Monday, August 31, 2015

தீய சகுனங்களை எதிர்கொண்ட திண்ணன் | அறுபத்து மூவர் வரலாறு



அறுபத்து மூவர் வரலாறு
பகுதி 18

WRITTEN BY NIRANJANA
மறுநாள் சூரியன் மெல்ல கிழக்கில் எட்டி பார்த்து, பின் பிராகசித்து எழுந்தது. உணவுக்காக வேட்டைக்கு சென்றான் திண்ணன். திண்ணன் சென்ற சில மணி நேரத்தில் சிவகோச்சாரியார் வழக்கம்போல் திருகாளத்தி மலைக்கு வந்தார். சிவலிங்கத்தின் அருகே மாமிசத்தை கண்டார். “எவனோ வனவேடன் மாமிசத்தை படைக்கிறானே? இது என்ன கொடுமை?என்று மனம் வருந்தினார். பொதுவாக, நம் நாட்டுக்கு என ஒரு பழக்கம் உண்டுபக்கத்து நாட்டுக்கு என்று ஒரு பழக்க வழக்கம் இருக்கும். இவற்றில் எது சரிஎது தவறு? என்று அந்த நாட்டவர்க்கு பக்கத்து நாட்டவரின் சட்டம் தெரியாது. அதுபோல்தான் திண்ணனை பொறுத்தவரை, தாம் செய்வதே சரி என்று நினைத்தான்.

ஆனால் சிவகோச்சாரியாரோ, ஆச்சாரத்தை அனுசரித்து வாழ்பவர் அல்லவா? அதனால் மாமிச படையலை அபச்சாரமாக கருதினார்.

ஈஸ்வரா.. .தினமும் எவனோ ஒரு வனவேடன் உன் சந்நதியில் மாமிசத்தை வைத்து விட்டு செல்கிறானே.. அவனை தண்டிக்கமாட்டியா?என்று கதறினார். மனஅமுத்தத்துடனும், மிகுந்த மனபாரத்துடனும் தன் இல்லத்திற்கு திரும்பினார் சிவகோச்சாரியார்.
அன்றிரவுமேலும் படிக்க 

தீய சகுனங்களை எதிர்கொண்ட திண்ணன் | அறுபத்து மூவர் வரலாறுபகுதி 18