Written by Niranjana
26.01.2017 அன்று சனிப்பெயர்ச்சி!
திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.55 மணிக்கு சனி பகவான், விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
சரி இந்த சனிப்பெயர்ச்சிக்கு எல்லா ராசிக்காரர்களுக்கு என்ன பரிகாரம்
என்பதை பற்றி அறியலாமா.
சனிபகவானை
போல் கொடுப்பார் இல்லை கெடுப்பார் இல்லை
என்று கூறுவார்கள். ஆம். சனிஸ்வர பகவானின்
ஆதிக்கம் ஒருவருக்கு நல்ல விதத்தில் இருந்தால்
அவர்களுக்கு யார் மூலமாவது யோகம்
ஏற்படும். தீயவிதத்தில் இருந்தால் அவர்களுக்கு யார் மூலமாவது தோல்லைகள்
வந்து சேரும்.
சிவனே
சனிஸ்வரருக்கு பயந்து குகைக்குள் ஒளிந்துகொண்ட
கதை எல்லாருக்கும் தெரியும். இறைவனுக்கே சனிஸ்வரர் என்றால் பயம் அதுபோல மகாகாளியின் பக்தராகவும் செல்லபிள்ளையாகவும் இருந்த விக்கிரமாதித்தனையே ஒரு வேலைக்காரனை போல்
மாற்றிவிட்டார் சனிஸ்வரர் என்றால் நாமெல்லாம் எந்த
மூலைக்கு.
சரி
சனிஸ்வர
பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்க என்ன
வழி.? ஒருவழிதான் இருக்கிறது.
சாட்சிகாரன்
காலில் விழுவதைவிட சண்டைகாரன் காலில் விழுவதே மேல் என்பது
போல், சனி பகவானிடமே சரண்
அடைவது நல்லது.
சனிஸ்வர
பகவானை சனி பெயர்ச்சி அன்று
மட்டும் வணங்காமல், சனிகிழமைதோறும் சனிஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை
தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.
சனிஸ்வரர் பாதிப்பு உள்ளவர்கள், தினமும் காக்கைக்கு கருப்பு
எள் கலந்த சாதத்தை வைக்க
வேண்டும். மாற்றுதிறனானிகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளை
செய்ய வேண்டும்.
சனிகிழமையில்
சனிஸ்வர பகவானுக்கு கருப்பு நிறத்திலோ, நீலநிறத்திலோ
வஸ்திரத்தை அணிவித்தால், அந்த பக்தரின் கௌரவம்
காக்கப்படும். முடிந்த அளவு சனிகிழமையில்
சனி ஓரையில் நல்லெண்ணெயில் தீபம்
ஏற்றினால் தீபம் எரிந்த பிறகு
திரியும் எண்ணையும் இல்லாமல் போவது போல், சனிபகவான்
தரும் அர்தாஷ்டம – அஷ்டம – ஜென்ம – பாத
– ஏழரை போன்ற சனி தோஷங்கள்
பெரும் துன்பங்கள் இல்லாமல் போகும். இன்பமே எந்நாளும்
சேரும்.
அருள்மிகு
சனிஸ்வர பகவானை வணங்கி, அவர்
அருளாசியை பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.
நிம்மதியான வாழ்க்கை தரும் திருநள்ளாறு | Thirunallar Will Give Peaceful Life https://www.youtube.com/watch?v=8CTXA3ezcis