Saturday, May 2, 2020

சென்னைக்கு பாதிப்பா?

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.

இன்று உலகையை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா என்னும் வைரஸ் பாதிப்பு இனி வரும் நாட்களில் என்ன ஆகப்போகிறது?. இன்று சென்னை சிறிது சிறிதாக பாதிப்பில் உயர்ந்து வந்துக்கொண்டு இருக்கிறது.

இந்த பாதிப்பு மேலும் உயருமா? இல்லை குறையுமா? என்று பார்த்தால் ஏற்கனவே நான் பாதிப்பு எப்பொழுது குறையும்?, எப்பொழுது ஆண்டவன் அருளால் வைரஸ் அழிந்துவிடும்? என்று எழுதி இருந்தேன். (பக்கத்தை பார்க்க கிளிக் செய்யவும்.).

தற்பொழுது சென்னைதான் மற்ற இடங்களைவிட கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு இனி குறையும்.

சென்னையை குறிப்பிடுவது மேஷ இராசி. மேஷ இராசியின் அதிபதி செவ்வாய். இந்த மேஷ இராசி அதிபதி செவ்வாய், மே மாதம் 5-ம் தேதி அதே செவ்வாய் கிழமை மகரத்தில் இருந்து கும்பத்திற்கு போகிறார்.

பொதுவாக இராசியாதிபதி 11-ல் சென்று அமர்ந்தால் நன்மைகள்தான் செய்வாரே தவிர தீமை செய்ய மாட்டார்.

மேஷ இராசியாக சென்னைக்கு 5-ம் இடத்தை செவ்வாய் பகவான் பார்வை செய்வதால், படிபடியாக பாதிப்பு குறையத்தான் செய்யும்.

5-ம் இடம் எதிர்பாரா யோகத்தை கொடுக்கும் இடம். அதுமட்டுமல்ல. தற்காலம் குரு பகவான், மகரத்தில் அமர்ந்து சென்னையின் இராசியாகி மேஷத்தின் 4-ம் இடத்தை அதாவது, சுகஸ்தானத்தை பார்வை செய்வதால், சென்னை சுகம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

சூரிய பகவான், மேஷத்தில் உச்சம் பெற்று இருக்கிறார். அரசாங்கத்தை குறிக்கும் கிரகம் சூரியன். அரசாங்கம் மேலும் முழு மூச்சுடன் போர்கால நடவடிக்கை எடுக்கும்.

ஒருவன் தேர்வுக்கு போகும் முன் விநாயகரை வணங்கி, “நான் பாஸாக வேண்டும் என்று கும்பிட்டுவிட்டு சென்றால் மட்டும் பாஸாக மாட்டான். படித்தும் இருக்க வேண்டும். அதேபோல், இந்த சூழ்நிலையில் அரசாங்கத்தின் அறிவுரையை ஏற்று பின்பற்றவும் வேண்டும். தேவையில்லாமல் சுற்றுவது, சமூக இடைவெளி கடைபிடிக்கால் இருப்பது போன்றவற்றை செய்தால் எதையும் சாதிக்க முடியாது. தான் மட்டும் கெடாமல் வனத்தையும் கெடுத்த வானரம்போல் ஆகிவிடும்.

சில ஊடங்களில் உலகம் அழிந்துவிடும், பேராபத்து என்றெல்லாம் சிலர் கூறுவதை பார்க்கிறேன். தயவு செய்து நார வாயை திறக்க வேண்டாம், நல்ல வாயை மட்டும் திறக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அண்டங்களை படைத்த ஆண்டவன் வாழ வைப்பான்!.
Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 

For Astrology Consultation

Sri Durga Devi upasakar,

Krishnarau. V.G

Phone Number: 98411 64648

E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

ஏமாறாதே நடக்கும் தசை கண்டு ஏமாறாதே!

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. 

இன்று ஒரு ஜோதிடரிடம் சென்று ஜோதிடம் பார்க்கும்பொழுது அந்த ஜோதிடர், “ஐயா உனக்கு தனாதிபதி திசை, பாக்கியாதிபதி திசை என்று சொன்னால் அதை கேட்டு ஆனந்தப்படக்கூடாது. அதாவது ஒருவர், தாம் வங்கியில் வேலை செய்வதாக சொன்னால் அவர் மனேஜரா, கேஷியரா, அக்கவுண்ட்டண்டா அல்லது இந்த மேஜைக்கும் அந்த மேஜைக்கும் ஃபைல் வைக்கும் ஆபிஸ் பாயா என்று கேட்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் பவர் நமக்கு தெரியும். அதைபோலவே 2-க்குரியவர் திசை, 9-க்குரியவர் திசை, லக்கினாதிபதி திசை என்று ஏமாந்து வியபாரமோ, முதலீடோ செய்தால், விழுவது படு பள்ளத்தில்தான்.

இப்பொழுது லக்கினாதிபதி திசை என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த லக்கினாதிபதி யோகத்தை வாரி கொடுக்கும். ஆனால் அந்த லக்கினத்திற்கு அதிபதி, 8-12-க்குரியவர் அல்லது 7-க்குரியவரின் சாரம் பெற்றிருந்தால், காண்பது எல்லாம் கானல் நீர்தான்.

பொதுவாக ரிஷப லக்கினம், 2-5-க்குரிய திசை புதன் திசை. அந்த புதன் எங்கு அமர்ந்து இருந்தாலும், 7-12-க்குரிய செவ்வாயின் காலில் (சாரம்) அமர்ந்துவிட்டால் அண்ணன் (ஜாதகர்) படும் அவஸ்தைக்கு அளவே இல்லை.

7-ம் இடம் களத்திரம் குறிக்கும் இடம்தான். இருந்தாலும், அது கண்டஸ்தானம். 12-ம் இடம் கேட்கவே வேண்டாம். யாத்திரை, நித்திரை, தீராத பிரச்னை கொடுக்கும் சயனஸ்தானம். அந்த 12-க்குரிய செவ்வாய் சாரத்தில் புதன் திசை வந்துவிட்டால் நாய் பாடு, பேய் பாடுதான். இதில் ஒரு சந்தோஷம் என்னவென்றால், எப்படியோ அண்ணனுக்கு (ஜாதகரைதான் சொல்கிறேன்) திருமணம் ஆகிவிடும். காரணம், 7-ம் வீட்டு அதிபதி செவ்வாய் சாரம். அவர் திருமணத்தை நடத்திவிட்டார். இதில் என்ன வேடிக்கை என்றால், பட்டு புடவையை கடனாக கொடுத்துவிட்டு, முந்தானை பிடித்து திரிந்த கதை போல, ஜாதகன்படும் அவஸ்தை மட்டுமல்லாமல், பாவம்அந்த ஜாதகனை நம்பி வந்தவளும் இவனோடு சேர்ந்து அலைய வேண்டும். ஆகவே ஜாதகத்தில் திசை பார்த்து ஏமாற வேண்டாம். எந்த திசையாக இருந்தாலும், சாராதிபதி 3,6,7,8,12-க்குரியவராக இருந்தால், ஜான் ஏறினால் முழம் சறுக்கும்.

ஆகவே, திசை எதுவாக இருந்தாலும் சாராதிபதி யோகதிபதியாக இருந்தால், உனது கையில் உள்ள மண்ணும் பொன்னாகும். வாழ்க வளமுடன்!.
Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 

For Astrology Consultation

Sri Durga Devi upasakar,

Krishnarau. V.G

Phone Number: 98411 64648

E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

ரசத்தை பிடி – விஷத்தை அடி

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG.
இன்று உலகை உலுக்கி கொண்டு இருக்கும் விஷ சம்மந்தபட்ட கொரோனாவை ஒழிக்க மருந்துகள் இருந்தாலும், வருவதற்கு முன் காக்க வேண்டும் என்றால், ரசம் சோறு சாப்பிடுவது மிக,மிக நல்லது. வேடிக்கை அல்ல, விநோதம் அல்ல. ரசம் என்பது மிளகு, இஞ்சி, கொத்தமல்லி, சீரகம் கலந்த கலவை. இதில் மிளகு சாதாரணமானது அல்ல.

நம் மூதாதையர்கள் சொல்வார்களாம், “பகைவன் வீட்டுக்கு போனாலும், பத்து மிளகோடு போஎன்று.

காரணம், ஒரு வீட்டில் ஏதாவது சாப்பிட்டுவிட்டால், ஏதாவது கலந்து கொடுத்து இருப்பார்களோ என்கிற சந்தேகம் இருந்தாலோ, மாய-மந்திரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் சிலர், மருந்து வைத்து வசியம் செய்து விட்டனரோ என்று குழம்பினால், எடுத்து சென்ற மிளகில் மூன்றை வாயில் போட்டுக்கொண்டால் உணவில் சந்தேகத்திற்குரியது எது இருந்தாலும் அழியும் என்பார்கள்.

ஜுரத்தில் பாதிக்கப்பட்டவர், டாக்டரிடம்என்ன சாப்பிடலாம்?” என்று கேட்டால், எனக்கு தெரிந்துரசம் சோறு சாப்பிடு என்றுதான் சொல்வார்கள். காரணம், வைரஸ் பிரச்னைகளை துரத்தியடிப்பது ரசம்தான். அதுமட்டுமல்ல, மிளகு உடலில் உள்ள கபம், ஜலதோஷம், சீதலத்தை நீக்கும் ஒரு கண்கண்ட நிவாரணி.

புளி கரைத்த நீரில்தான் ரசம் செய்கிறோம். புளி உஷ்ணத்தை உருவாக்கும். ஆகவே வைரஸ்க்கு சரியான எதிரி யார்? என்று பார்த்தால் ரசம் அருமையான மருந்தாகும் உணவாக இருக்கிறது.

ரசம் சோறு சாப்பிடவில்லை என்றாலும், ஒரு அரை டம்ளர் ரசமாவது குடித்துவிட வேண்டும். இன்று மருத்துவ ஆராய்ச்சி செய்பவர்களும் இதனை ஒப்புக்கொள்வார்கள். இஞ்சி, இன்று கொரோனாவுக்கு கொடுக்கப்படும் மருந்தில் ஒன்று. பாருங்கள். அதைவிட்டு விட்டு மேல்நாட்டு திண்பண்டங்களான பீட்சா, பர்கர் என்று பெருமைக்கு சாப்பிடுகிறார்கள். குறை சொல்லவில்லை. இன்று வைரஸ்சுக்கு மிளகும், இஞ்சியும் முக்கியமாக முன் நிற்கிறது. அமெரிக்கா, அமெரிக்கா என்றிருந்த நமக்கு அவர்கள்படும் அவஸ்தை பரிதாபமாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் கூறியதை கடைபிடித்தால் கரை சேரலாம். ரசத்தை பிடிவிஷத்தை அடி, வாழ்க வளமுடன்!.