக்கு வலிமை அதிகம் உண்டாகும். காரணம், வேதங்கள்தான், வேப்பமரங்களாக மாறின என்கிறது புராணம்.

தெய்வீக யாகம் செய்ய முடியாதவர்கள், வேப்பமரத்திற்கு…மேலும் படிக்க


Monday, October 7, 2013

பாத்ரும் எப்படி அமைய வேண்டும்? எந்த திசையை பார்த்து குளித்தால் நன்மை?

Written by K.Vijaya Krishnarau
 
பாத்ரும் எந்தத் திசையில் அமைவது என்பது மிக முக்கியம். வீட்டின் ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு என்று பல விஷயங்கள் இதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.

ஒரு வீட்டில் குளியலறையும், கழிவறையும், அமைய வேண்டிய இடம் மிக முக்கியமானது! தவறான இடத்தில் அமைந்தால் சில கெடுதல் பலன்களை அவை தரலாம்.

சொந்த வீடாக இருந்தால், இது போன்ற சிறு சிறு குறைகளை எப்படியாவது மாற்றி அமைக்கலாம். வாடகை வீட்டில் இருப்பவர்கள் என்ன செய்ய முடியும்? வாஸ்து குற்றத்துடன் இருக்கிற இவற்றுக்கு என்ன செய்யலாம்? 

இதற்கு எளிய நிவர்த்தி முறைகள் உண்டு. தங்கள் வீட்டின் குளியலறை…மேலும் படிக்க


Tuesday, October 1, 2013

கிரகதோஷங்களும்- திருஷ்டிதோஷங்களும் அகற்றும் தாமரை தீபம்

Written by Niranjana
மகாலஷ்மிக்கு யாகம் செய்யும் போது தாமரைப்பூவை நெய்யில் தோய்த்தெடுத்து யாகத்தில் போட்டால், சகல பாக்கியங்களும் கிடைக்கும் என்று சிவபுராணம் சொல்கிறது. யாகங்கள் செய்ய இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை உச்சரித்து…மேலும் படிக்க

கிரகதோஷங்களும்- திருஷ்டிதோஷங்களும் அகற்றும் தாமரை தீபம்