23.08.2018 அன்று என் மகன் ஜெ.சுவாமிநாதனுக்கு
வடபழனி முருகன் கோவிலில் காது
குத்துதல் விழா இனிதே நடந்தது…
Sunday, August 26, 2018
Saturday, August 11, 2018
காஞ்சி மகாபெரியவர் தரிசிக்க விரும்பியது…
Written
by Niranjana
காஞ்சி
மகாபெரியவர் சித்தி அடைவதற்கு ஒரு
வருடத்திற்கு முன்னர் உடல்நலம் இல்லாமல்
இருந்தார். அப்போது ஒருநாள் மாலையில்
தன்னுடைய சீடர்களை அழைத்து, “நான் சிதம்பரத்தில் இருக்கும்
நடராஜப் பெருமானை தரிசிக்க வேண்டும். நடராஜரின் பூஜையில் அணிவிக்கப்படும் குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும்” என்றார்.
சிதம்பரத்தில்
நடராஜப் பெருமான், தனது இடது பாதத்தை
வளைந்து தூக்கி திருநடனம் ஆடியதற்கு
குஞ்சிதபாதம் என்று பெயர். இந்த
தரிசனத்தை கண்டாலே தீராத வியாதியும்
நீங்கும். பல மூலிகைகளால் செய்யப்பட்ட
ஒரு பொருளை ந்டராஜரின் தூக்கிய
திருவடியில் அணிவிக்கப்படும்போது, அந்த மூலிகை வேர்களுக்கு
குஞ்சிதபாதம் என்றும் பெயர் இருக்கிறது.
மகாபெரியவர்,
குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும் என்று சொன்னார்.. இதை
கேட்ட சீடர்கள், மகாபெரியவருக்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், எப்படி பெரியவரை சிதம்பரத்திற்கு
அழைத்து செல்வது? என்று சிந்தித்தார்கள்.
குஞ்சிதபாதத்தை
தரிசித்தால் தமக்கு உடல்நலம் சரியாகும்
என்று நினைத்து மகாபெரியவர் அப்படி சொல்லவில்லை. மோட்சம்
கிட்ட வேண்டும் என்றுதான் மகான்கள் விரும்புவார்கள். அவர்களின் உண்மையான எண்ணத்தை புரிந்துக் கொண்ட இறைவன் அமைதியாக
இருப்பாரா? உடனே தன் பிள்ளை
விரும்புவதை நிறைவேற்றுவார் அல்லவா.
ஆம்,
அப்படிதான் நடந்தது. மறுநாள் சூரியனை விட
வேகமாக செயலில் இறங்கினான் இறைவன்.
மகாபெரியவரை தரிசிக்க சிதம்பரத்தில் இருந்து குஞ்சிதபாதத்துடன் காஞ்சிபுரம்
சங்கரமடம் வந்தார்கள் சிதம்பர நடராஜப் பெருமானுக்கு
சேவை செய்யும் சில தீட்சிதர்கள்.
“நாங்கள்
பெரியவரை தரிசிக்க வந்தோம். பெரியவருக்காக பிரசாதம் கொண்டுவந்து இருக்கிறோம்.” என்ற கூறி பெரியவரை
தரிசிக்க அனுமதி கேட்டார்கள் இதை
கேட்ட மகாபெரியவரின் சீடர்களுக்கு வார்த்தையே வரவில்லை. “நேற்று இரவுதானே நம்
மகாபெரியவர், நடராஜப்பெருமானின் குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டும் என்றார். இன்று அதிகாலையிலேயே மகாபெரியவரை
தேடி குஞ்சிதபாதத்துடன் தீட்சிதர்களை நடராஜப் பெருமான் அனுப்பி
இருக்கிறாரே.” என்று மெய்சிலிர்த்து போனார்கள்.
மகாபெரியவரிடம்
தீட்சிதர்கள், பிரசாத தட்டில் குஞ்சிதபாதத்தை
வைத்துக்கொடுத்தார்கள். அதை தம் தலையில்
வைத்துக்கொண்டார் மகாபெரியவர்.
மகான்கள்
முக்தி கிடைக்கதான் ஆசைப்படுகிறார்கள். அவர்களின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றகிறார்.
நாம்
சராசரி மனிதர்கள் அல்லவா. நல்ல உடல்நலத்திற்குதான்
அதிக முக்கியதுவம் கொடுக்க வேண்டும். உடல்நலமாக
இருந்தால் எல்லா பொருள் நலமும்
தேடி வரும். சகலமும் நலமாக
அமையும். ஆகவே நாமும் ஒருமுறையாவது
சிதம்பர நடராஜப் பெருமானுக்கு மூலிகைகளால்
தயாரிக்கபடும் குஞ்சிதபாத பிரசாதத்தை தரிசிப்போம். நலமோடும் வளமோடும் வாழ்வோம்.
“ஓம் நமசிவாய”
“தென்னாடுடைய சிவனே போற்றி.
என்னாட்டவர்க்கும்
இறைவா போற்றி.”
திருசிற்றம்பலம்
!
For Astrology Consultation
© 2011-2018 bhakthiplanet.com All
Rights Reserved
Labels:
Spiritual
Sunday, July 8, 2018
அம்மனுக்கு கூழ் படைத்தால் பக்தர்களின் வாழ்க்கை வசந்தமாக மாறும்
Written by NIRANJANA
காரணம்
இல்லாமல் காரியம் நடக்காது. ஒரு
செயல் நடக்கிறது என்றால் அதற்கு நிச்சயம்
ஒரு காரணம் இருக்கும். அதை
அலசி ஆராய்ந்தால் உண்மை தெரியும். ஆடி
மாதம் அம்மனுக்கு கூழ் சமைத்து படைப்பார்கள்.
கூழ் அம்மனுக்கு பிடிக்கும்.
அம்மனுக்கு கூழ் படைக்கும் ஐதீகம் நம் முன்னோர் காலத்தில் இருந்தே உண்டு.
அம்மனுக்கு கூழ் படைக்கும் ஐதீகம் நம் முன்னோர் காலத்தில் இருந்தே உண்டு.
சரி கூழ் எதற்காக படைக்கிறார்கள்? என்ற காரணத்தையும் அறிய வேண்டுமல்லவா.
ஆடி
மாதம் பக்தர்கள் அம்மனை வேண்டி விரதம்
இருந்து குண்டம் இறங்குவார்கள். அதாவது
தீ மிதிப்பார்கள். அப்போது தீ மிதிக்கும்
பக்தர்களின் உடலில் அம்மன் இறங்குவார்.
அந்த பக்தனின் உருவத்தில் அம்மனே தீ மிதிப்பார்.
இதனால்தான் பல அடி தூரம்
கொண்ட தீயில் பக்தர்கள் நடக்கும்போது
அவர்களின் பாதத்திற்கு எந்த தீ கொப்பளங்களும்
ஏற்படுவதில்லை.
ஆடி
மாதத்தில் பக்தர்களின் உருவத்தில் அம்மன் தீ மிதிப்பதால்
அம்மனின் உடல் உஷ்ணமாக இருக்கும்.
அதை தணிக்கவே குளிர்ச்சியான தன்மைகொண்ட கேழ்வரகை அரைத்து, அத்துடன் நொய் அரிசியை கலந்து
கூழ் தயாரித்து அம்மனுக்கு படைக்கும் வழக்கம் உருவானது.
இப்போது
தெரிந்துக்கொண்ட்டீர்களா ஆடி மாதம் அம்மனுக்கு
ஏன் கூழ் வைக்கிறார்கள் என்று.
தன்
பக்தர்கள் ஏழ்மையானவர்களாக இருந்தாலும் அவர்கள் தினமும் சாப்பிடும்
கூழை தனக்கு பிடித்த உணவாக
மாற்றிக்கொண்டாள் அன்னை. அம்மனுக்கு கூழ் படைத்தால் அந்த
பக்தர்களில் வாழ்க்கை வசந்தமாக மாறும்!
For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com
Visit: www.bhakthiplanet.com
© 2011-2018 bhakthiplanet.com All
Rights Reserved
Thursday, July 5, 2018
பள்ளத்தில் இருப்பவர்களை பல்லாக்கில் உட்கார வைக்கும் இராகு-கேது
Sri Durga Devi
upasakar, V.G.Krishnarau.
ஒருவருடைய
ஜாதகத்தில் இராகு – கேது அருமையாக
அமைந்து விட்டால், அந்தஸ்தான வாழ்க்கை தந்து செல்வ சீமானாக்குகிறது.
பண வசதியை தரக்கூடிய தனஸ்தானாதிபதி,
6-8-12-ல் அல்லது நீச்சம் பெற்று
இருந்தாலும் கவலை வேண்டாம்.
தனத்தை
நான் தருகிறேன் என்று இராகு-கேது
மல்லுகட்டிக் கொண்டு முன்னால் வருவார்கள்.
“கேதுவை
போல் கெடுப்பார் இல்லை என்று சொல்பவர்களே…
கேதுவாகிய நான் கெடுப்பதில்லை, கொடுப்பவன்.
அதுவும் அள்ளி கொடுப்பேன்.” என்கிறார்
கேது பகவான்.
அது
எப்படி என பார்ப்போம்.
பாம்பை
பிடித்து யோகத்தை சொல்லு.
சனியை
பிடித்து மாரகத்தை சொல்லு.
என்பது
ஜோதிட பொன்மொழி.
ஒருவரின்
ஜாதகம் பணக்கார ஜாதகமா? கோடீஸ்வர
ஜாதகமா? என்பதை தெரிந்துக்கொள்ள, ஜாதகத்தில்
இராகு – கேதுவின் நிலையை கணித்து பார்க்க
வேண்டும். இராகு – கேது அமர்ந்த
இடத்தின் அதிபதி, லக்கினத்திற்கு 2,4,5,9,10,11-ல் இருந்தாலும், அதனை
குரு பார்த்தாலும் செல்வத்தை வாரி வழங்குகிறார். அதேபோல
இராகுவும் செய்கிறார்.
உதாரணமாக,
ஒருவருக்கு ரிஷப லக்கினமாக அமைந்து,
கன்னியில் கேது, அந்த வீட்டுக்குரியன்
புதன்.
இந்த
புதன், மகரத்தில் அதாவது 9-ல் குருவோடு சேர்ந்திருந்தாலும்,
குரு பார்த்தாலும் அவன் செல்வந்தன். அதுபோல,
கடக லக்கினமாக இருந்து, 8-ல் கேது, அந்த
வீட்டுக்குரியவன் சனி உச்சம் பெற்று
துலாவில் இருந்தாலும் அவர்கள் செல்வந்தர்களே. அதுபோல,
சிம்ம லக்கினமாக இருந்து கன்னியில் கேது,
அந்த வீட்டுக்குரியவன் புதன், 5-ல் இருந்தாலும் தனவான்களே.
அதேபோல்,
குரு – கேது சேர்க்கை, குரு
-இராகு சேர்க்கை ஆகிய இந்த கூட்டணி
கிரகங்களும் அந்த ஜாதகரை செல்வந்தனாக்குகிறது.
என்
அனுபவ ஆராய்ச்சியில், இராகு 1,4,7,10-ல் இருந்து திசை
நடைபெற்றால், யோகத்தையே செய்கிறது. பள்ளத்தில் இருப்பவனை பல்லாக்கில் உட்கார வைக்கிறது. பொதுவாக
கேது, கெடுப்பான் கெடுப்பான் என்று கூறி அலறுவதை
விட, கேது, கொடுப்பான் கொடுப்பான்
என்று கூறுவதே சரியாகும்.
அதாவது,
இராகுவோ கேதுவோ அமர்ந்த இடத்தின்
அதிபதி, ஆட்சி – உச்சம் பெற்றாலும்,
2,4,5,7,10,11-ல் இருந்தாலும் யோகமே செய்யும்.
For Astrology Consultation
Sunday, June 17, 2018
Which horoscope is not suitable for business?
For Astrology Consultation
தொழில் அமையாத ஜாதகம்
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.
ஒரு
ஜாதகத்தில் பதவியை குறிக்கும் இடம்
10-ம்இடமாகும். அதாவது தொழில் துறையை
குறிக்கும் இடம் இது. இந்த
10-ம் இடம் நன்றாக அமைந்தால்தான்
நிரந்தரமான தொழில் அமையும். 10-ம்
இடத்தில் கேது இருந்தால் அதாவது
கேது மட்டும் பத்தாம் இடத்தில்
தனித்து இருந்தால், தொழில் துறைக்கும் உத்தியோகத்திற்கு
தாளம் போட வேண்டும். நல்ல
வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும்.
அப்படி கிடைத்தாலும் அந்த வேலையில் நீடித்து
இருப்பாரா என்றால் சந்தேகம்தான். சோம்பலாக
இருப்பார். எதைப் பற்றியும் கவலை
கொள்ளமாட்டார். சாப்பிடு, தூங்கு இதுவே இப்படிபட்ட
ஜாதகரின் உலகம்.
10-ம்
இடத்தில் கேது அல்லது ராகு
இருந்து அந்த கிரகத்துடன் 6.8.12க்குடையவன்
சேர்ந்த ஜாதகமும் சரியான உத்தியோகத்தை பெறுவது
கஷ்டம்.
For Astrology Consultation
© 2011-2018 bhakthiplanet.com All
Rights Reserved
Tuesday, March 13, 2018
HOW TO CHANGE YOUR DASA-BHUKTHI AS A FAVOUR ? Part 1 -2
உங்கள் ஜாதகப்படி நடக்கும் தசா-புக்தியை சாதகமாக்குவது எப்படி? பகுதி 1
| HOW TO CHANGE YOUR DASA-BHUKTHI AS A FAVOUR ?
உங்கள் ஜாதகப்படி நடக்கும் தசா-புக்தியை சாதகமாக்குவது எப்படி? பகுதி 2
| HOW TO CHANGE YOUR DASA-BHUKTHI AS A FAVOUR ?
5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை| The Fifth House is the House of Wonders https://www.youtube.com/watch?v=8jDCuhBo5P8
செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு| kubera worship will give wealth https://www.youtube.com/watch?v=ExMLdc0hTDc
வாழ்க்கையில் வரும் பிரச்னைகளை ஜெயிப்பவர்கள் யார்? |Who will win the problems of life? https://www.youtube.com/watch?v=ZPt95CcaqJo
அற்புதங்கள் நடத்தும் திருச்செந்தூரான் | Miracles of the Thiruchendur Murugan https://www.youtube.com/watch?v=86zXAGymaZ0
2018 Numerology Predictions | Birth Date 1,10,19,28 | 2018-ம் ஆண்டு எண்கணித பலன்கள் | பிறந்த தேதி – 1,10,19,28 | https://www.youtube.com/watch?v=g5zpkaFNrMU
உடல் பிணியை நீக்கும் பழனி ஆண்டவர் | Lord Palani Murugar will Cure Sickness https://www.youtube.com/watch?v=4_jaFN5WW-E
ஜோதிடம் - சினிமா வசனகர்த்தாவாக வெற்றி பெறுபவர் யார்? | Astrology -Who will become a film dialog writer? https://www.youtube.com/watch?v=xCId0vVYtr4
ஜோதிடம்- டி.வி. காம்பயர் அல்லது ரேடியோ ஜாக்கியாக திகழ்பவர்கள் யார்? | Astrology -Who will become a Radio jockey or TV anchor? https://www.youtube.com/watch?v=r7ldSaVb5E8
ஜோதிடம் - எண்ணங்கள் ஈடேறுமா? |Astrology -Will our thoughts will come true? https://www.youtube.com/watch?v=hPf3VeROJ0k
ஜோதிடம் - தந்திரமாக காரியம் சாதிப்பவர்கள் யார்? | Astrology -Who will tactical fulfill their Task? https://www.youtube.com/watch?v=vCRaWAEqVQ8
ஜோதிடம் - சிறுக சிறுக சேர்த்து சொந்த வீடு வாங்குபவர்கள் யார்?| Astrology -Who will buy the own house from their long term savings? https://www.youtube.com/watch?v=qhtjhTB95w0
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com
Visit: www.bhakthiplanet.com
Labels:
video
Subscribe to:
Posts (Atom)