Saturday, February 20, 2016

எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?



Written by Niranjana 

ஞாயிற்று கிழமையில் சூரிய பகவானை வணங்கிட வேண்டும். இதனால் என்ன பலன் என்றால்,  நம்மை அறியாமல் செய்த பாவங்கள் ஒழியும். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.

திங்கள் கிழமை சிவபெருமானையும், ஸ்ரீமகாலஷ்மியையும் வணங்க வேண்டும். நல்ல அந்தஸ்து உண்டாகும்.

செவ்வாய் கிழமை முருகப்பெருமானையும்,சக்திதேவியையும் வணங்கினால், நோய்கள் குறையும். விரோதங்கள் ஒழியும். கடன்கள் குறையும்.  இன்னல்கள் மறையும்.

புதன் கிழமை ஸ்ரீமகா விஷ்ணுவை வணங்கினால், நல்ல நண்பர்கள், நல்ல புத்திரர்கள் அமைவார்கள். இல்வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும்.

வியாழ கிழமையில் மகான்களையும், தேவர்களையும் வணங்கினால் இன்னல்கள் மறையும். மனநிம்மதி உண்டாகும். திருமண தடை விலகும். கல்வி மேன்மை பெறும்.

வெள்ளி கிழமையில் உங்களுக்கு தெரிந்த இறைவனின்  மந்திரங்களை உச்சரித்து வணங்கினாலும், வெகு சுலபத்தில் நாம் எடுக்கும் வேலையில் வெற்றி கிட்டும்.

சனிக்கிழமையில் சிவனை வணங்கினால் விரோதிகள் ஒழிவார்கள், உடலில் உள்ள ரோகங்கள் நீங்கும்.



Astrology Consultation
Know Your Complete Horoscope prediction
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India 
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com 











© 2016www.bhakthiplanet.com All Rights Reserved