Friday, December 21, 2018

Friday, December 14, 2018

தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்?


Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648,

 ன்று பரபரப்பாக பேசப்படுவதுபுயல் வருகிறது, பயங்கரமாக புயல் தாக்கும், கஜா புயலைவிட இரு மடங்கு வலுவாக வருகிறது, தமிழ்நாட்டை புயல் தாக்கப் போகிறது என இப்படி பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. “புயல் சென்னைக்கு அருகில் இருக்கிறது, சென்னைக்கு தொலையில் இருக்கிறது, சென்னைக்கு அருகே கடந்து போகப் போகிறது, 15-ந் தேதி, 16, 17-ந்தேதி இப்படி பல தேதிகளும் வந்த வண்ணம் உள்ளன.

எனது ஜோதிட கணிப்பின்படி சென்னைக்கு புயல் அபாயம் இல்லை. அதுமட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே இப்போது புயல் அபாயம் வர வாய்ப்பு இல்லை. காரணம், தமிழ்நாட்டை குறிக்கும் கிரகம் செவ்வாய். இந்த செவ்வாய், 18.12.2018 அன்று மீன இராசிக்கு பெயர்ச்சி ஆகிறது.

மீனத்தில் அமர்ந்த செவ்வாயை, விருச்சிகத்தில் இருக்கும் குரு, பார்வை செய்யப்போகிறது. அதுமட்டும் அல்ல, குரு-செவ்வாய் பரிவர்த்தனை ஆகிறது. அதாவது இவர்கள் நண்பர்களாகிவிட்டார்கள்.

பெயர் இராசிப்படி, சென்னை மேஷ இராசிக்குள் வருகிறது. மேஷ இராசியும் செவ்வாய்தான். ஆகவே இப்போது தமிழ்நாட்டுக்கு புயல் அபாயம் இல்லை. படுபயங்கரமாக புயல் நெருங்கி வந்தாலும், முயல் போல் திரும்பி ஓடிவிடும்.

இனி புயல் பயம் யாருக்கும் வேண்டாம். மழைதான் வேண்டும். 01.01.2019 அன்று சுக்கிரன், விருச்சிகத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அதற்குள் மழை வர வேண்டும். தவறினால் தண்ணீர் பஞ்சம் தலை தூக்கும்.

அம்பாள் அருளால் மழை வர பிராத்தனை செய்வோம்.
Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 


For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com


© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Monday, December 10, 2018

ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் 2019

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

அன்பார்ந்த பக்திபிளானெட்.காம் வாசகர்களுக்கு வணக்கம்.

இந்த 2019 புத்தாண்டு துலா இராசியில் பிறக்கிறது. லக்கினம் கன்னி. தனஸ்தானத்தில் 11-க்குரிய தனாதிபதி இணைந்துள்ளதால், பணபுழக்கம் நன்றாக இருக்கும். கீர்த்திஸ்தானத்தில் புதன், குரு இணைந்துள்ளனர். இதனால் கல்விதுறை மேன்மை பெறும். பாட திட்டத்தில் சில நல்ல திருத்தங்கள் செய்வார்கள். மாணவ-மாணவியருக்கு அரசாங்கம் நன்மைகள் செய்யும்.

சுகஸ்தானத்தில் சூரியன், சனி உள்ளதால் வாகன விபத்துக்கள் ஏற்படும். அதனால் முடிந்தளவு வாகன ஓட்டிகள் கவனமாக வாகனங்களை ஓட்டுவது நல்லது. அரசியலில் உள்ளவர்களுக்கு சற்று குழப்பங்கள், நிலை இல்லாத்தன்மை ஏற்படும். தெய்வஸ்தலங்கள் சில புதுபிக்கப்படும்.

சப்தமத்தில் செவ்வாய் இருப்பதால், அன்னிய நாட்டவரின் அதிகாரம் ஒடுக்கப்படும். கலைதுறையில் புகழ் பெற்றவருக்கு உடல்நலனில் குறை ஏற்படும். லாபஸ்தானத்தில் உள்ள இராகு பகவான், வெளிநாட்டில் வேலை வாய்ப்பை இந்தியர்களுக்கு அதிகமாக தருவார். பங்கு வர்த்தகம் அருமையாக இருக்கும்.

மழை உண்டு. ஆனால் கடுமையான புயல் தாக்கம் எதுவும் இருக்காது. பொதுவாக 2, 3, 5, 11-ம் இடங்கள் பலமாக இருப்பதால், இந்த புத்தாண்டு மிக,மிக அருமையாக இருக்கும்.

வாருங்கள்இப்போது உங்களுக்குரிய இராசி பலன்களை பார்ப்போம்.

மேஷ இராசி அன்பர்களே உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் கை நிறைய பணம் புரளும். இனி அடித்தது யோகம். சுகஸ்தானத்தை குரு பார்வை, பஞ்சமாதிபதி சூரியன் திரிகோணத்தில் இருப்பதால். சொத்து சுகத்தோடு இந்த வருடம் அமர்களமாக இருப்பீர்கள். 8-க்குரிய செவ்வாய் 12-ல் இருப்பதால். அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய பாதிப்பு இருந்தாலும் செவ்வாயின் அனுகிரகத்தால் நோய் தீரும். 7-ல் சந்திரன், சுக்கிரன் அமைந்தனர், தடைப்பட்ட திருமணம் கலகலப்பாக நடக்கும். 10-ம் இடத்தில் கேது இருப்பதால் வெளிநாடு செல்லும் பாக்கியம் ஏற்படும். இத்தனை நாட்கள் வேலைக்கு போராடிய நீங்கள், இனி ஜம்மென்று வேலைக்கு செல்வீர்கள். அலைச்சல் தீரும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி போடுவீர்கள். பொதுவாக யோக வாழ்க்கை ஆரம்பம்.

ரிஷப இராசி அன்பர்களேஉங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். எப்பொழுது விடியல் தெரியும்? என எதிர்பார்த்துக்கொண்டிருந்த நீங்கள், விடியலை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடையப்போகிறீர்கள். சப்தம குரு சாதாரணமானவன் இல்லை. வாரி கொடுக்கப்போகிறான். நினைத்து பார்க்காத அளவுக்கு பணப்புழக்கம் அமையும். சாப்பிட நேரம் இல்லை என்று கூறும் அளவிற்கு தொழில் விருத்தி, பணவரவு கிடைக்கும். 3,6-க்குரிய புதன் அமர்ந்த இடம், பாக்கியத்தில் சூரியன், அவன் பஞ்சமாதிபதி. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் வீட்டில் இனி அம்பாள் அனுகிரகத்தால் குவா,குவா எனும் மழலை சத்தமும், பேச்சும் கேட்கும். 2,5-க்குரிய புதன், குருவுடன் சேர்ந்ததால் பூவோடு சேர்ந்த நார் மணம் பெற்றது போல் இனி உங்களுடன் சேருபவர்களும் லாபம் அடைவார்கள். அதிர்ஷ்ட கதவு திறந்துவிட்டது.

மிதுன இராசி அன்பர்களேஉங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். சோதனைகள் இனி சாதனைகளாக மாறப் போகிறது. 6-ல் குரு என்று பயந்த நீங்கள், லாபாதிபதி 10-ல் இருந்து குரு பார்வை பெற்றதால், மண்ணும் பொன்னாகும். இனி கஷ்டங்கள் ஐஸ் கட்டி போல் கரைந்துவிடும். உடல்நலத்தை அதாவது சுகஸ்தானத்தை செவ்வாய் பார்வை செய்வதால், நோய்நொடி தீரும். பஞ்சமத்தில் சுக்கிரன், சந்திரனோடு இணையப்பெற்றுள்ளது. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். ஜென்மாதிபதி புதன், குருவோடு சேர்ந்ததால் மனகுழப்பம் தீரும். தைரியம் அதிகரிக்கும். எதையும் சாதிக்கலாம் என்று துணிந்து இறங்குவீர்கள். தனஸ்தானத்தில் இராகு உள்ளதால், வரும் பணத்தை பிடித்து வையுங்கள். தேவையில்லா ஆடம்பர செலவால் பிரச்னைகள் உண்டாகும். அதிர்ஷ்ட காற்று வீச தொடங்கிவிட்டது.

கடக இராசி அன்பர்களேஉங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். பாலைவனத்தில் அலைந்து கொண்டிருந்த நீங்கள் இனி சோலைவனத்தை பார்க்க போகிறீர்கள். ஜென்ம இராகு அடேயப்பாவாட்டி வதைக்கிறதா?. பாம்பு விடுமா?. ஆனால் அம்பாள் அனுகிரகத்தால் குரு பார்வை இராகுவுக்கு கிடைப்பதால், குரு சண்டாள யோகம் ஆகிறது. ஆம், ரூ5,10-க்கெல்லாம் அவஸ்தைபட்ட நீங்கள், இனி பணத்தை அள்ள போகிறீர்கள். வீடு, மனை சொத்து சுகத்தை சுக்கிரன் 4-ம் இடத்திலிருந்து வாரி கொடுக்கப் போகிறான். 7-ல் கேது இருப்பதால் கூட்டு தொழில் சேருவதில் கவனம் தேவை. பயணங்கள் அதிகரிக்கும். சூரியன் 10-ம் பார்வையாக கீர்த்திஸ்தானத்தை பார்ப்பதால், ஏளனமாக பேசியவர்களும், உங்கள் உயர்வை கண்டு பெருமூச்சு விடுவார்கள். அம்பாள் அனுகிரகத்தால் பொற்காலம் வந்துவிட்டது.

சிம்ம இராசி அன்பர்களேஉங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது என்ற நிலைமாறி இனி ஏறுமுகம்தான். வாழ்க்கை உச்சிக்கு போக போகிறது. பட்டது கொஞ்சமா? அப்பப்பா? என்ற முனுமுனுப்பு மறைந்து, உங்களை அதிர்ஷ்ட தேவதை அனைத்துக் கொள்ள போகிறாள். குடும்பத்தில் இருந்த குழப்பம், பிரச்னை அனைத்தும் கடலில் கரையும் மண் பொம்மை போல கரைந்து போகும். சீண்டியவர்கள் சிதறி போவார்கள். மனம் மகிழ்ச்சி அடையும். வேலை வாய்ப்பும், சொந்த தொழிலும் அமோகமாக இருக்கும். கடன் தீரும். கையில் காசு நிற்க மாட்டேன் என்கிறது என தவித்த உங்களுக்கு ஜென்மாதிபதி, தனஸ்தானத்தை பார்வை செய்வதால் நினைத்ததை வாங்கும் அளவுக்கு பணம் புரளப் போகிறது. இனி உங்கள் ஆட்டம் ஆரம்பம்தான் என அம்பாள் அருள் தந்துவிட்டாள்.

கன்னி இராசி அன்பர்களேஉங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். குறுகிற பாதையில் இருட்டில் தவித்துக்கொண்டிருந்த நீங்கள் ஹைவே (Highway) வந்துவிட்டீர்கள். ஆம், புத்தாண்டு விடியல் துவங்கிவிட்டது. அடமானம் போன நகை திரும்புமா? என்று தவித்த நீங்கள், இனி தேவையான ஆபரணங்களை அணிய போகிறீர்கள். விளையாட்டுக்கு கூறவில்லை. ஜென்மாதிபதி புதன், குருவுடன் இணைந்துவிட்டான். கேட்க வேண்டுமா?. மடமடவென்று வாழ்க்கை தரம் உயரும். கவலைகள் காற்றில் பறந்துவிடும். உத்தியோக உயர்வு, திருமணம் என்று பல சந்தோஷ நிகழ்ச்சிகள் நடக்கும். இனி உங்கள் பக்கம் அதிர்ஷ்ட மழை கொட்டப் போகிறது. ஆம், 2-ல் சுக்கிரன் வாரி வழங்கப் போகிறான். 12-க்குரிய சூரியன், ஜென்ம சனியை பார்வை செய்வதால் அதிக உழைப்பு இருக்கும். பலனும் கிடைக்கும். அம்பாள் அருளால் இது நடக்கும்.

துலா இராசி அன்பர்களேஉங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். படாதபாடு படுத்திய 10-ல் இராகு, இனி உங்களை, ஓடி விடு என விட்டுவிடும். ஆம், 2-ம் இடத்தில் இருக்கும் குரு, இராகுவை சமாதானம் செய்வார். 4-ல் கேது இருப்பதால் உடல்நலனில் கவனம் தேவை. தாயாருக்கும் உடல்நலனில் அக்கரை தேவை. மேல் மட்டத்தில் உங்களை மட்டம் தட்டியவர்கள் இனி உங்களை புகழ்வார்கள். என்ன வாழ்க்கையோ? என்று வெறுத்துவிட்ட நீங்கள், நினைத்து கூட பார்க்கவில்லை, இப்படி ஒரு நல்ல மாற்றமா? என்று மகிழ்ச்சி கடலில் நீந்த போகிறீர்கள். ஆம், ஜென்ம சுக்கிரன், ஆண்டியையும் அரசனாக்கி விடுவான். அப்படி ஒரு யோக வாழ்க்கை, திருமணம், குழந்தை பேறு என்று குரு பகவான், சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பான். இது அம்பாளின் அருளே. அதிர்ஷ்டம் உங்களை அனைத்துக்கொள்ளப் போகிறது.

விருச்சிக இராசி அன்பர்களேஉங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். பாடாய் படுத்துகிறது பாதசனி என்று பல நாட்களாக நீங்கள் பாடுவது கேட்கிறது. இனி கவலைகள் காலாவதியாகிவிட்டது. ஆம், காரியாதிபதி சூரியன், தனஸ்தானத்தில் வந்துவிட்டான். அதுமட்டுமல்ல, ஜென்மாதிபதி செவ்வாய் பஞ்சமத்தில். கிள்ளி கொடுத்துக்கொண்டிருந்த நேரம் இனி அள்ளி கொடுக்கப்போகிறது. வாக்கு ஸ்தானத்தில் சூரியன், சனி இணைந்து பட,படவென்று பேச வைப்பான். ஆகவே பேச்சில் நிதானம் தேவை. தடைப்பட்ட தொழில் இனி வெற்றிபடி ஏறும். பட்டபடிப்பு உண்டு. வெளிநாட்டில் வேலையும் உண்டு. பஞ்சமத்தில் செவ்வாய், குழந்தை பாக்கியம் தரும். குறைகள் தீரும். வீடு, மனை அமையும். 12-ல் சுக்கிரன், வழக்கு பிரச்னை தீரும். இவை அனைத்தும் அம்பாள் அருளால் நடக்கும். சோகம் மறைந்து யோகம் உங்களை தேடி வரப்போகிறது.

தனுசு இராசி அன்பர்களேஉங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களுக்கு 2019 பிரகாசமாக அமையப்போகிறது. குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு, குழப்பம் தீரப்போகிறது. இழுத்துக்கொண்டு வந்த வழக்கு முடியப்போகிறது. சொந்த வீடு இல்லை என ஏங்கிய நீங்கள், புது வீட்டில் கிரகப் பிரவேசம் செய்யப் போகிறீர்கள். 9-க்குரிய சூரியன், சனியோடு ஜென்மத்தில் உள்ளதால், தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. அரசாங்க விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். 4-ம் இட செவ்வாய், பட்டபடிப்பை கொடுக்கும். தடைப்பட்ட வேலை, உத்தியோகம் நிரந்தரமாக அமையும். லாப சுக்கிரன், பெண்களால் ஆதாயத்தை உண்டாக்கும். பொதுவாக கேந்திர குரு மறைந்து, நிறைந்த பலனை கொடுக்கப் போகிறார். குரு மறைந்தாலும் 4-ம் இடம், 6-ம் இடம், 8-ம் இடம் பலம் பெற்றதால், பெறுவீர்கள் திடீர் அதிர்ஷ்ட பரிசு. அம்பாள் அருளால் அனுகூலம் உண்டு. அருமையான ஆண்டு.

மகர இராசி அன்பர்களேஉங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். அஷ்டம சூரியன், 12-ல் இருக்கிறான். இனி என்ன வேண்டும்?. இதுநாள்வரை இருந்த அலைச்சல்களுக்கு இனி பெருத்த லாபம்தான். லாப குரு கேட்கதான் வேண்டுமா?. மண்ணை தொட்டாலும் பொன்னாகுமே. திருமணம் கைகூடும். அயல்நாட்டிற்கு வேலை விஷயமாக போக வேண்டிய சூழ்நிலை உருவாகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். புத்திர செல்வம் உண்டாகும். சப்தம இராகு, நண்பர்களால் ஆதாயம் தருவார். கடக இராகு, யோக இராகு. சோகத்தை தூக்கி எறிந்து, யோகத்தை கொடுப்பான். 10-ல் சந்திரன், சுக்கிரன். தொழிலில் இனி பணமழைதான். 12-ல் சூரியன். அவன் 8-க்குரியவன். வாகனம் ஓட்டுவதில் நிதானம் வேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். பொதுவாக லாப குரு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகிறது. அதிர்ஷ்டம் உங்களை அனைக்கப் போகிறது. அம்பாள் அருளால் ஜமாயுங்கள்.

கும்ப இராசி அன்பர்களேஉங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். எப்போதுதான் நல்ல நேரம் வருமோ? என்று விரக்தி அடைந்த நீங்கள், இனி வீறுக்கொண்டு எழுந்து வெற்றி நடை போடபோகிறீர்கள். பின்ன சும்மாவா?, தன-லாபாதிபதி குரு, சுகஸ்தானத்தை, ரோகஸ்தானத்தை, தனஸ்தானத்தை பார்வை செய்கிறார். அடித்தது அதிர்ஷ்டம் போங்கள். தண்ணீர் இல்லாத ஆறு, பேய் மழையால் நிறைந்து வெள்ளமாக ஓடி வருவது போல, வறண்டு இருந்த உங்கள் பொருளாதார நிலை, இனி பை நிறைய பணம் குவியும். வேடிக்கையாக கூறவில்லை, இனி உங்களுக்கு அதிர்ஷ்ட பரிசுதான். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். வாகனம் அந்தஸ்தாக அமையும். முக்கியமாக கடன் பிரச்னை தீர்ந்துவிடும். எதிர்பார்த்தது உங்களை தேடி வரும். அருமையான அதிர்ஷ்ட ஆண்டு. அம்பாள் அருளால் வளம் பெறுங்கள்.

மீன இராசி அன்பர்களேஉங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள். தனாதிபதி ஜென்மத்தில். 9-ல் குரு, புதன். சொல்லவே வேண்டாம். அனைத்து வசதிகளும் வந்து சேரும். மேல்மட்டத்தில் இருப்பவர்களின் உதவி தேடி வரும். குடும்பத்தில் குதுகலம் பிறக்கும். மக்கட்பெறு உண்டாகும். இதுநாள்வரை இருந்த நோய் தீரும். தெய்வ தரிசனம் அதிகரிக்கும். அன்னிய நாட்டில் வசிப்பவர்களின் உதவி கிடைக்கும். கடல் கடந்து உங்கள் வர்த்தகம் விரிவடையும். அரசாங்க ஆதரவு சூரியனால் அமையும். பழைய வீட்டை புதுபிக்கும் சூழ்நிலை உருவாகும். அஷ்டமத்தில் சுக்கிரன், சந்திரன். மற்றவர்களின் புத்தியில் (ஆலோசனையில்) பின் தொடர வேண்டாம். அது உங்களை அதள பாதாளத்தில் விழ செய்யும். உங்கள் ஜென்மத்தை குரு பார்த்து நன்மை வாரி வழங்கப் போகிறார். உங்கள் வாழ்க்கையை அதிர்ஷ்ட தேவதை அனைத்துக் கொள்ளப்போகிறாள். அம்பாள் அருளால் அருமையான புத்தாண்டு.

அனைவருக்கும் பக்திபிளானெட்.காமின் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றிவணக்கம்!
Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel


Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.


As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 


BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 



For Astrology Consultation

Sri Durga Devi upasakar,

Krishnarau. V.G

Phone Number: 98411 64648

E – Mail: bhakthiplanet@gmail.com




© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved