Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.
அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 2017-ல் சென்னைக்கு இயற்கை சீற்றங்களால் ஆபத்து என்று சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். என்னுடைய
ஜோதிட கணிப்புபடி டிசம்பர் 2017 கிரக நிலை பெரிய
ஆபத்தை கொடுக்காது. சிம்ம லக்கினத்தில், அஸ்வினி
நட்சத்திரம் மேஷ இராசியில் 2017 டிசம்பர்
மாதம் பிறக்கிறது. மக்களை குறிக்கும் இடம்
5-ம் இடம். லக்கினத்திற்கு 5-ல்
புதன், சனி இருக்கிறது. தன-லாபாதிபதி புதன், 5-ல் இருப்பதால் பெரிய
ஆபத்துக்கள் மக்களை பாதிக்காது. அதுமட்டுமல்ல,
தமிழகத்தை, தமிழ்மொழியை குறிப்பிடுவது செவ்வாய். அந்த செவ்வாய் குருவுடன்
இணைந்து, 3-ம் இடத்தில், குரு
மங்கள யோகம் பெறுகிறது.
ஆகவே,
தமிழ்நாட்டுக்கோ, சென்னைக்கோ பெரிய ஆபத்து இல்லை.
மேஷத்தில் இருக்கும் சந்திரனை, குரு பார்வை செய்வதும்,
செவ்வாய் பார்வை செய்வதும் யோகங்களை
கொடுக்கிறது. அதாவது, கெஜகேசரி யோகம்,
சந்திர மங்கள யோகம் உண்டாகிறது.
சந்திரனை செவ்வாய் பார்வை செய்வதாலும், சந்திரன்,
கேது சாரத்தில் இருப்பதாலும், மழைக்கு பஞ்சம் இருக்காது.
கனமழை உண்டு. ஆனால், ஆபத்து
வரும் அளவு பயம் இல்லை.
பூமிகாரகன்
செவ்வாய், குருவின் பிடியில் இருப்பதால், பூமிக்கு ஆபத்து இல்லை. சந்திரனை,
குரு பார்வை செய்யாவிட்டால்தான் பெரும்
வெள்ளம், சுனாமி பாதிப்பு தரும்.
இங்கு குரு பகவான் பிடியில்
சந்திரன் இருப்பதால் சுனாமி, பெருத்த வெள்ளசேதம்
வராது. விருச்சிகத்தில் இருக்கும் சூரியன், சுக்கிரன் இணைப்பால் அரசியல்துறையில் இருப்பவர்களுக்கும், கலைதுறையில் இருப்பவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
சூரியனுக்கு இரு பக்கமும் பாவகிரகங்கள்
அதாவது சனி, செவ்வாய் இருப்பதால்,
அரசுதுறை மேலும் அதிகம் செய்ல்படக்கூடிய
காலம் இது.
அம்பாள்
அருளால் சந்திரன், கேது சாரத்தில் நின்று,
அந்த கேது, சனி இல்லத்தில்
இருப்பதும், அந்த சனி பகவான்,
புதனுடன் இணைந்து, பஞ்சமத்தில் இருப்பதும் பெருத்த ஆபத்து, ஆபத்து
என்று வந்து கொண்டிருக்கும் செய்திகளுக்கு
முற்றுபுள்ளி வைப்பதாக இருக்கும். ஆகவே, டிசம்பர் 2017-ல்
சென்னைக்கு ஆபத்து எதுகூம் இல்லை.
வருகிற
2018 புத்தாண்டை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். இறைவன் அருளால் எல்லாம்
இனியவையாக அமையட்டும்.
2017 Numerology Predictions Click Here
SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN Click Here
Guru Peyarchi Palangal 2017- 2018 All Rasi palangal
மச்ச பலன்கள் கிளிக் செய்யவும்
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2017 bhakthiplanet.com
All Rights Reserved