மகிஷாசுரனிடம்
போரிட்டாள் சக்திதேவி. கடுமையான யுத்தமாக அது இருந்தது. அசுரர்களால்
தாக்கு பிடிக்க முடியவில்லை. இதனால்
மாந்தீரிகத்தில் வல்லவனான விசுக்ரனை அனுப்பி பராசக்திக்கு செய்வினை
செய்ய சொன்னான் பண்டாசுரன். விசுக்ரன், போர்களத்திற்கு சென்று, விக்னயந்திரத்தை தகடில்
வரைந்து, துஷ்டசக்தியின் மந்திரத்தை உச்சரித்து, எவர் கண்ணிலும் படாமல்
அன்னை பராசக்தியின் அரண்மனையில் மறைத்து வைத்தான். இதனால்
சக்திதேவியின் படையினர், பின்தங்கினர். போர்களத்தில் விழுந்தால் மீண்டும் அவர்களால் எழ முடியாதபடி பலவீனம்
அடைந்தார்கள்.
அன்னை
பராசக்திக்கு உதவிய பல ஜீவராசிகள்
உயிர் இழந்தன. எதனால் இப்படி
ஓர் விபரீதம் நடக்கிறது? என்பதை அம்பிகை தன்
தவஞானத்தால் கண்டாள். பண்டாசுரன், விக்னயந்திரத்தில் செய்வினை செய்திருப்பதை அறிந்தாள். செய்வினை தகடை தேட சொன்னாள்.
பலர் தேடியும் அந்த யந்திரம் கிடைக்கவில்லை.
கடைசியாக விநாயகப் பெருமானிடம் அந்த யந்திரத்தை தேடி
எடுக்கும் பொறுப்பை ஒப்படைத்தாள் அம்பிகை.