Monday, August 31, 2015

உலகின் முதல் கண் தானம் | அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 19



அறுபத்து மூவர் வரலாறு
பகுதி – 19
Written by Niranjana
ஒரு சில நிமிடங்களில், வில் அம்பினால் காயம்பட்டால் வனவேடர்கள் வழக்கமாக மருந்தாக பயன்படுத்தும் அரிய வகை மூலிகையை பறிந்துக்கொண்டு ஓடி வந்தான்.

அதனை தம் இரு கரங்களால் கசக்கி ரத்தம் வடியும் சுடர்க்கண்ணனான ஈசனின் கண்ணில் ஊற்றினான். அவன் முயற்சிக்கு மரியாதை தரும் விதமாக சிவபெருமான் தம் கண்ணில் இரத்தம் வடிவதை ஒரு சில விநாடிகள் மட்டும் திண்ணன் மகிழ்வதற்காக நிறுத்திக்கொண்டார். ஆனால் மீண்டும் இரத்தம் சொட்ட ஆரம்பித்தது. முன்னிலும் அதிகமாக.

இரத்தம் நின்றிருந்த அந்த ஒரு சில விநாடிகள் நிம்மதியடைந்த திண்ணன் மீண்டும் இரத்தம் வருவதை கண்டு வேறு வழியை யோசித்தான்.

முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்று தீர்மானித்து, யவராலும் யூகிக்க முடியாத ஒரு மருந்தை கண்டுபிடித்தான்…மேலும் படிக்க 

தீய சகுனங்களை எதிர்கொண்ட திண்ணன் | அறுபத்து மூவர் வரலாறு



அறுபத்து மூவர் வரலாறு
பகுதி 18

WRITTEN BY NIRANJANA
மறுநாள் சூரியன் மெல்ல கிழக்கில் எட்டி பார்த்து, பின் பிராகசித்து எழுந்தது. உணவுக்காக வேட்டைக்கு சென்றான் திண்ணன். திண்ணன் சென்ற சில மணி நேரத்தில் சிவகோச்சாரியார் வழக்கம்போல் திருகாளத்தி மலைக்கு வந்தார். சிவலிங்கத்தின் அருகே மாமிசத்தை கண்டார். “எவனோ வனவேடன் மாமிசத்தை படைக்கிறானே? இது என்ன கொடுமை?என்று மனம் வருந்தினார். பொதுவாக, நம் நாட்டுக்கு என ஒரு பழக்கம் உண்டுபக்கத்து நாட்டுக்கு என்று ஒரு பழக்க வழக்கம் இருக்கும். இவற்றில் எது சரிஎது தவறு? என்று அந்த நாட்டவர்க்கு பக்கத்து நாட்டவரின் சட்டம் தெரியாது. அதுபோல்தான் திண்ணனை பொறுத்தவரை, தாம் செய்வதே சரி என்று நினைத்தான்.

ஆனால் சிவகோச்சாரியாரோ, ஆச்சாரத்தை அனுசரித்து வாழ்பவர் அல்லவா? அதனால் மாமிச படையலை அபச்சாரமாக கருதினார்.

ஈஸ்வரா.. .தினமும் எவனோ ஒரு வனவேடன் உன் சந்நதியில் மாமிசத்தை வைத்து விட்டு செல்கிறானே.. அவனை தண்டிக்கமாட்டியா?என்று கதறினார். மனஅமுத்தத்துடனும், மிகுந்த மனபாரத்துடனும் தன் இல்லத்திற்கு திரும்பினார் சிவகோச்சாரியார்.
அன்றிரவுமேலும் படிக்க 

தீய சகுனங்களை எதிர்கொண்ட திண்ணன் | அறுபத்து மூவர் வரலாறுபகுதி 18 

Sunday, August 30, 2015

திண்ணனின் வாழ்வை மாற்றிய ஆறாம் நாள். கண்ணப்ப நாயனார் வரலாறு!



Written by Niranjana
அறுபத்து மூவர் வரலாறு
பகுதி – 17
முன் பகுதியில் திண்ணனுக்காக சிவகோசாரியரிடம் சிவபெருமான் வாதாடினார் என்றேன் அல்லவா அதை பற்றி விரிவாக இந்த பகுதியில் பார்ப்போம்

திண்ணன் மலை மேல் இருக்கும் குடுமி சாமி மேல் பக்தி வைக்கவில்லை, ஒரு பிள்ளை மீது பெற்றோர் பாசம் வைப்பதை விடவும் மேலான பாசத்தை கொண்டான் திண்ணன். இரவு முழுவதும் உறங்காமல் கண் விழித்து சிவபெருமானை காத்தான் திண்ணன்.

உலகத்தையே காக்கும் சிவன். ஆனால் திண்ணனை பொறுத்தவரை எந்நாட்டவருக்கும் இறைவனான ஈசனை திண்ணன்தான் பத்திரமாக காக்கிறான். ஒரு சிறு எறும்பு கூட சிவலிங்கத்தின் அருகில் செல்லாதவாறு காத்து வந்தான்.

ஸ்ரீராமர் காட்டில் இருக்கும் போது, ஒரு விநாடி கூட உறங்காமல் லட்சுமணன் கண்ணும் கருத்துமாக துணை இருந்ததை போலவே இருந்தான் திண்ணன்.
பொழுது விடிந்தது. தனக்காகவும் தன் குஞ்சுகளுக்காகவும் பறவைகள் உணவுக்காக தமது கூடுகளை விட்டு பறந்தது. ஆனால் திண்ணனோ தனக்காக இல்லாமல் குடுமி சாமிக்காக வேட்டைக்கு சென்றான்.

அத்திருகாளாத்தியின் பக்கத்திலுள்ள காட்டில் வேட்டைக்கு சென்றான். அங்கேமேலும் படிக்க 

Monday, August 24, 2015

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கட்டுரை


05.09.2015 அன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி!
கிருஷ்ணபரமாத்மாவை நம்பினால் நிச்சயம் வெற்றிதான். மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும் என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான்.

கிருஷ்ணபரமாத்மா பாண்டவர்களுக்கு மட்டுமல்ல, எவரும் மனதால் நினைத்தாலேபோதும், மனித உருவத்தில் நமக்கும் உதவிட பகவான் வருவார்.

இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த மன்னன் இந்திரத்யும்னன். இவருக்கு பிள்ளைபாக்கியம் இல்லாததால் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்ந்தார். அந்த வளர்ப்பு மகனின் பெயர் யக்ஞ நாராயணன். அவர் தன் தந்தையிடம், அசரீரி தன்னிடம் ஒருமேலும் படிக்க