28.12.2016
அன்று அனுமன்ஜெயந்தி!
Written by Niranjhana
மார்கழி மாதம் அமாவாசை அன்று, மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் அனுமான் “ஆண் மூலம் அரசாலும்.” என்பார்கள். அரசராக திகழ்ந்த ஸ்ரீராமருக்கு துணை இருந்து, இப்போதும் ஆஞ்சனேய பக்தர்களான நம் மனதில் தைரியத்தை தருகிற, ஊக்கத்தை தருகிற அரசராக திகழ்ந்து நம்மை காக்கும் பொறுப்பையும் ஏற்று, ஸ்ரீராமபக்தர்களுக்கு நிழலாக இருந்து காப்பாற்றுகிறார் நம் அரசர் ஆஞ்சனேயர்.
இராவணன்
பிடியில் இருந்து சீதையை மீட்டுவதற்கு
ஸ்ரீராமருடன் கடைசிவரை உறுதுணையாக இருந்தார் அனுமார்.
யுத்தகளத்தில்
லட்சுமணன் மயங்கிவிழுந்த போது, சஞ்சீவினி மூலிகை
இருந்தால் மட்டுமே லட்சுமணன் பிழைப்பார்
என்றவுடன், சஞ்சீவினி மூலிகைக்காக அந்த மலையையே தூக்கிவந்துவிட்டார்
அனுமார். “தன்னை நம்பி இருப்பவர்களுக்கு,
தாம் கஷ்டபட்டாலும் அவர்களை கைவிட மாட்டேன்”
என்ற உயர்ந்த குணம் கொண்டவர்
அனுமார். அதனால்தான் ஸ்ரீராமரே அனுமானின் அடக்கம்,வீரம், நல்ல
குணம், தைரியம் பேச்சாற்றல் மற்றவர்களுக்கு
சிரமம் பாராமல் உதவும் உயர்ந்த
குணத்தை கண்டு, “உனக்கு என்ன
வேண்டும் ஆஞ்சனேயா?” என்று கேட்க, “எதுவும்
எதிர்பார்த்து நான் உங்களுடன் இருக்கவில்லை.
எந்நாளும் நான் தங்கள் திருநாமத்தை
உச்சரித்துக்கொண்டு இருக்கவே ஆசைப்படுகிறேன்” என்றார்.
கடன் பட்ட நெஞ்சம்...
ஆஞ்சனேயரின்
இந்த பதிலை கேட்ட உடன்
கலங்கினார் ஸ்ரீஇராமர். கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான்
இலங்கை வேந்தன் என்பதை போல,
இராமரும் இப்போது அதே கடன்பட்டார்
நெஞ்சமாக கலங்கி நின்றார்.
“நீ
எனக்கு பல உதவிகள் செய்திருக்கிறாய்.
அவை வேறு யாராலும் எளிதில்
செய்ய இயலாத உதவிகள். ஆகவே
நான் உனக்கு கடன்பட்டு இருக்கிறேன்.
.எனக்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு
ராஜ்யத்தை கொடுத்தேன். விபீஷனை இலங்கைக்கு அரசனாக்கினேன்.
இதனால் என் மனதில் கடன்
சுமை குறைந்தது. ஆனால் இவர்களில் மிக
முக்கியமானவன் நீ. எனக்கு எதுவும்
வேண்டாம் என்கிறாய். இருந்தாலும் எனக்கு என்று ஒரு
தர்மம் இருக்கிறது. அதை செய்ய நீ
தடுக்கக் கூடாது. என்னை பக்தர்கள்
எங்கெல்லாம் கோவில் கட்டி வழிபடுகிறார்களோ
அங்கெல்லாம் உனக்கு சந்நிதி அமைத்து
வழிபடுவார்கள்.” என்றார் ஸ்ரீராமர்.
அதற்கு
பணிவாக ஒரு வார்த்தை சொன்னார்
அனுமன். அது –
“சுவாமி…
உங்கள் கோயிலில் மட்டும் அல்ல. உங்கள்
நாமம் எங்கெல்லாம் உச்சரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் நான் இருப்பேன்.” என்றார்
ஸ்ரீஆஞ்சனேயர்.
அடக்கம்
உயர்வை தரும் என்பார்கள். அனுமாரின்
அடக்கமும், நல்ல குணமும் பிரதி
பலன் எதிர்பாராமல் செய்த அற்புதங்களும் போற்றுதலுக்குரியது.
அன்றும் – இன்றும் – என்றும் “ஸ்ரீஇராமர்” என்று இந்த வார்த்தையை படிக்கும் – உச்சரிக்கும் நம் பக்கத்திலேயே ஸ்ரீஅனுமன் நிற்கின்றார்.
வெற்றிக்கு வழி
எடுக்கும்
முயற்சியில் வெற்றி கிடைக்க வேண்டுமானால்
சனிகிழமையிலோ அல்லது அனுமனுக்கு உகந்த
நாட்களிலோ அல்லது மூலநட்சத்திர தினத்திலோ
ஆஞ்சனேயர் படத்தில், அவருடைய வால் பகுதியில்
இருந்து, சந்தன, குங்குமம் பொட்டு
வைத்து பூஜை செய்ய வேண்டும்.
இராவணின்
ஆணவத்துக்கு ஆஞ்சனேயர் வைத்த முதல் தீ,
தன் வால் பகுதியால்தானே. அதுபோல
நம் நல்ல முயற்சிகளுக்கு உண்டாகும்
தடைகளையும் அவரின் வால் விரட்டும்.
இதனால் தடையாவும் விலகி நன்மை உண்டாகும்.
ஒவ்வொரு
சனிகிழமைதோறும் ஆஞ்சனேயர் படத்தில் அவருடைய வால் பகுதியில்
பொட்டுவைத்து, அந்த வால் பகுதியில்
வைக்கப்படும் பொட்டு, அந்த வால்
நுனிக்கு என்று வந்து முடிகிறதோ,
அன்றைய தினம் ஆஞ்சயேனர் கோவிலுக்கு
சென்று, அனுமான் பெயருக்கு அர்ச்சனை
செய்து, வடைமாலை அணிவித்துபூஜிக்க வேண்டும்.அனுமாருக்கு உப்பு பிடிக்காததால் உப்பிடாமல்தான்
அவருக்கு நெய்வேதியம் தயாரிக்க வேண்டும். வெற்றிலை மாலை அணிவிக்கவேண்டும். வெற்றிலை
மாலை வெற்றியை கொடுக்கம். வெண்ணெய் சாத்தினால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
“வெண்ணெயை
போல் நான் உருகி உன்னை
வழிபடுகிறேன். என் வாழ்வில் வசந்தம்
வீச செய்ய வேண்டும்.” என்று
வேண்டினால் நிச்சயம் அனுமார் பக்தர்களுக்கு ஆசி
வழங்குவார்.
அனுமாருக்கு
உகந்த அனுமன் சாலிஸா, இராமாயணம்,
சுந்தரகாண்டம் பாராயணம்,ஆஞ்சனேயருக்கு உகந்த காயத்ரி மந்திரம்,
ஸ்ரீராமசந்திரனின் நாமம் போன்றவற்றை உச்சரித்தால்
ஆஞ்சனேயனின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும்.
பிறகென்ன எங்கும் வெற்றி, எதிலும்
வெற்றிதான்.
“ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தன்னோ அனுமன் பிரசோதயாத்!”
ஆஞ்சநேயரின் வாலில் இளநீர் கட்டி
வேண்டிக்கொண்டால் கிரகதோஷம் நீங்கும்.
துயரங்களை
தூக்கி எறியும் ஆஞ்சநேயர்!
ஆட்டி படைக்கும சர்ப்ப
தோஷத்தை அடக்குவார் அனுமான்!
அனுமனுக்கு உகந்தது என்ன? அதன்
பலன் என்ன?
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
ஆன்மிகம் தொடர்பான உங்கள்
கேள்விகளையும், சந்தேகங்களையும் கீழ்கண்ட
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi
palangal Click Here
Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017
All Rasi palangal Click Here
RAHU
KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal
2016 New Year Rasi Palangal & Pariharam
All Rasi Palan Click Here
சாமுத்ரிகா
லட்சணம் கிளிக் செய்யவும்
© 2016 bhakthiplanet.com All
Rights Reserved