Written by NIRANJANA
காரணம்
இல்லாமல் காரியம் நடக்காது. ஒரு
செயல் நடக்கிறது என்றால் அதற்கு நிச்சயம்
ஒரு காரணம் இருக்கும். அதை
அலசி ஆராய்ந்தால் உண்மை தெரியும். ஆடி
மாதம் அம்மனுக்கு கூழ் சமைத்து படைப்பார்கள்.
கூழ் அம்மனுக்கு பிடிக்கும்.
அம்மனுக்கு கூழ் படைக்கும் ஐதீகம் நம் முன்னோர் காலத்தில் இருந்தே உண்டு.
அம்மனுக்கு கூழ் படைக்கும் ஐதீகம் நம் முன்னோர் காலத்தில் இருந்தே உண்டு.
சரி கூழ் எதற்காக படைக்கிறார்கள்? என்ற காரணத்தையும் அறிய வேண்டுமல்லவா.
ஆடி
மாதம் பக்தர்கள் அம்மனை வேண்டி விரதம்
இருந்து குண்டம் இறங்குவார்கள். அதாவது
தீ மிதிப்பார்கள். அப்போது தீ மிதிக்கும்
பக்தர்களின் உடலில் அம்மன் இறங்குவார்.
அந்த பக்தனின் உருவத்தில் அம்மனே தீ மிதிப்பார்.
இதனால்தான் பல அடி தூரம்
கொண்ட தீயில் பக்தர்கள் நடக்கும்போது
அவர்களின் பாதத்திற்கு எந்த தீ கொப்பளங்களும்
ஏற்படுவதில்லை.
ஆடி
மாதத்தில் பக்தர்களின் உருவத்தில் அம்மன் தீ மிதிப்பதால்
அம்மனின் உடல் உஷ்ணமாக இருக்கும்.
அதை தணிக்கவே குளிர்ச்சியான தன்மைகொண்ட கேழ்வரகை அரைத்து, அத்துடன் நொய் அரிசியை கலந்து
கூழ் தயாரித்து அம்மனுக்கு படைக்கும் வழக்கம் உருவானது.
இப்போது
தெரிந்துக்கொண்ட்டீர்களா ஆடி மாதம் அம்மனுக்கு
ஏன் கூழ் வைக்கிறார்கள் என்று.
தன்
பக்தர்கள் ஏழ்மையானவர்களாக இருந்தாலும் அவர்கள் தினமும் சாப்பிடும்
கூழை தனக்கு பிடித்த உணவாக
மாற்றிக்கொண்டாள் அன்னை. அம்மனுக்கு கூழ் படைத்தால் அந்த
பக்தர்களில் வாழ்க்கை வசந்தமாக மாறும்!
For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com
Visit: www.bhakthiplanet.com
© 2011-2018 bhakthiplanet.com All
Rights Reserved