Written by Niranjana
நாம் செய்யும் நற்காரியங்களை தொடங்கி வைக்க வேண்டும் என்றால், அதற்கு முதலில் நாம் கைராசிகாரர்களின் கைகளால் தொடங்கி வைக்க வேண்டும் என்று விரும்புவோம். பொதுவாக பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க, பெற்றோர்களின் கைகளால் எதை வாங்கினாலும் விருத்தியடையும்.
ஆனால்
மற்றவர்களின் கைகளால் நல்ல காரியம்
தொடங்க வேண்டும் என்றால், அவர்கள் கைராசிகாரர்களாக இருக்க
வேண்டும் என்று சிலர் விரும்புவார்கள்.
கை
இராசி என்பது உண்மையா? அல்லது
அவரவர்களின் தலையெழுத்தபடிதான் அமையுமா? என்றால், தலையெழுத்து நன்றாக இருந்தால்தான் கைராசிகாரர்கள்
நம்முடன் இருப்பார்கள் என்கிறது புராணம்.
அதைபற்றி
தெரிந்துகொண்டால்தான் கைராசியின் உண்மையை பற்றி அறியமுடியும்.
ஸ்ரீஇராமர்,
சீதையை மீட்க இலங்கைக்கு செல்ல
வேண்டும் என்றால் அதற்கு கடலில்
பாலம் அமைக்க வேண்டும். பலமுறை
முயற்சித்தும் பாலம் அமைக்க முடியாமல்
திணறினார்கள் ஸ்ரீஇராமரும் – வானவர்களும்.
அப்போது
கோபம் கொண்ட இராமர், “கடலை
வற்ற செய்கிறேன்.” என்று கோபமாக கூறினார்.
இதை கேட்ட சமுத்திரராஜன், இராமரின்
முன்தோன்றி, “வானார வீரர்களில் ஒருவனாக
நளன் என்பவன் இருக்கிறான். இவன்
விஸ்வகர்மாவின் மகன். இந்த நளன்
ஒருநாள், விளையாட்டாக முனிவர் ஒருவர் பூஜிக்க
வைத்திருந்த சாளக்கிராமத்தை கங்கையில் போட்டுவிட்டான். இதனால் கோபம் அடைந்த
முனிவர், “இனி உன் கைகளால்
போடும் எந்த பொருட்களும் தண்ணீரில்
மூழ்காமல் மிதக்கும்” என்று நளனை சபித்துவிட்டார்.
அதனால் நளனின் கைகளால் போடும்
பாறைகளும் மிதக்குமே தவிர மூழ்காது என்ற
இரகசியத்தை இராமரிடம் கூறினார் சமுத்திரராஜன்.
இதன்
பிறகு நளன் கைகளால் அங்கிருந்த
பாறைகளை எடுத்து கடலில் வீசும்படி
இராமர் உத்தரவிட அவ்வாறு நளன் வீசிய
பாறைகள் கடலில் மூழ்காமல் மிதந்தது.
நளனின் கைபட்ட பாறைகள் என்பதால்,
நளனை தொடர்ந்து மற்ற வானர வீரர்கள்
வீசிய பாறைகளும் மிதந்து, “இராமர் பாலம்” அமைக்கப்பட்டது.
அந்த மிதக்கும் பாறைகளே “பவளப்பாறை” என அழைக்கப்படுகிறது.
இப்படி
ஒவ்வொருவருக்கும் ஒரு கைராசி இருக்கிறது.
அவர்களின் கைகளால் மண்ணை தொட்டாலும்
பொன் ஆகும். அதாவது அந்த
காரியம் அற்புதமாக அமையும்.
சிலருக்கு
ஒரு யோகம் இருக்கிறது, அள்ளி
அள்ளி கொடுத்தாலும் அவர்களிடத்தில் இருக்கும் செல்வம் குறையாது.
மகாபாரதத்தில்
இராஜசூய யாகம் செய்ய வேண்டும்
என்று நினைத்தார்கள் பாண்டவர்கள். தர்மரை அந்த யாகத்தில்
அமரும்படியும், யாகத்திற்கு வருபவர்களை வரவேற்பது, உணவு பரிமாறுவது போன்ற
பொறுப்புகள் பீமனுக்கும், நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு சந்தனம் – பன்னீர் கொடுத்து வரவேற்க
வேண்டிய பொறுப்பு அர்ஜுனனுக்கும், விருந்தினருக்கு வெற்றிலை – பாக்கு தரும் பொறுப்பு
நகுல சகோதரர்களுக்கும் தந்தார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.
அதுபோல
துரியோதனனிடம், “நீ யாகத்திற்கு தேவையான
பொருட்களை தர்மனுக்கு எடுத்துக் கொடு” என்றார்.
யாகம்
தொடங்கியது. யாக பொருட்களை குறைத்து,
யாகத்திற்கு தடை ஏற்படுத்த வேண்டும்
என நினைத்த துரியோதனன், யாகப்
பொருட்களை மிக வேகமாக அள்ளி
அள்ளி கொடுத்தான். தர்மரும், அந்த யாகப் பொருட்களை
யாககுண்டத்தில் போட்டுக்கொண்டே வந்தார். யாகம் சுபமாக முடிந்தது.
இதை
கண்ட துரியோதனனுக்கு ஆச்சரியம். ”என்ன இது? வேகமாக
அள்ளி அள்ளி கொடுத்தும் யாக
பொருட்கள் குறையவேயில்லையே? என்று குழப்பத்துடன், கிருஷ்ணபரமாத்மாவிடம்
விளக்கம் கேட்டான் துரியோதனன்.
“துரியோதனா…
உனக்கு தர்மனின் கைராசியை பற்றி தெரியாது. தர்மன்
எது செய்தாலும் அது விருத்தியாகும். நீ
ஏதாவது யாகத்திற்கு தடை உண்டாக்குவாய் என
எனக்கு தெரியும். அதனால்தான் கைராசிகாரனான தர்மனை யாகத்தில் அமர
வைத்தேன்.” என்றார் புன்னகையுடன் ஸ்ரீகிருஷ்ணர்.
இப்படி,
கைராசியை அனுபவத்தில் பலர் உணர்ந்து இருக்கிறார்கள்.
சரி.
நம்முடைய கை, இராசியானதா என
எப்படி அறிய வேண்டும் ? என்பதை
பற்றி தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியம் அது
எளிதும் கூட.
நம்
கைகளால் பத்து செடியின் விதைகளை
மண்ணில் விதைத்தால், அதில் ஐந்து செடியாவது
முளைத்து பூவோ அல்லது காயோ
காய்க்க வேண்டும்.
வீட்டில்
மாவு அரைக்கும்போது நம் கைகளால் மாவை
உப்பு போடாமல் எடுத்து வைத்தாலும்,
மறுநாள் அந்த மாவு புளித்துபோனால்
இதை கைராசி என்பார்கள் பெரியோர்கள்.
நம்
கைகளால் தொடங்கும் பல காரியங்களில் சில
காரியங்களாவது சிறப்பாக முடிந்தால் நம் கைதான் இராசியான
கை.
ஒருவேலை
கைராசியில்லாமல் இருந்தால் அதற்காக கையை மாற்றிக்கொள்ளவா
முடியும்?
நம்
கை, ராசியான கை என்று
மற்றவர்கள் புகழ என்ன செய்ய
வேண்டும்.?
அதற்குதான்
பெரியவர்கள் எளிய வழியை நமக்கு
சொல்லி தந்து இருக்கிறார்கள்.
காலையில்
எழுந்தவுடன் இரண்டு கைகளையும் சேர்த்து
வைத்து உள்ளங்கையை பார்க்க வேண்டும்.
நம்
கையின் நுனியில் திருமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில்
கோவிந்தனும் இருப்பதாகப் சாஸ்திரம் சொல்கிறது.
திருமகளே,
இந்த நாள் முழுவதும் எனக்கு
நீ அருள் செய்ய வேண்டும்.
கலைமகளே,
என் அறிவை விரிவுபடுத்தி காக்க
வேண்டும்.
கோவிந்தா,
நீ என்றும் எனக்கு துணை
நின்று கவலைகளை போக்க வேண்டும்.
இப்படி
தினமும் காலையில் எழுந்தவுடன் நம் உள்ளங்கையை பார்த்து
பிராத்தனை செய்வதால், நம் உடலே தெய்வ
சக்தி நிறைந்த ஆலயமாக மாறும்.
நம்முடைய கையும் இராசியான கையாக
மாறும். நாமும் கைராசிகாரர்கள்தான் என்பதை
மற்றவர்கள் உணர்வார்கள். அத்துடன் நாம் தொடங்கும் அனைத்து
நல்ல காரியங்களும் தடையில்லாமல் இறைவனின் அருளாசியால் சுபமாக நடக்கும்.
Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here
Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here
2016 New Year Rasi Palangal &Pariharam All Rasi Palan
Click Here
சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும்
சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும்