Wednesday, December 23, 2020

வாழ்க்கை முன்னேறுமா? பின்னேறுமா?

 Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.

அனைவருக்கும் வணக்கம்.

கட்டுரையின் தலைப்பின்படி பலர் என்னிடம் கேட்பது இதுதான். “ஐயா.. நான் உழைக்கிறேன், உழைக்கிறேன் ஓயாமல் உழைக்கிறேன். ஜான் ஏறினால் முழம் சறுக்கல் வருகிறது. ஒவ்வொரு நேரம் நமக்கு வாழ்க்கை உண்டா? முன்னேற்றம் உண்டா? என்று நினைப்பதும் உண்டு.” என்று சொல்வார்கள். பல வருடங்களாக சக்கரம்போல் மேலும், கீழும்தான் வாழ்க்கை ஏறி இறங்குகிறது என்று கவலைப்படுபவர்களுக்கு கூறுகிறேன்.

உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 5-ல் சுபர் இருந்தால் அடித்து சொல்ல்லாம் வாழ்க்கையில் யோகமாக இருப்பீர்கள்.

லக்கினத்திற்கு 5-க்குரியவன் 9-ம் இடத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியான வாழ்க்கை வண்டி, வாகனத்துடன் சொந்த வீடோடு இருப்பீர்கள். லக்கினத்திற்கு 5-க்குரியவன் பாபியோடு அல்லது 6,8,12-க்குரியவனோடு சேராமல் இருந்தால் நீங்கள் தொட்டது துலங்கும்.

5-இல் லக்கினாதிபதி, தனாதிபதி இருந்தாலும், 5-ல், 10, 11-க்குரியன் இருந்தாலும் சோகமான வாழ்க்கையும் யோகமான வாழ்க்கையாக மாறும்.

அன்பர்களேஉங்கள் ஜாதகத்தை பாருங்கள் 5-ம் இடம் வலுபெற்று இருந்தால் 5-ம் இடத்தில் யோகமான கிரகங்கள் இருந்தால் நல்ல யோக சாராதிபதிகள் இருந்தால் உங்கள் கை நிறைய கட்டு கட்டாக கரன்ஸிதான்.

Donate To My Channel 

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 

For Astrology Consultation

Sri Durga Devi upasakar,

Krishnarau. V.G

Phone Number: 98411 64648

E – Mail: bhakthiplanet@gmail.com

Visit: www.bhakthiplanet.com

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

யாருக்கு யார் சதம்? பிள்ளைக்கு தந்தையா? தந்தைக்கு பிள்ளையா?

Sri Durga Devi upasakar, Krishnarau VG.

நான் பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஐயா.. என் மகன் என்னை கவனிக்கவில்லை, நான் சீராட்டி வளர்த்தேன், இருந்தாலும் என்ன பயன்?. கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தேன். பிற்காலத்தில் என்னை காப்பாற்றுவான் என்று எண்ணி இருந்தேன். என் நம்பிக்கை காற்றில் கரைந்துவிட்டது.”

-இது ஒரு தந்தையின் புலம்பல்.

எனக்கு என்ன செய்தார்?. எதிர் நீச்சல் போட்டு நானே நீந்தி வந்தேன். பலரின் அப்பாக்கள் தங்களின் பிள்ளைகளுக்கு எவ்வளவோ செய்கிறார்கள். ஆனால் என் அப்பா எனக்கு என்ன செய்தார்?”

-இது மகனின் எதிர் கேள்வி.

இவ்வாறான புலம்பலுக்கும், எதிர் கேள்விகளுக்கும் ஜோதிட ரீதியான விடை 5-ஆம் இடம் மற்றும் 9-ஆம் இடமே. மகனுக்கு தந்தையோ, தந்தைக்கு மகனோ ஒன்றும் செய்ய முடியாது. இந்த 5-ஆம் இடம், 9-ஆம் இடம் அருமையாக இருந்தால்தான் பாசம் நீடிக்கும். உதவிகள் பரிமாறும். அதாவது, தந்தையின் ஜாதகத்தில் 5-ஆம் இடத்தில் 6,8,12-க்குரிய கிரகம் இருந்தாலும், 5-ஆம் இடத்ததிபதியோடு 6,8,12-க்குரியவர் இருந்தாலும் மகன் உதவிக்கு இருப்பானே தவிர அவனால் தந்தைக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய வாய்ப்பில்லை.

மகன் ஜாதகத்தில் 9-ஆம் இடத்தில் 5-க்குரியவர், 2-க்குரியவர், 11-க்குரியவர் இருந்தால் தந்தையின் உதவி கிடைக்கும். 9-ஆம் இடத்தை சனி, செவ்வாய், சூரியன் பார்வை செய்யக் கூடாது. அப்படி 9-ஆம் இடத்தை மகரம், கும்ப இராசிக்கு சம்மந்தப்பட்ட சனியாக இருந்து அந்த 9-ஆம் இடத்தை பார்வை செய்தால் பாதகம் இல்லை. தந்தையின் ஜாதகத்தில் 5-ஆம் இடத்தை லக்கினாதிபதி, 11-ஆம் அதிபதி பார்வை செய்தாலும், 5-ஆம் இடத்தில் குரு அல்லது குரு பார்வை இருந்தாலும் மகனுக்கு உதவிகள் தானாக கிடைக்கும்.

ஆகவே

வாழ்க்கையில் உதவிகள் கிரகங்களால் அதன் சக்தியால் ஒருவருக்கு ஒருவர் பெறுவார்களே தவிர, நீ செய்யவில்லை, நான் செய்யவில்லை என்று வேதனை அடைவது வேடிக்கைதான்.

Donate To My Channel 

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 

For Astrology Consultation

Sri Durga Devi upasakar,

Krishnarau. V.G

Phone Number: 98411 64648

E – Mail: bhakthiplanet@gmail.com

Visit: www.bhakthiplanet.com

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

சனிப்பெயர்ச்சி சாதிக்குமா? சோதிக்குமா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.  Phone Number: 98411 64648,

திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் ஆலயத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் 27.12.2020 அதிகாலை 05.22  மணிக்கு சனி பெயர்ச்சி நிகழ உள்ளது.

பொதுவாக சனி என்றாலே, “சனி பகவான் என்ன செய்யப் போகிறாரோ? ஜோதிடர் சொன்னாரே.. உனக்கு அஷ்டம சனி என்று இப்படி பலர் பயப்படுவது வழக்கம். பொதுவாக அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி ஏழரைச் சனி என்ன செய்யும்? எதை செய்ய விடாது என்று பார்ப்போம்.

வரும் 27/12/2020 அன்று வாக்கிய பஞ்சாங்கமுறைபடி சனிபகவான், மிதுன இராசிக்கு அஷ்டம சனியாகவும், துலா இராசிக்கு அர்த்தாஷ்டம சனியாகவும் (4-ஆம் இடத்தில் சனி), தனுசுக்கு பாதசனியாகவும், மகரத்திற்கும் கும்பத்திற்கும் ஏழரை சனியாகவும் பெயர்ச்சி ஆகிறார். இப்படி துலாம், தனுசு மகரம், கும்ப இராசிகாரர்களை பிடிக்கப்போகும் சனி, கெடுப்பாரா? என்றால் ஒருக்காலும் கெடுக்க மாட்டார்.

மகரத்தில் சனி பகவான் குருவோடு அமரப் போகிறார். ஆகவே பாதிப்பு அதிகம் தராது. பலர் பலவிதமாக சொல்வார்கள். பயப்படவேண்டாம். சனி பகவான், மகரத்தில் அமர்வதால் அதாவது சொந்த வீட்டில் அமர்வதால் உருட்ட மாட்டார். வேறு இடத்தில் அமர்ந்தால் உருட்டிப் புரட்டி எடுப்பார்.

சரி

மிதுனத்திற்கு அஷ்டம சனி என்ன செய்வார்?

துலா இராசிக்கு என்ன செய்வார்?

தனுசு, மகரம், கும்பம் இராசிக்காரர்களுக்கு என்ன செய்வார்?

ஏன் இதை மட்டும் முதலில் குறிப்பிடுகிறேன் என்றால், தினமும் எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளில் அன்பர்கள் பலர், “ஐயா எனக்கு சனிப்பெயர்ச்சி சரியில்லை என்று கூறுகிறார்கள். பாதிப்பு வருமா?என கேட்கிறார்கள்.

பாதிப்பு வராது. ஆனால் சிலரின் சனி பெயர்ச்சி பலன்களை படித்து பயத்திலேயே படுத்து விடுவீர்கள் போல.

ஆகவேதான் நான் முதலில் மேற்கண்ட இராசிக்காரர்களுக்கு பயப்படத் தேவையில்லை என்று கூறுகிறேன்.

மிதுன இராசிக்கு 8,9-க்குரியவன் சனி. அதாவது அஷ்டமாதிபதி, பாக்கியாதிபதி. பாக்கியாதிபதியாக வருவதால் கெடுதல் இல்லை. துலா இராசிக்கு 4,5-க்குரியவன். அதாவது சுகாதிபதி, பஞ்சமாதிபதியாக வருவதால் கெடுதல் இல்லை. தனுசுக்கு 2,3-க்குரியவன். தனாதிபதியாக வருவதால் பயம் இல்லை. மகர இராசிக்கும் தனாதிபதி. ஆகவே கெடுக்க மாட்டார். கும்பத்திற்கு ஜென்மாதிபதி கெடுதல் இல்லை.

இனி பன்னிரெண்டு இராசிக்காரர்களுக்கும் சனிப்பெயர்ச்சி என்ன கொடுப்பார்? எதையெல்லாம் கெடுப்பார்?. சனி பகவானின் பார்வைதான் பிரச்னை கொடுக்கும். எந்தெந்த ஸ்தானத்தை பார்க்கிறார்? அதனால் என்ன கெடுதல் என்று பார்ப்போம். இரண்டு நாட்களில் 12 இராசிகளுக்குரிய பலன்கள் வந்துவிடும். ஸ்ரீ துர்காதேவி அருளால் ஆனந்த வாழ்க்கை அமைய அம்பாளை பிரார்த்திக்கிறேன்.

நன்றி.

Donate To My Channel 

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 

For Astrology Consultation

Sri Durga Devi upasakar,

Krishnarau. V.G

Phone Number: 98411 64648

E – Mail: bhakthiplanet@gmail.com

Visit: www.bhakthiplanet.com

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

Friday, August 28, 2020

RAHU KETU PEYARCHI Palangal 2020-2021

RAHU KETU PEYARCHI Palangal 2020-2021 மேஷ ராசி - Mesha Rasi – Aries RAHU KETU PEYARCHI Palangal 2020-2021 ரிஷப ராசி - Reshaba Rasi – Taurus RAHU KETU PEYARCHI Palangal 2020-2021 மிதுன ராசி - MethunaRasi - Gemini RAHU KETU PEYARCHI Palangal 2020-2021 கடக ராசி - Kataka Rasi – Cancer RAHU KETU PEYARCHI Palangal 2020-2021 சிம்ம ராசி - Simma Rasi – Leo RAHU KETU PEYARCHI Palangal 2020-2021 கன்னி ராசி - Kanni Rasi – Virgo RAHU KETU PEYARCHI Palangal 2020-2021 துலா ராசி - Thula Rasi – Libra RAHU KETU PEYARCHI Palangal 2020-2021 விருச்சிக ராசி - Vrischika Rasi– Scorpio RAHU KETU PEYARCHI Palangal 2020-2021 தனுசு ராசி - Dhanusu Rasi – Sagittarius RAHU KETU PEYARCHI Palangal 2020-2021 மகர ராசி - Magara Rasi – Capricorn RAHU KETU PEYARCHI Palangal 2020-2021 கும்ப ராசி - Kumba Rasi – Aquarius RAHU KETU PEYARCHI Palangal 2020-2021 மீன ராசி - Meena Rasi – Pisces For Astrology Consultation Sri Durga Devi upasakar, Krishnarau. V.G Phone Number: 98411 64648 E – Mail: bhakthiplanet@gmail.com Visit: www.bhakthiplanet.com