Thursday, September 19, 2013

கிரகதோஷத்தை நீக்கும் தசாவதார கோவில்

Written by Niranjana

திருச்சி மாவட்டம், கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ளது அருள்மிகு தசாவதாரக் கோயில்.

பெரியவர்களின் சொல்லே பெருமாளின் சொல் 

“பெரியோர்கள் கூறுவது பெருமாள் கூறுவது போல” என்பார்கள். காரணம் அவர்கள், நல்லது-தீயது என பல அனுபவங்களை பெற்று இருப்பார்கள். வெற்றி, தோல்விகளை சந்தித்து இருப்பார்கள். வெற்றிக்கான காரணம் எது?-தோல்விக்கான காரணம் எது என்பதை தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் தங்களின் அனுபவத்தை எடுத்துச் சொல்லி மற்றவர்களை சரியான பாதையில் செல்ல வழி சொல்வார்கள். அதனால்தான் “பெரியவர்களின் சொல், பெருமாளின் சொல்” என்கிறார்கள். ஸ்ரீமந் நாராயண பெருமாள், கிருஷ்ணஅவதரம் மட்டும் எடுத்து மக்களுக்கு அறிவுரை கூறவில்லை. நமக்காகவே-நம் நன்மைக்காகவே அவதாரங்கள் எடுத்து வந்தவர். அதனால் அவருக்கு அனுபவம் ஜாஸ்தி.

“எப்போது உலகத்தில் தர்மம் அழிந்து அதர்மத்தின் கை ஓங்குகிறதோ அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுத்து தர்மத்தை காப்பேன்.” என்பது பகவானின் வாக்கு. பெருமாளின் அவதாரங்கள் பத்து. அதுவே “தசாவதாரம்” என்கிறோம்.

அவை, மச்சவதாரம் – கூர்மா அவதாரம் – வராக அவதாரம் – நரசிம்மா அவதாரம் – வாமன அவதாரம் – பரசுராம அவதாரம் – ராமவதாரம் – பலராம அவதாரம் – ஸ்ரீ கிருஷ்ணா அவதாரம் – கல்கி அவதாரம் ஆகிய பத்து அவதாரங்கள் உள்ளன. இதில் இன்னும் கல்கி அவதாரத்தை பெருமாள் எடுக்கவில்லை. அதாவது, இந்த கலியுகத்தில் தர்மம் இன்னும் அழியவில்லை. அது கொஞ்சமாவது இருக்கிறது.

ஆகவே, பெருமாளின் அவதாரங்கள் உலக மக்களின் நன்மைக்காகவே ஏற்படுகிறது.

கோவில் உருவான கதை  

பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார், நமக்கு பெருமாள் பாசுரங்களை இயற்றி தந்தார். அவர் வாழ்வில் ஒரு சம்பவம். ..மேலும் படிக்க

கிரகதோஷத்தை நீக்கும் தசாவதார கோவில் 

பெருமாள் திருவல்லிகேணிக்கு வந்த வரலாறு!

Written by Niranjana
சென்னைய திருவல்லிக்கேணியில் மெரீனா கடற்கரையிலிருந்து ஒரு கி.மீ தொலைவில் இருக்கிறது பார்த்தசாரதி திருக்கோயில்.

பெருமாள் திருவல்லிகேணிக்கு வந்த வரலாறு

துண்டீரன் என்ற நாட்டில் சுமதி என்ற அரசன் ஆட்சி செய்து வந்தான். இவ்வரசன் பெருமாளின் தீவிர பக்தன். பெருமாள், பாரதப்போரில் தேரோட்டியாகப் பணியாற்றியபோது இருந்த உருவத்தை பார்க்க வேண்டும் என்று ஆவல் அரசனுக்கு ஏற்பட்டது. தன் விருப்பத்தை ஆத்ரேய முனிவரிடம் கூறினார்.

“அரசனே…நீயே சிறந்த விஷ்ணு பக்தன். நீ விரும்பியபடி உனக்கு அவர் காட்சி கொடுக்கமாட்டாரா என்ன? நீ திருவல்லிக்கேணிக்கு செல். செவ்வரல்லி நிறைந்து இருக்கும் பகுதி அது. அதனால் அந்த இடத்தில் நல்ல நறுமனம் வீசும். இப்படி நறுமனம் இருக்கும் இடத்தில்தான் பெருமாள் விரும்பி காட்சி கொடுப்பார். அங்கே நீ சென்று தவம் செய்.” என்றார்.

முனிவர் சொன்னது போல் அரசன் சுமதி தவம் செய்தார். தவத்தை ஏற்று பெருமாள் “பார்த்தசாரதி” உருவத்தில் காட்சி தந்தார். பார்த்தனை பார்த்து ஆனந்தம் அடைந்த அரசர், “நீங்கள் இங்கேயே நிரந்தரமாக தங்கி பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டார்.

பார்த்தனுக்காக வந்தாள் வேதவல்லி

பிருகு முனிவர் கடும் தவம் செய்து, ஸ்ரீமகாலஷ்மி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்று வேண்டினார். அவர் விருப்பப்படி லஷ்மிதேவி சந்தன காட்டில் குழந்தையாக அவதரித்தாள். அந்த குழந்தையை மகளாக ஏற்று பிருகு முனிவர் வளர்த்து வந்தார். பருவ வயதை அடைந்த வேதவல்லி, பெருமாளுக்கு மலர் பறிப்பதற்காக நந்தவனத்திற்கு சென்றாள். அப்போது பெருமாள் வேதவல்லியை விரும்பி, பிருகு முனிவரின் சம்மதத்துடன் திருமணம செய்து கொண்டு திருவல்லிகேணிக்கு அழைத்துவந்தார்.

திருவல்லிக்கேணி வந்த ஸ்ரீராமர்
 
பாண்டாரம் என்ற முனிவருக்கும் ஹேலை என்ற வானுலக பெண்ணுக்கும் பிறந்தவர் மதுமான். இவர் ஸ்ரீராமரை நினைத்து தவம் செய்தார். ஸ்ரீராமர் மதுமானுக்கு காட்சி கொடுத்தார். தன் பக்தன் மதுமானின் விருப்பத்திற்கேற்ப சீதையையும் லட்சுமனனை அழைத்து கொண்டு திருவல்லிகேணியில் குடிபுகுந்தார் ஸ்ரீராமர். இராமருக்கு துணையாக அனுமனும் திருவல்லிக்கேணி வந்து, நமக்கும் துணை இருக்கிறார்.

பார்த்தசாரதியும், ஸ்ரீராமரும் சாந்த கடவுளாக இருக்க, உக்கிர கடவுள் நரசிம்மரை அழைத்து வந்தவர் இவர். காரணம்….? 

அத்ரி முனிவர் திருவல்லிக்கேணியில்…மேலும் படிக்க 


திருமலை மகத்துவம்

Written by Niranjana


ஆகாசராஜன் என்றொரு அரசன். அவர் ஒரு சமயம் நகர்வலம் வரும் போது தாமரை குளத்தில் அழகான பெண் குழந்தை ஒன்று, தாமரை மலரில் படுத்தப்படி அரசரை பார்த்தவுடன் சிரித்தது. அக்குழந்தையை கண்டு மகிழ்ந்த அரசர், “இது யாருடைய குழந்தை.? தெய்வீகமான முகம். லஷ்மி கடாச்சமாக குழந்தை திகழ்கிறதே“ என்று கூறினார். 

ஆகாசராஜாவுக்கு தெரியாது அந்த குழந்தை உண்மையிலேயே ஸ்ரீமகாலஷ்மிதான் என்று. காவலர்களை அனுப்பி இந்த குழந்தையை உரிய பெற்றோர் யார் என்று தேடும்படி உத்தரவிட்டார். ஆனால் யாரும் குழந்தையை சொந்தம் கொண்டாடி வரவில்லை. “எல்லாம் இறைவன் செயல். இந்த குழந்தையை என் மகளாக ஏற்று நானே வளர்ப்பேன்.“ என்று முடிவெடுத்து அந்த குழந்தைக்கு “பத்மாவதி“ என்று பெயரிட்டார் அரசர். 

குழந்தை பருவத்தில் இருந்து பத்மாவதி மங்கை பருவம் அடைந்தாள். தான் யார் என்பதை உணர்ந்து, பெருமாளுடன் திரும்பவும் ஒன்று சேர தவம் இருந்தாள். வேங்கடேச பெருமாள், திருப்பதி மலை மீது தோன்றி தன் உடன் இருந்த வகுளமாலிகையை ஆகாசராஜனிடம் அனுப்பி பெண் கேட்டு தூது அனுப்பினார். வெங்கடாசலபதியே மருமகனாக வர இருப்பதை தடுப்பாரா அரசர்?. தன் மகளின் விருப்பத்தையும் தெரிந்த மன்னர், பெருமாளுக்கு பெண் தர சம்மதம் தெரிவித்தார். 

அரசருடைய மகளை திருமணம் செய்வதால் அவருக்கு இணையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது திருமணத்திற்கு தன் சார்பிலும் கல்யாண செலவு செய்ய வேண்டும் என்று விரும்பி குபேரரிடம் கடன் பெற்றார் பெருமாள். Bhakthi Planetதிருமணமும் பிரமாண்டமாக நடந்தது. 

ஒரே மகள் என்பதால் சீர்வரிசையை அள்ளி கொடுத்தார் அரசர். எல்லோரும் ஆச்சரியப்படும் அளவில் சீர் பொருட்கள் இருந்தாலும், சமையல் பொருட்களில் கருவேப்பிலை இல்லாததை கண்டார் பெருமாள்…மேலும் படிக்க