Saturday, February 8, 2014

பாட்டி வைத்தியம் பகுதி – 3

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் நல்ல அக்மார்க் தேனில் ஒரு சொட்டு நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால், தேன் தடவுவதால் நாக்கு புரண்டு சீக்கிரம் பேச்சு வரும்.

குழந்தை தினமும் இரண்டு, மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்லாத உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு கசக்கிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும்.

தினமும் குடிக்க காலையும், மாலையும் இரண்டிரண்டு சங்கு வெந்நீர் கொடுங்கள். குழந்தையின் உடம்பு கலகலவென்று இருக்கும்.

குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து குளிப்பாட்டாத நாட்களில் வெந்நீரில் யுடிகோலோன் போட்டு குழந்தையைத் துடைத்து பவுடர் போட்டு சுத்தமாக வைத்துக் கொள்ளவேண்டும்.



Monday, February 3, 2014

பாட்டி வைத்தியம் பகுதி – 2



* மாதுளம் பழத்தை பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வர உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும்

* பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

* வயிற்று வலி குணமாக சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் கலந்து சாப்பிட குணமாகும்

* முட்டை கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகச்சுருக்கம் மறையும்.
* அத்திப் பழத்தை உலர்த்தி பொடி செய்து 1 ஸ்பூன் காலை, மாலை பாலில் உட்கொண்டு வந்தால் இதயம் வலுவாகும். இரத்தம் ஊறும்

*
முருங்கை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு வரா மல் தடுக்கலாம்.

*
முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தசோகை குணமாகும்.

*
மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் காய வைத்து தினமும் ஒரு உருண்டையை தேங்காய் எண்ணெயில் கரைத்து தலையில் தடவி வந்தால் முடிவள ரும்.