Saturday, December 8, 2018

சொர்க்கலோக வாழ்வை தரும் சொர்க்க வாசல் : வைகுண்ட ஏகாதசி சிறப்பு கட்டுரை


18.12.2018 அன்று வைகுண்ட ஏகாதசி
Written by Niranjana 

மார்கழி மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதம் மிக சக்தி வாய்ந்தது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது

ஏகாதசி எப்படி உருவானது?

சந்திரவதி என்ற நகரத்தில் ஜங்காசுரன் என்ற (முரன்) அவனுடைய மகன் மருவாசுரனும் தேவர்களை துன்புறுத்தி வந்தனர். இதனால் விஷ்ணுபகவானிடம் தேவர்கள், அசுரர்களால் தாங்கள் படும் துன்பத்தை எடுத்துரைத்தார்கள். இதனால் மகாவிஷ்ணு, அந்த அசுரர்களுடன் போர் புரிந்தார். இந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது. இதனால் சோர்வடைந்த ஸ்ரீமந் நாராயணன், ஒரு குகையில் நன்றாக உறங்கினார். அப்போது அவர் உடலில் இருந்து ஒரு பெண் சக்தி தோன்றி, போர் நடக்கும் களத்திற்கு சென்று, அந்த அசுரர்களை வீழ்த்திவிட்டு மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடமே திரும்பி வந்தது.

தன் எதிரில் ஒரு பெண் தேவதை நிற்பதை கண்டு அந்த தேவதை தன் உடலில் இருந்து வெளிப்பட்டது Bhakthi Planetஎன்பதையும் உணர்ந்து, அந்த தேவதை அசுரர்களை அழித்ததையும் தெரிந்து, அதனை வாழ்த்தி, “ஏகாதசிஎன்று பெயர் சூட்டினார்.

நீ தோன்றிய இந்த நாளில், யார் என்னை நினைத்து விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு நீ துணை இரு. பக்தர்களின் வாழ்க்கையில் சகல நன்மைகளையும் அருள வேண்டும்.” என்று ஆசி வழங்கி, பிறகு அந்த ஏகாதசியை மீண்டும் தன்னுள் ஐக்கியபடுத்திக்கொண்டார் ஸ்ரீமந் நாராயணன்.

ஏகாதசி விரதத்தின் மகிமை

ருக்மாங்கதன் என்ற அரசர் இருந்தார். அவர் ஏகாதசி விரதத்தின் மகிமையை பற்றி தெரிந்துக் கொண்டார். அதனால் தன் நாட்டு மக்கள் யாவரும் பாவத்தில் இருந்து விடுபட்டு, புண்ணியம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஏகாதசி விரதத்தை கட்டாயமாக மக்கள் அனைவரும் அனுசரிக்க வேண்டும் என்று அரசாங்க உத்தரவிட்டார். அத்துடன் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்காதவர்கள் ராஜதண்டனைக்கு ஆளாவார்கள் என்றும் ஆணையிட்டார். இதனால் எட்டு வயது குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை அரசாங்கத்துக்கு பயந்தே ஏகாதசி விரதத்தை கடைபிடித்தார்கள்.

ஏகாதசி விரதத்தின் மகிமையால் நல்ல பலன் கிடைத்தது. நாடும், அந்நாட்டு மக்களும், அரசரும் சுபிக்ஷமாக வாழ்ந்தார்கள்.

அரசரால் திண்டாடிய மோகினி

அரசர் ருக்மாங்கதன், தன் நாட்டு மக்களை கட்டாயப்படுத்தி ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க சொன்னதால் துஷ்டமோகினிக்கு வேலை இல்லாமல் போனது. ஆம். யார் ஏகாதசி விரதம் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கஷ்டத்தை தர வேண்டிய துஷ்ட தேவதைக்கு, அரசர் ருக்மாங்கதன் நாட்டில் மட்டும் அதற்கு வேலை இல்லாமல் போனது. காரணம் மக்கள் அனைவரும் ஏகாதசி விரதத்தை அரசருக்கு பயந்து நிறைவேற்றினார்கள். பொறுத்து பொறுத்து பார்த்த மோகினி, கடைசியில் விஷ்ணுபகவானிடம் ருக்மாங்கதனை பற்றி புகார் சொன்னாள்.

தன் பக்தனான ருக்மாங்கதன், தன் நாட்டுமக்கள் மேல் அதிக பிரியத்துடன் இருப்பதால் இப்படி செயல்படுகிறான் என்பதை உணர்ந்த ஸ்ரீவிஷ்ணுபகவான், ருக்மாங்கதன் முன் தோன்றி,

நீ யாரையும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டாயபடுத்தக்கூடாது. ஏகாதசி விரதம் என்பது புண்ணியத்தை கொடுக்ககூடியது. புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று யாருக்கு விதி இருக்கிறதோ அவர்களே  விரதத்தை கடைபிடிப்பார்கள். இயற்கைக்கு விரோதமாக நீ யாரையும் கட்டாயப்படுத்த வேண்டாம்.”  என்று தன் பக்தனான அரசர் ருக்மாங்கதனுக்கு சொன்னார் ஸ்ரீவிஷ்ணுபகவான்.

இப்படி பாவத்தை போக்கி புண்ணியம் தருவதுதான் ஏகாதசி விரதத்தின் மகிமை. ஏகாதசி விரதம் யார் இருக்கவில்லையோ அவர்களிடம்தான் துஷ்ட மோகினிக்கு வேலை என்கிறது புராணம்.

நோய்வாய்பட்டவர்கள் விரதத்தை கடைபிடிக்க முடியுமா?

ஏகாதசி விரதம் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். ஆனால் வியாதியால் அவதிப்படுபவர்கள் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க முடியாதல்லவா.? ஆகவே நோய்வாய்பட்டு விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள் ஏகாதசி விரததன்று உணவு சாப்பிடும் முன்னதாக இறைவனை வணங்கிய விட்டு சாப்பிடலாம் எனகிறது சாஸ்திரம்.

ஏகாதசி விரதத்தை எப்படி கடைபிடிப்பது?

ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி அன்று, உணவு சாப்பிட்டு  இறைவனுடைய நாமத்தையும், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களையும், மந்திர ஸ்தோத்திரங்களையும், பாடல்களையும் உச்சரிக்க வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று, சொர்க்கவாசல் வழியாக இறைவனை வணங்கி தரிசித்துவிட்டு, அன்று நாள்முழுவதும் இறைவனுடைய நாமத்தையும், பாடல்களையும், புராணங்களையும் படிக்க வேண்டும்.

மறுநாள் துவாதசி அன்று கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்துவிட்டு, வீட்டுக்கு திரும்பி இறைவனுக்கு நெல்லிக்காய், அகத்திகீரை போன்றவை சமைத்து படைத்து பூஜித்த பிறகுஒருவருக்காவது அன்னதானம் செய்த பிறகு சாப்பிட வேண்டும்.

விரதத்தை கடைபிடித்தவர்கள் நெல்லிக்காய், சுண்டக்காய், அகத்திகீரை போன்றவற்றை பல்லில் படாமல் சாப்பிடவேண்டும். சாப்பிடும் முன் இறைவனுடைய நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

இதனால் புண்ணியம் கிட்டும். வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்தால் முன்னோர்களின் சாபமும் நீங்கிடும்.

சொர்க்கவாசல்  உருவான கதை

விஷ்ணுபகவான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவருடைய இரு காதில் இருந்து மது, கைடபர் என்ற இரு அசுரர்கள் தோன்றினார்கள். அந்த இருவரும் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். இந்த அசுர சகோதரர்களை அடக்க முடியாமல் திணறினர் தேவர்கள். அதனால் விஷ்ணுவின் சக்தியால் உருவான இந்த அசுரர்களை விஷ்ணுபகவான் ஒருவரே அடக்க முடியும் என்ற முடிவில் பகவானிடம் தேவர்கள் முறையிட, பெருமாள் மது, கைடபருடன் போர் செய்தார். ஸ்ரீமந் நாராயணனிடம் யுத்தம் செய்ய முடியாமல் அவரிடம் அசுர சகோதரர்கள் சரண் அடைந்தார்கள்.

பகவானே...தங்களின் சக்தியால் நாங்கள் உருவானதால் எங்களுக்கு நீங்கள் கருனை காட்ட வேண்டும்.” என்ற பணிவாக கூறி வைகுண்டத்தில் பெருமாளுடன் இருக்கும் பாக்கியத்தையும் பெற்றார்கள் இந்த அசுர சகோதரர்கள். தங்களை போல் பலரும் இந்த பாக்கியம் பெற வேண்டும் என்று என்னி  அசுரர்களாக இருந்தாலும் நல்ல மனதுடன் பெருமாளிடம் வேண்டினர்.

எம்பெருமானே...தாங்கள் வைகுண்ட ஏகாதசி நாளில் திருவரங்க வடக்கு வாசல் வழியாக, அர்ச்சாவதாரத்தில் (மனித வடிவம்) தாங்கள் வெளிவரும்போது, தங்களை தரிசிப்பவர்களுக்கும், தங்களை பின்தொடர்ந்து வருபவர்களுக்கும், அவர்கள் தெரிந்து செய்த பாவங்கள், அறியாமல் செய்த பாவங்கள் யாவும் நீங்கி அவர்களுக்கு முக்தி அளிக்க வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டனர் அசுர சகோதரர்கள். .அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பவனி வரும் நிகழ்ச்சி இனிதே நடைபெறுகிறது.

இந்த ஏகாதசி நன்னாளில், ஓம் நமோ நாராயணாய என்று உச்சரித்து, பெருமாளை தரிசித்து பாவங்கள் நீங்கி, ஸ்ரீமகாலஷ்மியின் அருளையும் பெறுவோம்.


Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 


For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com


© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Wednesday, December 5, 2018

திருமண தடை ஏன்?


Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

இன்று பலருக்கு திருமணம் காலதாமதமாக நடக்கிறது. ஏன் இந்த நிலை?, காரணம் என்ன?.

ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2-ம் இடத்தில், 7-ம் இடத்தில் சூரியன் இருந்தாலும் அல்லது 2-ம் இடத்தை, 7-ம் இடத்தை சூரியன் பார்வை செய்தாலும் திருமணம் கால தாமதமாகிறது.

அதுமட்டுமல்ல

களத்திரகாரகன் சுக்கிரன், இராகுவோடு சேர்ந்து, லக்கினத்திற்கு 5-ல், 7-ல், 11-ல் இருந்தாலும் திருமணம் தாமதம் ஆகிறது.

இந்த கிரக தோஷத்தால் திருமணமே நடக்காதா? என்றால் நடக்கும். அதற்குரிய பரிகாரம் செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 
Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா? பகுதி -1


Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.
பித்ருக்கள் (முன்னோர்கள்) சாபமே பித்ரு தோஷம் எனப்படும். நம்முடைய தாய்-தந்தையோ, பெற்றோர்களின் பெற்றோரோ மனம் புழுங்கினால் அதாவது அவர்கள் உயிருடன் இருந்த போதோ அல்லது இறந்த பின்னரோ அவர்களின் மனம் வேதனைபட்டால், மனம் புண்படும்படி நாம் நடந்துக்கொண்டால் குடும்பத்தில் பிரச்னைகள் என்கிற புயல் வீசும்.

என்னதான் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. வம்ச விருத்தி குறையும் அல்லது குழந்தை பாக்கியம் நிதானப்படும். வீட்டில் நோய்நொடிகள் தலை தூக்கும்.

பொதுவாக பித்ரு தோஷம் நிம்மதி கொடுக்காது.

பித்ரு சாபத்தை எப்படி அறிந்துக் கொள்வது?

உங்கள் ஜாதகத்தில் சூரியன் அமைந்த இடத்தை அறிந்தும், 9-ம் இடத்தை கணித்தும் தெரிந்துக்கொள்ளலாம்.

சரிபித்ரு சாபம் இருக்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்த சாபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பித்ருக்களை திருப்திபடுத்துவது எவ்வாறு என்ற விஷயங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

(தொடரும்)
Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 
Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Saturday, October 20, 2018

ஜோதிடம் - மனநிம்மதி இல்லாதவர்கள் யார்?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau


அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது. அதிலும் அரிது நோய் இல்லாமல் வாழ்வது அரிது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
ஆம் –

நோய்,நொடி இல்லாமல் வாழ்வது அம்பாள் செயல். உடலில் நோய் இல்லாவிட்டாலும், இருப்பது போல் பிரமை உள்ளவர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். சரி, இப்படி மனதில் நிம்மதி இல்லாமல் இருக்கும் குழப்பவாதிகள் யார்? என்று பார்த்தால், லக்கினத்திற்கு 4-ம் இடத்தில் பாப கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, கேது, இராகு ஆகிய இந்த கிரகங்களில் ஏதேனும் ஒன்று 4-ம் இடத்தில் இருந்தால் அவர்கள் குழப்பவாதிகளே, சந்தேகப் பிரானிகளே. ஒருவேலை இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று சதா நிம்மதி இல்லாமல் குழம்பிக்கொண்டு இருப்பார்கள்.

4-ம் இடத்தில் இந்த பாபகிரகங்கள் நல்ல சாரத்தில் இருந்தால் பயமில்லை, பாதகமுமில்லை. ஆனால் பகை சாரத்திலோ, 6,8,12-க்குரிய சாரத்திலோ இருந்துவிட்டால், வாழ்நாள் முழுக்க குழப்பம் கோவிந்தசாமிதான்.

சரி- இதற்கு தீர்வு என்ன?

யந்திரத்திற்கு ஏற்ற மந்திரம். ஆம், ஒவ்வொரு யந்திரத்திற்கும் அதற்கேற்ற மந்திரம் ஜபிக்க வேண்டும். அதைபோலவே நம்முடைய பிறந்த தேதிக்கு ஏற்ப நம் பெயர் மந்திரம் அதாவது நல்ல ஆதிக்கத்தில் பெயர் எண் இருந்துவிட்டால் மனக்குழப்பம், தேவையில்லா சந்தேகம் தீரும். மன அமைதி முழுமையாக பெறாவிட்டாலும் நல்ல சிந்தனை, திட நம்பிக்கை உருவாகும். வாழ்க வளமுடன்!.

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

ஜோதிடம் - எங்கேயும், எப்போதும் வெற்றி பெற என்ன வழி?


Sri Durga Devi upasakar, V.G.Krishnarau

நீங்கள் எடுக்கும் காரியம் வெற்றி பெற வேண்டுமா?

உங்கள் நட்சத்திரத்திற்கு 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26 இப்படி வரும் நட்சத்திர நாட்களில் அதாவது உங்கள் நட்சத்திரம் பூசம் என்றால், பூச நட்சத்திரத்திற்கு 2-வது நட்சத்திரம் ஆயில்யம், 4-ம் நட்சத்திரம் பூரம், 6-வது நட்சத்திரம் அஸ்தம் இப்படி அவரவர் நட்சத்திரத்திற்கு வரம் இரட்டைபடை நட்சத்திரத்தில் எந்த விஷயத்தை ஆரம்பம் செய்தாலும் வெற்றி நிச்சயம்.

சிலருக்கு ஒரு சந்தேகம், ஆயில்யம் நல்ல நட்சத்திரமா?

அந்த நட்சத்திர தினத்தில் நவகிரக பரிகாரம், தோஷ பரிகாரம், கங்கையில் நீராடுவது, பித்ரு தோஷம் விலக புண்ணிய ஸ்தலங்களில் நீராடுவது போன்றவற்றை செய்வது மிக,மிக விசேஷமானது. ஆகவே நீங்கள் எதை செய்தாலும் இப்படி இரட்டை நட்சத்திரத்தில் செய்ய பழகுங்கள். வெற்றி உங்களை தேடி வரும். வாழ்க வளமுடன்.

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Friday, October 19, 2018

கண் திருஷ்டியை நீக்கும் குதிரை லாடம்


Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com
© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Thursday, October 11, 2018

Guru Peyarchi Palangal 2018-2019

Mesha Rasi - Aries - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=d4haw0nBmh4 Reshaba Rasi – Taurus - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=MYIn39KF0eQ Methuna Rasi – Gemini - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=tGWXEy8M7qg Kataka Rasi – Cance - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=r4t6PZ0_EjQ Simma Rasi – Leo - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=QDgPl1bSc9I Kanni Rasi – Virgo - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=n73CLiy55pk Thula Rasi – Libra - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=K6eGe_kKb2I Virchika Rasi – Scorpio - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=Xnbo63fIquA Dhanusu Rasi – Sagittarius - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=wytToYi9yeM Magara Rasi – Capricorn - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=JpqM-iOXO5I Kumba Rasi – Aquarius - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=Yth9rOolbxI Meena Rasi – Pisces - Guru Peyarchi Palangal 2018-2019 Click Here https://www.youtube.com/watch?v=kl9kHzvSzW0 For Astrology Consultation Sri Durga Devi upasakar, Krishnarau. V.G Phone Number: 98411 64648 E – Mail: bhakthiplanet@gmail.com Visit: www.bhakthiplanet.com