Written by
Niranjana
நாம்
இருக்கும் பூமியிலிருந்து எங்கோ இருக்கின்ற கிரகங்களால்
இந்த பூமியில் வாழ்கின்ற மனிதர்களுக்கு எவ்வாறு ஏற்ற-தாழ்வுகளை
உண்டாக்கும்? என்ற கேள்வி பரவலாக
இருக்கிறது.
கிரகங்கள்
மனிதனை பாதிக்காது. அவரவர் உழைப்பும் புத்திசாலித்தனமும்தான்
வெற்றி-தோல்விகளுக்கு காரணம் என்பவர்கள் உள்ளனர்.
சரிதான். ஆனால் அதற்காக கிரகங்களால்
பூமிக்கோ அல்லது பூமியின் வாழ்கின்ற
மனிதர்கள் மற்றும் பிற ஜீவன்களுக்கோ
தாக்கமே இருக்காது என்பது சரியல்ல.
அமாவாசை,
பௌர்ணமி போன்ற நாட்களில், கடலின்
அலைகள் சற்று வேகமாக இருக்கும்.
அத்துடன் இந்த நாட்களில் மனநல
பாதிப்படைந்தவர்களையும், உடல்நலம் சரியில்லாதவர்களையும் மேலும் சற்று பாதிப்பு
அதிகரிக்கும் என்று விஞ்ஞான மருத்துவம்
ஒப்புக்கொள்கிறது. இது, கிரகங்களால் மனிதனுக்கு
தாக்கம் இருக்கிறது என்கிற மெய்ஞான கருத்தை
ஏற்றுக்கொள்கிறது என்பதே உண்மையாகும்.
சனிகிரகமானது,
கலிலியோ கலிலி டெலஸ்கோப் மூலம்
பார்த்ததில், “ராட்சஸ காதுகள் முளைத்தது
போல் ஒரு கிரகம்” இருக்கிறது
என்றார். சனிகிரகம் என்று பெயர் வைப்பதற்கு
முன்பு, இக்கிரகத்தை “பேய்கிரகம்“ என்று கூட மேலைநாட்டு
ஆராய்ச்சியாளர்கள் அழைத்தார்கள். அத்துடன் சனியை வாயு கிரகம்
என்றுக்கூட சொல்கிறது விஞ்ஞானம்.
இன்று,
நமது சனிஸ்வர பகவானின் அதிசய
செயலை கண்டு, அமெரிக்காவின் நாசா
விஞ்ஞானிகளே சனிபகவானின் சக்தியை உணர்ந்துவிட்டார்கள்.
நாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்
நாசா
விஞ்ஞானிகள் பல செயற்கை கோள்களை
விண்வெளிக்கு அனுப்பி வருகிறார்கள். அதுபோன்ற
ஒரு நாசாவின் செயற்கை கோள், “திருநள்ளாறு
அருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர்” கோவிலுக்கு நேர் மேலே உள்ள
வான்பகுதியை கடக்கும் போது, மூன்று வினாடிகள்
ஸ்தம்பித்துவிட்டு திணறி, அந்த மூன்று
வினாடிகளுக்கு பிறகு மீண்டும் தன்
வழக்கமான செயல்பாட்டை செய்கிறது. இருந்தாலும் செயற்கை கோளுக்கு எந்தவித
பழுதும் ஏற்படுவதில்லை. அதை அறிந்த விஞ்ஞானிகள்,
எதனால் இதுபோல் சம்பவம் நடக்கிறது?
என்று ஆராய்ந்தபோது,
சனிகிரகத்தில்
இருந்து, கண்களுக்கு தெரியாத “கருநீலக்கதிர்கள்” திருநள்ளாறு கோவில் மீது விழுகிறது.
அதுவும் இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை
ஏற்படும் சனிபெயர்ச்சியன்று, கருநீலக்கதிர்களின் அடர்த்தி 45நாட்கள்வரை அதிகமாக இருக்கிறது. மனிதனுக்கு
அப்பாற்பட்ட – மனித சக்தி மிஞ்சிய
ஒரு சக்தி உண்டு என்பதை
உணர்ந்து, திருநள்ளாறு வந்த நாசா விஞ்ஞானிகள்,
சனி பகவானை வணங்கினார்கள்.
எல்லா
கிரகங்களுக்கும் சக்தி இருக்கிறது. அதுவும்
சனிபகவானுக்கு அதிகமாகவே ஆற்றல் இருக்கிறது. அதனால்தான்,
“சனியை போல் கொடுப்பார் இல்லை,
சனியை போல் கெடுப்பார் இல்லை”
என்றார்கள் நம் இந்தியதிருநாட்டின் மெய்ஞானிகள்.
இன்றைய
மேலைநாட்டு விஞ்ஞானம் வளர்ச்சியடைவதற்கு முன்னதாகவே, நமது பாரததேசத்தில் குறிப்பாக,
தமிழ் ஜோதிட வல்லுனர்கள் – தமிழ்
சித்தர்கள் – ஞானிகள் – மகான்கள் போன்றோர் பஞ்சாங்கத்தை கணித்து, அனைத்து கிரகங்களின் ஆற்றல்
– நிறம் – தூரம் – அதன் அளவு
போன்றவற்றை கணித்தார்கள். அதுவும், சனிபகவான் நீலவர்ணத்திலும், கருமை வர்ணத்திலும் இருப்பார்
என்று நம்மவர்களே சொல்லிவிட்டார்கள்.
காளிபக்தரை ஆட்டுவித்த சனிஸ்வரர்
மகாகாளியின்
பக்தராகவும் செல்லபிள்ளையாகவும் இருந்த விக்கிரமாதித்தனையே ஒரு வேலைக்காரனை போல்
மாற்றிவிட்டார் சனிஸ்வரர் என்றால் நாமெல்லாம் எந்த
மூலைக்கு.
காடாறு
மாதம் நாடாறு மாதம் என்று
இருந்தாலும், யாருக்கும் அடிமையாக இல்லாமல் அரசனாகவே இருந்து வந்தார் விக்கிரமாதித்தன்.
“உன்
ஜாதகப்படி இன்னும் சில நிமிடத்தில்
ஏழரை சனி பிடிக்கப்போகிறது, சனி
பகவானிடம் அன்பாக பேசு. நீ
என்னுடைய பக்தனாக இருந்தாலும், சனிஸ்வரர்
தரும் இன்னல்களில் இருந்து தப்பிக்க முடியாது.
நீ பொறுமையாக அனுபவித்துதான் ஆக வேண்டும்.“ என்றாள்
விக்கிரமாதித்தனின் இஷ்ட தெய்வமான மகாகாளி.
காளிதேவி
கூறியது போல், விக்கிரமாதித்தன் முன் தோன்றினார் சனிபகவான்.
“விக்கிரமாதித்தா… உன் ஜாதக விதிப்படி
ஏழரை ஆண்டுகள் உன்னை ஆட்டுவிக்க வந்திருக்கிறேன்.
நீ இன்றுமுதல் என் பிடியில் மாட்டினாய்“
என்றார்.
விக்கிரமாதித்தன்,
ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரசனாக இருந்தாலும், அவர்
அதிகாரத்தின் கீழ் இருக்கும் மதுராபுரி
சிற்றரசன் மதுரேந்திர ராஜாவிடம் வேலைகாரனாக ஏழரை வருடங்கள் பணிசெய்தார்.
இப்படி
சனிஸ்வரரால் விக்கிரமாதித்தன் மட்டுமல்ல, நளசக்கரவர்த்தியும் அவதிப்பட்டார். பல வருடங்கள் குடும்பத்தைவிட்டு
பிரிந்து, வாழ வழியில்லாமல் குடும்பமே
சிதறி கஷ்டப்பட்டு, பிறகு ஒருநாள் நளனின்
குடும்பம் இணைந்தது. நளன் தன் குடும்பத்தோடு
ஒரு ஆலயத்திற்கு சென்றபோது, அங்கு இருந்த பரத்வாச
முனிவர் நளனிடம்,
“நீ
திருநள்ளாறு செல். அங்கு இருக்கும்
பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கி,
திருநீற்றை அணிந்துக்கொள். உன்னை பிடித்து ஆட்டும்
சனிபகவான் விலகுவார்.“ என்றார். முனிவர் கூறியது போல்
திருநள்ளாறு சென்று, பிரம்ம தீர்த்தத்தில்
நீராடி, தர்ப்பாரண்யேஸ்வரரை வணங்கினார் நளன். தன் கடமை
முடிந்தது என விலகினார் சனிபகவான்.
சனி பிடித்திருந்ததால் உருவம் மாறி, கறுத்து
போயிருந்த நளனின் சரீரம், சனி
பகவான், நளனை விடுதலை செய்த
பிறகு பழைய தேஜசுக்கு திரும்பியது.
சனிஸ்வர
பகவானை சனி பெயர்ச்சி அன்று
மட்டும் வணங்காமல், சனிகிழமைதோறும் சனிஸ்வர பகவானுக்கு நல்லெண்ணை
தீபம் ஏற்றி வணங்க வேண்டும்.
சனிஸ்வரர் பாதிப்பு உள்ளவர்கள், தினமும் காக்கைக்கு கருப்பு
எள் கலந்த சாதத்தை வைக்க
வேண்டும். மாற்றுதிறனானிகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளை
செய்ய வேண்டும்.
சனிகிழமையில்
சனிஸ்வர பகவானுக்கு கருப்பு நிறத்திலோ, நீலநிறத்திலோ
வஸ்திரத்தை அணிவித்தால், அந்த பக்தரின் கௌரவம்
காக்கப்படும். முடிந்த அளவு சனிகிழமையில்
சனி ஓரையில் நல்லெண்னை தீபத்தை
சனிஸ்வர பகவான் முன் ஏற்றினால்,
சனிஸ்வர பகவானின் அருள் கிடைக்கும். அருள்மிகு
சனிஸ்வர பகவானை வணங்கி, அவர்
அருளாசியை பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்.
Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here
Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here
2016 New Year Rasi Palangal &Pariharam All Rasi Palan
Click Here
சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும்
சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும்