Monday, August 10, 2015

உன்னத பலன் தரும் நாக பஞ்சமி- நாகதோஷத்தை நீக்கும் நாக வழிபாடு





Written by Niranjana 
19.08.2015 நாக பஞ்சமி

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். பரமபதம் விளையாட்டில் தாயம் போட்டு ஆட்டத்தை ஆரம்பித்தவுடன் எப்படியோ போராடி ஏணியில் ஏறி பாதி கிணற்றை தாண்டுவதை போல விளையாடும்போது, சிறு பாம்பின் கடிபட்டு மறுபடியும் கீழே இறங்குவோம். இன்னும் தொடர்ந்து விளையாடி மேலே முன்னேறி வந்தபோது பெரிய பாம்பிடம் கடிபட்டு மீண்டும் ஆட்டம் தொடங்கிய இடத்திற்கே வந்து விடுவாம்.  

பரமபதம் விளையாட்டிலேயே பாம்பு இப்படி விளையாடுகிறது என்றால், நிஜவாழ்க்கையில் கேட்கவா வேண்டும்? ஒருவரின் வாழ்வில் எப்படி நாகத்தால் தொந்தரவு ஏற்படும்? என்று பலர் கேட்கலாம். அவை நாகதோஷம்காலசர்ப்பதோஷம் என்கிற தோஷங்களாக ஒருவரின் வாழ்வில் விளையாடி பார்க்கிறது.

ஒருவருக்கு நாகதோஷமோ காலசர்ப்ப ஜாதகமாகவோ இருந்தால் இந்த தோஷத்தால் சில தடைகள் ஏற்படுகிறது. அதில் ஒன்று முயற்சிகளில் தடை, திருமண தடை, எந்த ஒரு சின்ன  விஷயத்திம் பெரும் போராட்டம் சந்திக்க வேண்டிய நிலை போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு தெய்வ வழிபாடு ஒன்றுதான். பொதுவாக நாகதோஷத்திற்கும், காளசர்ப்பதேஷத்திற்கும் பரிகார தலம் திருக்காளஹஸ்தி என்பது அனைவருக்கும் தெரியும்.

அத்துடன் திருக்காளஹஸ்திக்கு சென்று பரிகாரம் செய்யும் முன்னோ பின்னோமேலும் படிக்க

உன்னத பலன் தரும் நாக பஞ்சமி- நாகதோஷத்தை நீக்கும் நாக வழிபாடு


கருட பஞ்சமி சிறப்பு கட்டுரை




Written by Niranjana

19.08.2015 அன்று கருட பஞ்சமி 

இறைவனை எப்படி வணங்குகிறோமோ அதுபோல இறைவனுடைய வாகனத்தையும் வணங்க வேண்டும். விஷ்ணு பகவானின் வாகனமான கருடனை வணங்கினால், அவர்களுக்கு திருமாலின் ஆசியும் அனுகிரகமும் கிடைக்கும். ஆம். ஸ்ரீமந் நாராயணனின் எல்லா அவதாரங்களிலும் கருடன், பெருமாளுக்கு உதவியாக இருந்தார்.

ஸ்ரீராமஅவதாரத்தில் மால்யவனுக்கும் ஸ்ரீராமருக்கும் யுத்தம் நடந்தபோதுஸ்ரீராமரின் மீது வெயில்படாமல் இருக்க, கருடபகவான் ஆகாயத்தில் தன்னுடைய  இரண்டு இறக்கைகளையும் விரித்து இராமரின் மீது வெயில்படாமல் காத்தார்.


Monday, August 3, 2015

முருகப்பெருமானுக்கு முல்லை மலர்களை அணிவித்து வணங்கினால் மிகவும் விசேஷமானது! ஆடி கிருத்திகை சிறப்பு கட்டுரை

Written by Niranjana

08.08.2015 அன்று ஆடி கிருத்திகை

சிவகிரிசக்திகிரி என்ற இரண்டு மலைகளை சிவன் அகத்தியரிடம் வழங்கி, “இதை மருதமலையில் வைத்து விடு.“ என்றார்.

குறுமுனியான நான் எப்படி இந்த இரண்டு மலைகளையும் சுமப்பேன்.?“ என்று சந்தேக கேள்வி எழுப்பினார் அகத்தியர்.

பூமியை சமமாக வைத்த நீ, சாதாரண இரண்டு மலையை சுமக்க முடியாதா?. உன்னால் முடியாதது எதுவும் இல்லை அகத்தியா.“ என்று ஈசன் கூறினார்.

பல பூதங்களுக்கு தலைவனான சிவபெருமான், அந்த சிவ பூதங்களை நம்பாமல் தன்னிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் என்றால், இதில் ஏதோ காரணம் இருக்கிறது.“ என்ற சிந்தனையுடன் சிவன் கொடுத்த சிவகிரிசக்திகிரி மலையை சுமந்து வந்து கொண்டு இருந்தார்.  
வரும்வழியில்….மேலும் படிக்க

முருகப்பெருமானுக்கு முல்லை மலர்களை அணிவித்து வணங்கினால் மிகவும் விசேஷமானது! ஆடி கிருத்திகை சிறப்பு கட்டுரை