Monday, March 5, 2018

5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை


Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

ஒருவரின் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 5-ம் இடத்தை பூர்வ புண்ணிய ஸ்தானம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதுமட்டுமல்ல, என்னை பொறுத்தவரை இந்த 5-ம் இடம் அற்புதங்களை செய்யும் இடம்.

ஆம்.

5-ம் இடத்தில் யோக கிரகங்கள் அதாவது 5-க்குரிய கிரகம், 2-க்குரிய கிரகம், 9-க்குரிய கிரகம், 10-க்குரிய கிரகம், 11-க்குரிய கிரகம் இப்படி ஏதேனும் ஒரு அமைப்பு இருந்தால், வாழ்க்கையில் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், இந்த 5-ம் இடத்தின் அற்புத அமைப்பு அந்த நபரை மீண்டும் உச்சநிலைக்கு தூக்கி வந்துவிடும். பெருமைக்குரிய வாழ்க்கை தரும். ஏதேனும் காரணத்தால் பணமும், புகழம் சட,சடவென சரிந்தாலும் மீண்டும் அந்த ஜாதகரை மேலே எழுப்பி சிகரத்தில் உட்கார வைக்கும் அற்புதமிக்க இடமே 5-ம் இடமும், 5-ம் இடத்தின் கிரகமும் செய்கிற சிறப்பு ஆகும்.

அன்புக்குரிய வாசகர்களே 5-ம் இடம் உங்களுக்கு வலு பெற்று இருந்தால் எந்த பிரச்னையில் நீங்கள் இன்று இருந்தாலும் பெரும் எதிர்காலம் உங்களுக்கு உண்டு.
Simple Pariharam Videos Visit : https://www.youtube.com/user/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved