Friday, January 13, 2017

Simple Pariharam For Shani Dosha

    



SANI PEYARCHI 2017 - 2020 RASI PALAN Click Here https://www.youtube.com/watch?v=Hdy894y9f68

நிம்மதியான வாழ்க்கை தரும் திருநள்ளாறு | Thirunallar Will Give Peaceful Life  https://www.youtube.com/watch?v=8CTXA3ezcis

சனி தோஷம் நீக்கும் எளிய பரிகாரம் பகுதி - 1  | Simple Pariharam For Shani Dosha Part 1 https://www.youtube.com/watch?v=tWdYgAZhwvM


2017 Numerology Predictions Click Here https://www.youtube.com/watch?v=CEMVeqvaqI8

சனிப்பெயர்ச்சி எளிய பரிகாரம்



Written by Niranjana

26.01.2017 அன்று சனிப்பெயர்ச்சி!

திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.55 மணிக்கு சனி பகவான், விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

சரி இந்த சனிப்பெயர்ச்சிக்கு எல்லா ராசிக்காரர்களுக்கு என்ன பரிகாரம் என்பதை பற்றி அறியலாமா.

சனிபகவானை  போல் கொடுப்பார் இல்லை கெடுப்பார் இல்லை என்று கூறுவார்கள். ஆம். சனிஸ்வர பகவானின் ஆதிக்கம் ஒருவருக்கு  நல்ல விதத்தில் இருந்தால் அவர்களுக்கு யார் மூலமாவது யோகம் ஏற்படும். தீயவிதத்தில் இருந்தால் அவர்களுக்கு யார் மூலமாவது தோல்லைகள் வந்து சேரும்.

சிவனே சனிஸ்வரருக்கு பயந்து குகைக்குள் ஒளிந்துகொண்ட கதை எல்லாருக்கும் தெரியும். இறைவனுக்கே சனிஸ்வரர் என்றால் பயம்  அதுபோல மகாகாளியின் பக்தராகவும் செல்லபிள்ளையாகவும் இருந்த   விக்கிரமாதித்தனையே ஒரு வேலைக்காரனை போல் மாற்றிவிட்டார் சனிஸ்வரர் என்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு.

சரி  சனிஸ்வர பகவானின் தொல்லையில் இருந்து தப்பிக்க என்ன வழி.? ஒருவழிதான் இருக்கிறது.

சாட்சிகாரன் காலில் விழுவதைவிட சண்டைகாரன் காலில் விழுவதே மேல் என்பது போல், சனி பகவானிடமே சரண் அடைவது நல்லது.

சனிஸ்வர பகவானை சனி பெயர்ச்சி அன்று மட்டும் வணங்காமல், சனிகிழமைதோறும் சனிஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வணங்க வேண்டும். சனிஸ்வரர் பாதிப்பு உள்ளவர்கள், தினமும் காக்கைக்கு கருப்பு எள் கலந்த சாதத்தை வைக்க வேண்டும். மாற்றுதிறனானிகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும்.

சனிகிழமையில் சனிஸ்வர பகவானுக்கு கருப்பு நிறத்திலோ, நீலநிறத்திலோ வஸ்திரத்தை அணிவித்தால், அந்த பக்தரின் கௌரவம் காக்கப்படும். முடிந்த அளவு சனிகிழமையில் சனி ஓரையில் நல்லெண்ணெயில் தீபம் ஏற்றினால் தீபம் எரிந்த பிறகு திரியும் எண்ணையும் இல்லாமல் போவது போல், சனிபகவான் தரும் அர்தாஷ்டமஅஷ்டமஜென்மபாதஏழரை போன்ற சனி தோஷங்கள் பெரும் துன்பங்கள் இல்லாமல் போகும். இன்பமே எந்நாளும் சேரும்

அருள்மிகு சனிஸ்வர பகவானை வணங்கி, அவர் அருளாசியை பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.
SANI PEYARCHI 2017 - 2020 RASI PALAN Click Here https://www.youtube.com/watch?v=Hdy894y9f68

நிம்மதியான வாழ்க்கை தரும் திருநள்ளாறு | Thirunallar Will Give Peaceful Life  https://www.youtube.com/watch?v=8CTXA3ezcis

சனி தோஷம் நீக்கும் எளிய பரிகாரம் பகுதி - 1  | Simple Pariharam For Shani Dosha Part 1 https://www.youtube.com/watch?v=tWdYgAZhwvM


2017 Numerology Predictions Click Here https://www.youtube.com/watch?v=CEMVeqvaqI8

Saturday, January 7, 2017

பொங்கலோ பொங்கல்|பொங்கல் திருநாள் சிறப்பு கட்டுரை.!



Written by Niranjana



14.01.2017 அன்று தைப் பொங்கல்!

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த அளவுக்கு நல்வாழ்வை தரும் பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானின் அருளாசியை பரிபூரணமாக பெற்று, வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.

ஜீவராசிகளை இயங்க வைக்கும் ஆற்றல் சூரிய பகவானுக்கே உண்டு. சூரியபகவானின் அருள்பார்வையை முழுவதுமாக பெற பொங்கல் பண்டிகை அன்று, சூரியனை வணங்கினால் வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வழி வகுக்கும். மழை, பனி, வெப்பம் இவை அனைத்தும் சூரியபகவானின் சஞ்சாரத்தால்தான் உண்டாகுகிறது என்கிறது சாஸ்திரம். அதுபோல சிவன், விஷ்ணு, சக்திதேவி, இவர்களுக்கு வலது கண்ணாக சூரியபகவான் இருக்கிறார் என்கிறது புராணம்.

ஒம்என்ற சக்தி வாய்ந்த பிரணவ மந்திரத்திலிருந்து உருவானவர் சூரியபகவான் என்கிறது மார்க்கண்டேய புராணம். சூரியபகவானை வணங்கினால் பித்ருதோஷம் நீங்கும். தேவர்களின் ஆசி கிடைக்கும். விரோதம் மறையும்.

சூரிய பகவான்

பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானுக்கு பூஜை செய்து வழிபட்டால் பல நன்மைகள் ஏற்படும். நம்மை காக்கவே சூரியபகவான் எந்நேரமும் காத்திருக்கிறார். அதனால்தான் தினமும் நாள் தவறாமல் சரியான நேரத்தில் வானத்தில் ஆஜராகி விடுகிறார்.

முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்பவருக்கு தொழு நோய் ஏற்பட்டது. இறைவனை வணங்கியும் நோய் நீங்கவில்லை. “செய்த பாவம் அனுபவிக்க வேண்டும், அது உன் விதி. என்று கூறிவிட்டார் பிரம்மதேவன். தன் நோய் குணமடைய வரம் வேண்டி, நவகிரகங்களை நினைத்து வழிபட்டார் காலவ முனிவர்.

நவகிரகங்கள் காலவ முனிவருக்கு உதவ முன் வந்தனர். இதில் முனிவரின் பக்தியை பாராட்டி, முனிவரின் முன்ஜென்ம விதியின்படி அனுபவிக்க வேண்டிய பாவங்களை போக்கி, முனிவரை பரிபூரணமாக குணப்படுத்தினார் நவகிரகங்களின் தலைவரான சூரிய பகவான்.

அதனால் பிரம்மதேவனின் சாபத்திற்கு ஆளானார் சூரியபகவான். தான் கஷ்டபட்டாலும், தன்னை வணங்கும் பக்தர்கள் கஷ்டப்படக்கூடது என்ற உயர்ந்த எண்ணத்தில் தோஷங்களையும் கர்மாக்களை நீக்கி, நல்வாழ்வு தர சூரியபகவான் எந்நேரமும் நமக்கு அருள்புரிய காத்திருக்கிறார். அப்படிபட்ட உயர்ந்த குணம் கொண்ட சூரியபகவானை வணங்கி, நன்றி தெரிவிக்கும் நாள்தான் பொங்கல் திருநாள்.

இந்த நன்னாளில் நல்லநேரம் பார்த்து, பொங்கல் பானையிலோ அல்லது குக்கரிலோ பொங்கல் செய்ய வேண்டும். பிறகு வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்கும்போது, 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும்.

சூரியபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வணங்கினால் இன்னும் சிறப்பு. இப்படி முறையாக மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாடி, சூரிய பகவானின் கருணை பார்வையை பெற்று பல்லாண்டு பல்லாண்டு தலைமறை தலைமறையாக மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

மாட்டு பொங்கல்

பொங்கல் திருநாள் அன்று செய்து வைத்திருந்த வெள்ளை சாதத்தையும், சர்க்கரை பொங்களையும் சமைத்தவுடன், அதை பத்திரமாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து, மறுநாள் மாட்டு பொங்கள் அன்று பூஜை செய்ய வேண்டும்.

மாட்டு பொங்கல் அன்று கனு பூஜையின் சிறப்புகளை பற்றி இப்போது பார்ப்போம்.

வருடம் முழுவதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், போட்டதை தின்று விட்டு உழைக்கும் அப்பாவி குணம் படைத்த ஜீவராசிதான் மாடு. அதனால்தான்பாழாய் போனது பசு வாயில்என்பார்கள். மாட்டுபொங்கல் அன்று, மாட்டை நன்றாக குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, அதன் காலில் சலங்கை மாட்டி அழகுபடுத்துவார்கள்.

அத்துடன் மாடுகளுக்கு பூஜை செய்து, அதன் கழுத்தில் மாலைபோட்டு, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்து பிறகு, பசுமாடு அணிந்திருந்த மலர் மாலையை வீட்டின் தலைவாசலில் கட்டினால், அந்த வீட்டில் இருக்கும் தோஷங்கள் நீங்கும். சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கும்.

மாட்டுபொங்கல் அன்று கன்னி பெண்கள், சுமங்கலி பெண்களிடம் இருந்து, பொங்கல் பானையில் கட்டியிருந்த மஞ்சலை வாங்கி, அந்த மஞ்சளை அரைத்து தினமும் பூசி வந்தால், அந்த மஞ்சள் கரைவதற்குள் அந்த கன்னி பெண்ணுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

அத்துடன், அந்த காலத்தில் பெரியவர்களின் அறிவுரைபடி பெண்கள் கீழ்கண்ட பாடலை பாடியபடி மஞ்சல் அரைத்து பூசுவார்களாம்.

அந்த பாடல்….
மக்களைப் பெற்று, மனையைக் கட்டி
மக்கள் வயிற்றிலே பேரன்பிறந்து,
பேரன் வயிற்றிலே பிள்ளையைப் பார்த்து,
கொட்டில் நிறையப் பசுமாடும்,
பெட்டி நிறைப் பூஷணமுமாக,
தழையத்தழைய தாலிகட்டி
புருஷனோடு பூவும், பொட்டுமாக
நூறாண்டு நோய் நொடி இல்லாமல் வாழணும்
என்ற இந்த பாடலை பெண்கள் பாடியபடி மஞ்சல் பூசிக்கொண்டால், இந்த பாடலில் இருக்கும் நல்ல சொல்லுக்கு ஏற்ற வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

மாட்டு பொங்கல் அன்று, தோட்டத்திலோ அல்லது மாடியிலோ ஒரு இடத்தை சுத்தமாக பெருக்கி கோலம் போட்டு, அந்த இடத்தில் வாழை இலை போட்டு, அந்த வாழையிலையில் பொங்கல் திருநாள் அன்று எடுத்து வைத்திருந்த சர்க்கரை பொங்கலை உருண்டையாக செய்து கொண்டு, தனியாக வைத்திருக்க வேண்டும்.

பிறகு பொங்கல் திருநாள் அன்று எடுத்து வைத்திருந்த வெள்ளை சாதத்தை மூன்று பங்காக பிரித்து, முதல் பங்கில் தயிர் சாதமும், இரண்டாவது பங்கில் மஞ்சள்பொடி தூவிய மஞ்சள் சாதமும், மூன்றாவது பங்கில் குங்குமம் கலந்த சிவப்பு சாதமும் செய்ய வேண்டும்.

அந்த சாதங்களை தனி தனியாக 5 அல்லது, 7 அல்லது, 9 அல்லது, 11 எண்ணிக்கை கொண்ட நெல்லிகனி அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும். அந்த உருண்டைகளை வாழையிலையில் வைக்கும் போது, “காக்காய் பிடி வைத்தேன், கனுப்பிடி வைத்தேன். காக்கை கூட்டம் போல எங்கள் குடும்பமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்று கூறிகொண்டே வைத்து, அத்துடன் கரும்புதுண்டு, மஞ்சள்கொத்து, வெற்றிலை பாக்கு, பூ வைத்து சூரியபகவானை மனதால் நினைத்தும், குலதெய்வத்தையும், இஷ்டதெய்வத்தையும் வணங்கி பூஜை செய்ய வேண்டும்.

சகோதரர்கள் தன் சகோதரிகளுக்கு

இந்த பூஜையின் சிறப்பு என்னவென்றால், பெண்கள் தங்களின்சகோதரர்கள் தங்களுடன் ஒற்றுமையாகவும், தன் மேல் பாசமாகவும் இருக்க வேண்டும், அத்துடன் அவர்களும் சுபிக்ஷமாக குடும்பத்தோடு இருக்க வேண்டும்என்று இறைவனிடம் மாட்டு பொங்கல் தினத்தில் இப்படி கனுபிடி வைத்து கனு பூஜை செய்வார்கள்.

இந்த கானு பொங்கல் பூஜை செய்யும் வழக்கம் இருப்பவர்கள் மட்டும் செய்தால் போதும். அல்லது குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம், கனு பூஜை செய்யலாமா? என்ற கேட்டு செய்யலாம். குடும்ப வழக்கம் இல்லாத பூஜைமுறைகளை கடைபிடிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.

பொங்கல் அன்று சகோதரர்கள் தன் சகோதரிகளுக்கு பரிசுகளை தருவார்கள். சகோதரர் தரும் பரிசுக்கு கிராமபுறங்களில் இன்றும் மதிப்பு இருக்கிறது. பிறந்த வீட்டில் சகோதரன் தருகிற பரிசில்தான் புகுந்த வீட்டில் அந்த பெண்ணுக்கு கௌரவம் தருகிறது. அதனால்தான் எந்த நாட்களிலும் உதவி செய்யாத சகோதரனும், பொங்கல் திருநாளில் தன் சகோதரிக்கு பொங்கல் பரிசு தருவதை மட்டும் நிறுத்த மாட்டார்கள்.

குற்றம் பார்கின் சுற்றம் இல்லை என்பார்கள். எந்த விஷயத்தையும் பெரிதுப்படுத்தாமல் அமைதியாக இருந்து மறப்போம்மன்னிப்போம் என்ற கொள்கையை கடைபிடித்து, உறவினர்களிடத்தில் கசப்பான அனுபவங்கள் இருந்தால், தித்திப்பான சர்க்கரை பொங்கலை பரிமாறி கொண்டு நல்லுறவை கட்டிகாக்கவேண்டும்.

அதனால்தான் உழவர் திருநாள் அன்று நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்து, அவர்களுடன் சுற்றுலா போன்ற பொழுதுபோக்கான இடங்களுக்கு சென்று, தங்களுடைய மகிழ்ச்சிகளை வெளிப்படுத்துவார்கள். இதற்கு காரணம், பார்க்காத பயிரும், கேட்காத கடனும் பாழாகிவிடும் என்பது போல், வருடம் முழுவதும் உறவினர்களையும்நண்பர்களையும் சந்திக்காமல் இருந்தால், அவர்களின் நினைவுகள் காலத்தால் மறக்கப்படும்.

அப்படி அவர்களை மறக்காமல் இருக்கவே இதுபோல பண்டிகை நாட்கள் வருகிறது. இப்படிபட்ட பண்டிகை திருநாட்களில் அவர்களுடன் கொண்டாடி, நம்முடைய மகிழ்ச்சிகளையும் பேசி மகிழ்ந்தால், அந்த மகிழ்ச்சியான நாள் வருடம் முழுவதும் பசுமையாக நிலைத்திருக்கும்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கேற்ப, பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடி, பூஜை செய்து எல்லா யோகங்களையும் பெற்று, சிறப்பு பெறுவோம்.




Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளையும், சந்தேகங்களையும் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி : pariharamniranjana@bhakthiplanet.com

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel


Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here 

Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

 சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும் 






For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com





© 2017 bhakthiplanet.com  All Rights Reserved