Written by Niranjana
03.08.2017 அன்று ஆடிப்பெருக்கு திருநாள்!
தெய்வ
வழிபாடு விசேஷங்களுக்கு மட்டுமின்றி விவசாயிகளுக்கும் உகந்த மாதம் இந்த
ஆடி மாதம். ஆம், உழவு
பணிகளை துவங்கும் மாதம். பஞ்சபூதங்களில் ஒன்றான
தண்ணீரை நாம் தெய்வமாக மதிக்கிறோம்.
தண்ணீரை அதிகம் செலவு செய்தால்
பணம் விரையம் ஆகும் என்கிறது
சாஸ்திரம். கங்கை-காவேரி மற்றும்
பல நதிகளை புண்ணிய நதிகளாக,
தெய்வீக இடமாக கருதி போற்றி,
அங்கு பூஜை செய்வார்கள். எல்லாம
மாதங்களிலில் பூஜை செய்வதை விட
ஆடிமாதம் பூஜித்தால் விசேஷம் என்று ஏன்
கருதுகிறார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை அறிந்துக்கொள்வோம்.
காவேரி நதியின் மகிமையை உணர்த்திய பெருமாள்!
அகத்திய முனிவரிடம் காவேரி
எடுத்தெறிந்து பேசியதால் கோபம் கொண்ட அகத்திய
முனிவர் காவேரியை தன் கமண்டலத்தில் அடைத்து
வைக்க, இதை கண்ட தேவர்கள்,
விநாயகரிடம் முறையிட, விநாயகப்பெருமான், காக்கை உருவத்தில் வந்து,
அகத்தியர் முனிவரின் கமண்டலத்தை தள்ளி விட்டார். விக்னங்களை
போக்கும் விக்னேஷ்வரனால் காவேரி தாய் மீண்டும்
பரந்துவிரிந்து ஓடினாள். காவேரி நதி ஒரு
புண்ணிய நதியாகும். இதில் ஸ்நானம் (நீராடினால்)
செய்தால் பாவங்கள் நீங்கும். இதை மக்கள் உணர்வதற்கு
புராணத்தில் ஒரு சம்பவம் இருக்கிறது.
மக்கள் தங்களுடைய பாவங்களை
போக்க கங்கையில் நீராடி நீராடி கங்கைக்கே
பாவம் அதிகமாக சேர்ந்து தோஷம்
ஏற்பட்டது. தன் பாவங்கள் தீர
என்ன செய்ய வேண்டும்? என்று
விஷ்ணு பகவானிடம் கேட்டாள் கங்கை.
அதற்கு ஸ்ரீமகாவிஷ்ணு, “நீ
காவேரி நதியில் நீராடு. உன்
பாவம் நீங்கும்” என்றார்.
அந்த சமயம், கர்ப்பவதியாக
இருந்த காவேரி, பெருமாள் சொன்னதை
கேள்விப்பட்டு மகிழ்ந்தாள். பெருமாளை தரிசிக்க காவேரி நதி பொங்கி
வந்தது. கர்ப்பவதியாக இருந்த காவிரி தாய்
பெருமாளை தரிசித்த நாளே ஆடிப்பெருக்கு திருநாள்.
வருடம் வருடம் தன் தங்கையை
காண ஆவலோடு இருப்பார் ஸ்ரீமந்
நாராயணன்!
ஆடிபெருக்கு நாளில் புண்ணிய நதியில் நீராடி தன் தோஷத்தை போக்கி கொண்டஸ்ரீராமர்
ஸ்ரீ ராமசந்திரருக்கும் இராவணனுக்கும்
நடந்த போரில் பல உயிர்களையும்
ஸ்ரீஇராமர் கொல்ல நேர்ந்தது. ஸ்ரீராமர்
கொன்றது அசுரர்களைதான் என்றாலும் யுத்தத்தில் பலர் கொல்லப்பட்டதால் ஸ்ரீஇராமரை
பிரம்ஹத்தி பிடித்துக்கொண்டது. இந்த தோஷத்தில் இருந்து
விலக என்ன செய்யவேண்டும என்று
வசிஷ்டமுனிவரிடம் கேட்டார் ஸ்ரீராம பிரபு.
“இந்த பாவத்தில் இருந்தும்
தோஷத்திலிருந்தும் நீ விலக காவேரியில்
நீராடு. ஆடிபெருக்கு நாளில் நீராடினால் உடனே
உன்னை பிடித்து வாட்டும் பிரம்ஹத்தி தோஷம் விலகும்.” என்றார்
வசிஷ்டமுனிவர். முனிவர் கூறியது போல்
ஆடிபெருக்கு நாளில் காவேரியில் நீராடி
தன் தோஷத்தை போக்கிக்கொண்டார் ஸ்ரீராமர்.
தங்கைக்கு சீர்வரிசை செய்ய காவேரிக்கு வரும் பெருமாள்
ஆடிபெருக்கு நாளில் தன் தங்கையை
காண ஆவலோடு இருப்பார் ஸ்ரீமன்
நாராயணப் பெருமாள். அத்துடன் தங்கைக்கு சீராக தந்திட புடவை,
திருமாங்கல்யம், வெற்றிலை பாக்கு, பழங்கள் போன்றவற்றை
சீராக எடுத்துக் கொண்டு யானை மேல்
ஏறி வருவதாக புராணம் சொல்கிறது.
அதனால் இன்று வரை ஸ்ரீரங்கம்
கோயிலில் இருந்து யானை மீது
அம்மன் மண்டபம் படித்துறைக்கு சீர்
வரிசையை கொண்டு வருவார்கள். அதை
பெருமாள் முன் வைத்து, “உங்கள்
தங்கைக்கு தர வேண்டிய சீர்
வரிசையை சரி பாருங்கள்.” என்று
காட்டுவார்கள். அத்துடன் தீப ஆராதனையும் செய்வார்கள்.
இதன் பிறகு காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள்.
பூஜை செய்யும் முறை
இந்த ஆடி மாதத்தில்
புண்ணிய நதியாய் திகழும் காவிரி
கர்ப்பவதியாக இருப்பதாகவும், அதனால் அவளுக்கு பலவகையான
உணவுகளை படைத்து மஞ்சள், காதோலை
கருகுமணி மாலை, வளையல், தேங்காய்,
பழம், பூ, அரிசி வெல்லம்
மற்றும் சுவையான பழங்களும், மஞ்சல்
சரடுகளையும் வைத்து தீபஆராதனை செய்து
காவேரியை மகிழ்விப்பார்கள். பிறகு பூஜித்த மஞ்சள்
சரடை பெண்கள் தங்கள் கழுத்திலும்
ஆண்கள் கைகளிலும் கட்டிக்கொள்வார்கள். காவேரியை பூஜித்து சந்தோஷப்படுத்தினால் அந்த குடும்பத்திற்கு எந்த
தீங்கும் வராமல் காவேரி, அன்னையாக
இருந்து நம்மை காப்பாள். அத்துடன்
நாம் நினைப்பது எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற
நம்பிக்கையின் அடிப்படையில் புதுமண தம்பதிகள் புது
மஞ்சள் கயிற்றை மாற்றிக்கொள்வார்கள். குழந்தை இல்லாத
தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் ஏற்படும்.
இத்தகைய பல சிறப்புகளை கொண்டது
ஆடி மாதமும் ஆடி பெருக்கு
திருநாளும் ஆகும்.
2017 Numerology Predictions Click Here
SANI PEYARCHI 2017 – 2020 RASI PALAN Click Here
Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here
மச்ச பலன்கள் கிளிக் செய்யவும்
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011-2017 bhakthiplanet.com
All Rights Reserved