VIDEO
Sri Durga Devi
upasakar, V.G.Krishnarau.
ஒருவருடைய
ஜாதகத்தில் இராகு – கேது அருமையாக
அமைந்து விட்டால் , அந்தஸ்தான வாழ்க்கை தந்து செல்வ சீமானாக்குகிறது .
பண வசதியை தரக்கூடிய தனஸ்தானாதிபதி ,
6-8-12-ல் அல்லது நீச்சம் பெற்று
இருந்தாலும் கவலை வேண்டாம் .
தனத்தை
நான் தருகிறேன் என்று இராகு -கேது
மல்லுகட்டிக் கொண்டு முன்னால் வருவார்கள் .
“கேதுவை
போல் கெடுப்பார் இல்லை என்று சொல்பவர்களே …
கேதுவாகிய நான் கெடுப்பதில்லை , கொடுப்பவன் .
அதுவும் அள்ளி கொடுப்பேன் .” என்கிறார்
கேது பகவான் .
அது
எப்படி என பார்ப்போம் .
பாம்பை
பிடித்து யோகத்தை சொல்லு .
சனியை
பிடித்து மாரகத்தை சொல்லு .
என்பது
ஜோதிட பொன்மொழி .
ஒருவரின்
ஜாதகம் பணக்கார ஜாதகமா ? கோடீஸ்வர
ஜாதகமா ? என்பதை தெரிந்துக்கொள்ள , ஜாதகத்தில்
இராகு – கேதுவின் நிலையை கணித்து பார்க்க
வேண்டும் . இராகு – கேது அமர்ந்த
இடத்தின் அதிபதி , லக்கினத்திற்கு 2,4,5,9,10,11-ல் இருந்தாலும் , அதனை
குரு பார்த்தாலும் செல்வத்தை வாரி வழங்குகிறார் . அதேபோல
இராகுவும் செய்கிறார் .
உதாரணமாக ,
ஒருவருக்கு ரிஷப லக்கினமாக அமைந்து ,
கன்னியில் கேது , அந்த வீட்டுக்குரியன்
புதன் .
இந்த
புதன் , மகரத்தில் அதாவது 9-ல் குருவோடு சேர்ந்திருந்தாலும் ,
குரு பார்த்தாலும் அவன் செல்வந்தன் . அதுபோல ,
கடக லக்கினமாக இருந்து , 8-ல் கேது , அந்த
வீட்டுக்குரியவன் சனி உச்சம் பெற்று
துலாவில் இருந்தாலும் அவர்கள் செல்வந்தர்களே . அதுபோல ,
சிம்ம லக்கினமாக இருந்து கன்னியில் கேது ,
அந்த வீட்டுக்குரியவன் புதன் , 5-ல் இருந்தாலும் தனவான்களே .
அதேபோல் ,
குரு – கேது சேர்க்கை , குரு
-இராகு சேர்க்கை ஆகிய இந்த கூட்டணி
கிரகங்களும் அந்த ஜாதகரை செல்வந்தனாக்குகிறது .
என்
அனுபவ ஆராய்ச்சியில் , இராகு 1,4,7,10-ல் இருந்து திசை
நடைபெற்றால் , யோகத்தையே செய்கிறது . பள்ளத்தில் இருப்பவனை பல்லாக்கில் உட்கார வைக்கிறது . பொதுவாக
கேது , கெடுப்பான் கெடுப்பான் என்று கூறி அலறுவதை
விட , கேது , கொடுப்பான் கொடுப்பான்
என்று கூறுவதே சரியாகும் .
அதாவது ,
இராகுவோ கேதுவோ அமர்ந்த இடத்தின்
அதிபதி , ஆட்சி – உச்சம் பெற்றாலும் ,
2,4,5,7,10,11-ல் இருந்தாலும் யோகமே செய்யும் .
For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com
© 2011-2018 bhakthiplanet.com All
Rights Reserved