சனிஸ்வர
பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
கன்னி இராசி அன்பர்களே –
26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. உங்களுக்கு சனி பகவான் உங்கள்
இராசிக்கு 4-ம் இடத்தில் அமர்ந்து,
அர்தாஷ்டம சனியாகிவிட்டான். சிலர் பயமுறுத்துவார்கள் ஆனாலும்
பயப்பட வேண்டாம். பஞ்சமாதிபதி 4-ம் இடத்தில் அமர்ந்துவிட்டதால்
கெடுதல் செய்ய மாட்டான். 6-ம்
இடத்தையும், 10-ம் இடத்தையும், உங்கள்
ஜென்மத்தையும் சனி பார்வை செய்வதால்,
ரோக நிவர்த்தி ஆகும். இதுவரை வட்டிக்கு
வட்டி கட்டிக்கொண்டே இருந்த நீங்கள், இனி
அசலையும் கொடுத்து கடனை அடைத்து விடுவீர்கள்.
பலநாட்களாக வேலைக்கு அலைந்தவர்கள் அக்கடா என்று புதிய
வேலையில் அமர்ந்து விடுவார்கள். நசிந்த தொழிலை புதுப்பிப்பீர்கள்.
தொழில்துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
உட்கார நேரம் இல்லை என்று
சொல்லும் அளவுக்கு வேலைகள் வந்த வண்ணம்
இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் அத்தனையும்
வாங்கி கொடுத்து அவர்களை திருப்திப்படுத்துவீர்கள். வழக்கில் இருந்த
சொத்து கைக்கு வந்துவிடும். கண்ணில்
காசையே பார்க்க முடியவில்லை என்று ஏங்கியவர்கள், கை
நிறைய காசு என்று சந்தோஷப்படுவீர்கள்.
இதை நான் சொல்லவில்லை சனி
பகவான் செய்து காட்டபோகிறார்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
சனிக்கிழமையில்
எள் சாதத்தை காக்கைக்கு வைத்து வாருங்கள். சனிக்கிழமையில் நீல நிறத்திலோ அல்லது கருப்பு நீலத்திலோ ஆடை அணியுங்கள். பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
சனிஸ்வர
பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்.
துலா இராசி அன்பர்களே –
26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இத்தனை நாள் பாத
சனியில் இருந்து படாதபாடுபட்ட நீங்கள்
இனி நிம்மதியாக இருக்கலாம். சனிபகவான் 3-ம் இடத்திற்கு வந்துவிட்டார்.
பஞ்சமஸ்தானம், பாக்கியஸ்தானம், விரயஸ்தானத்தை பார்வை செய்வதால், எதிர்பார்த்த
காரியங்கள் கைக்கூடும். வாடகை வீட்டில் வசதியில்லாமல்
இருந்த நீங்கள், இனி சொந்த வீட்டில்
குடிபோக போகிறீர்கள். சிலருக்கு பதவி உயர்வு வர
வாய்ப்புள்ளது. குழந்தை பேறு உண்டாக,
சனிபகவான் அருள் செய்வார். தாய்மாமன்
வழியில் உதவிகள் கிடைக்கும். வங்கி
உதவிகளும் தாராளமாக கிடைக்கும். நிதான பேச்சே வெற்றி
தரும். பெற்றோருக்கு இருந்த மனக்குறை நீங்கும்.
கணவன் – மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். 12-ம்
இடத்தை சனி பார்வை செய்வதால்,
தேவை இல்லாமல் செலவுகள் வரத்தான் செய்யும். வெளிநாட்டில் வேலை செய்து வருபவர்கள்
சற்று சிரமமாகத்தான் இருப்பார்கள். சரி, சிரமம் இல்லாமல்
சிகரம் ஏற முடியுமா? பஞ்சமஸ்தானத்தை
அதாவது சனி, தன் சொந்த
வீட்டை பார்வை செய்வதால், திக்கு
தெரியாத காட்டில் இருந்து ஊருக்குள் வந்துவிட்டீர்கள்.
இனி யோக வாழ்க்கைதான்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
ஆனைமுகனை
வணங்கி, உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் சூரத்தேங்காயை உடையுங்கள். விநாயகப்பெருமானுக்கு வஸ்திரம் அணிவித்து வணங்குங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
சனிஸ்வர
பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
விருச்சிக இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி.
இதுநாள்வரை ஜென்மத்தில் இருந்த சனி உங்களை
விட்டு விலகி விட்டான். அதாவது,
தலையில் சுமந்து வந்த பாரத்தை
இறக்கி வைத்து விட்டீர்கள். தற்காலம்
சனி 2-ம் இடத்திற்கு வந்திருப்பதால்
கைக்கு கை பணம் கிடைத்து
பையை நிரப்பும். சுகஸ்தானத்தை சனிபகவான் பார்வை செய்வதால், தீராத
வியாதியும் தீர்ந்து விடும். இனி டாக்டர்
வீட்டுக்கு அலையவேண்டியதில்லை. தடைபட்ட கல்வி தொடர
வாய்ப்பு வரும். பழைய வீட்டை
புதுபிக்கும் நேரம் வந்து விட்டது.
புதிய வாகனம் வாங்கும் உண்டு.
சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும். மேலதிகாரியிடம் கவனமாக இருக்க வேண்டும்.
புண்ணியஸ்தலங்களுக்கு போகும் பாக்கியம் கிடைக்கும்.
9-ம் இடத்திற்கு 12-ல் சனி பார்வைபடுவதால்,
பெற்றோர் உடல்நலனில் சிறு, சிறு உபாதைகள்
காட்டும். பிரமோஷன் வரவில்லை என்று ஏங்கியவர்களுக்கு பதவி
உயர்வு நிச்சயம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு நீங்கி,
மகிழ்ச்சி அதிகரிக்கும். பாத சனி கெடுதல் செய்யும் என்பார்களே என்று நீங்கள் கேட்பது
எனக்கு கேட்கிறது. சனி பகவான், சுக்கிரன்
சாரத்தில் வந்ததால் கெடுக்காது – நல்லவற்றை வாரி கொடுக்கும்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
சனிக்கிழமையில்
காக்கைக்கு எள் கலந்த சாதத்தை வையுங்கள். சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் சிவாலயத்திற்கு சென்று இறைவனை வணங்குங்கள். சனிபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 8 முறை உச்சரித்து வாருங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கியும் வாருங்கள்.
சனிஸ்வர
பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
தனுசு இராசி அன்பர்களே –
26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. சனிபகவான் உங்கள் ஜென்மத்தில் வந்தமர்ந்து
விட்டான். அய்யோ சாமி… ஏற்கனவே ஏழரை சனி. தீராத குறைக்கு ஜென்ம சனியுமா? என்று பயப்பட வேண்டாம்.
சுக்கிரன் சாரத்தில் வந்துள்ளதால், கெடுதல் செய்ய மாட்டார்.
கீர்த்திஸ்தானம், சப்தமஸ்தானம், ஜீவனஸ்தானத்தை சனிபார்வை செய்வதால், சகோதர-சகோதரிகளுக்கு யோக
காலம்தான். உங்களுக்கு திருமணம் தடைப்பட்டு வந்திருந்தால் இனி கவலையில்லை. திருமணம்
பிரமாதமாக நடந்து விடும். போட்டி-பந்தயங்களில் வெற்றி கொடுக்கும். ஷேர்
மார்கெட்டில் சிறிய லாபம் கிடைக்கும்.
திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். தொழில் ஸ்தானத்திற்கு 6-ம்
இடத்தை பார்வை செய்வதால் பெரிய
முதலீடு செய்யும்போது கவனமாக இருங்கள். அவசரம்
பர,பரப்பு அடைய வைக்கும்.
பலநாட்களாக வாகனத்தை மாற்ற வேண்டும் என்கிற
விருப்பம் நிறைவேறும். பழைய கடன் வசூலாகும்.
திருமணம் ஆனவர்கள் மனைவியின் உடல்நலனில் சற்று கவனம் தேவை.
துணைவருக்கு சிறு,சிறு பிரச்னைகள்
வரலாம். அரசாங்க ஆதரவு கிடைக்கும்.
கூட்டு தொழில் நன்றாக அமையும்.
பொதுவாக ஜென்ம சனியாக இருந்தாலும்
அதிர்ஷ்ட காற்று பலமாக வீசும்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
அஞ்சனை
மைந்தனை வணங்குங்கள். சனிக்கிழமையில் ஸ்ரீஅனுமனுக்கு வெண்ணை படைத்து வணங்குங்கள். உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் விநாயகப் பெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். சனிஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி, சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
சனிஸ்வர
பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
மகர இராசி அன்பர்களே –
26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. வந்துவிட்டது ஏழரை சனி என்று
பயந்துவிடாதீர்கள். பயமுறுத்த பலர் இருப்பார்கள். உங்களுக்கு
வந்தது ஏழரைதான் ஆனால் சுக்கிரன் சாரத்தில்
வந்திருப்பதால் நன்மைகளை அள்ளி கொடுக்காவிட்டாலும் கிள்ளியாவது
சனிபகவான் கொடுப்பான். ஆனால் கெடுக்க மாட்டான்.
ருண-ரோகஸ்தானம், தனஸ்தானம், பாக்கியஸ்தானத்தை சனி பார்வை செய்வதால்
கடன் சுமை நீங்கும். இதுநாள்வரை
ஜவ்வு போல் இழுத்துக் கொண்டு
இருந்த வழக்கு ஒரு முடிவுக்கு
வரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கடன் வாங்கியாவது சொந்த
வீடு வாங்கி விடுவீர்கள். உங்கள்
வாக்கு மேன்மை பெறும். உடல்நலனில்
மட்டும் கண்டிப்பாக கவனம் தேவை. தலை
சம்மந்தப்பட்ட, வயிற்று சம்மந்தப்பட்ட பிரச்னைகள்
சில நேரங்களில் ஏற்படலாம். கவனமாக இருக்கவும். பயணங்கள்
அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் தரும்.
மனைவியால் லாபம் உண்டு. மனைவியின்
ஆலோசனை சரியாக இருக்கும். வாகனம்
ஓட்டுவதில் கவனமும் பொறுமையும் தேவை.
12-ம் இடத்திற்கு சனிபகவான் வந்திருந்தாலும் கவலையில்லை. இந்த ஏழரை உங்களுக்கு
வளமையும், பெருமையும் தரும்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
சனிக்கிழமையில்
ஸ்ரீபார்த்தசாரதி
பெருமாளை வணங்குங்கள். வீட்டில் ஸ்ரீபார்த்தசாரதி படம் வைத்து அந்த படத்தின் முன் நெய் தீபம் ஏற்றி கல்கண்டு வைத்து வணங்குங்கள். சாதத்தில் எள் கலந்து காக்கைக்கு வையுங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
சனிஸ்வர
பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
கும்ப இராசி அன்பர்களே –
26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இந்த சனி பெயர்ச்சி
உங்களுக்கு லாப சனியாக வந்துவிட்டது.
அதாவது, சனிபகவான் உங்கள் இராசிக்கு 11-ம்
இடத்திற்கு வந்துவிட்டார். இனியெல்லாம் யோகமே. தொட்டது துலங்கும்.
ஜென்ம இராசியையும், பஞ்சமத்தையும், அஷ்டமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், ஆண்டி
போல் அலைந்தவர்கள் அரசனை போல் வாழப்போகிறீர்கள்.
ஆம், ஜென்மாதிபதி ஜென்மத்தை பார்வை செய்வதால் கஷ்டங்கள்,
நஷ்டங்கள் அத்தனையும் நடா புயல் போல்
ஓடி விடும். பிள்ளைகளுக்கு திருமணம்
செய்து வைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைக்கூடும். உத்தியோகத்தில் சிரமம், பளு குறையும்.
சிலருக்கு தொழில் துவங்கவும் வசதி
ஏற்படும். கடன் பிரச்னை தீரும்.
பொதுவாக, மனக்குழப்பங்கள் அத்தனையும் தீர்ந்து விடும். தூரத்து உறவினரின்
உதவி கிடைக்கும். தெய்வ பணிகள் அதிகரிக்கும்.
பேச்சில் மட்டும் நிதானம், பொறுமை
தேவை. சகோதர உறவில் மகிழ்ச்சி
ஏற்படும். வில்லங்கமான சொத்துக்கள் விஷயத்தில் சுமுகமாக பேசி முடிக்கும் சூழ்நிலை
உருவாகும். கணக்கு-வழக்கில் கவனம்
தேவை. லாப சனி யோக
சனிதான்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
சர்வலோக
நாயகனை வணங்குங்கள். சோமவாரத்தில் (திங்கள்கிழமை) வில்வ இலை சமர்பியுங்கள். உங்களால் முடிந்த ஏழை பிள்ளைகளுக்கு வஸ்திர தானம் செய்யுங்கள். சனிபகவானை சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.
சனிஸ்வர
பகவான் உங்களுக்கு நன்மைகளை அருளட்டும்!
மீன இராசி அன்பர்களே –
26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. சனி பகவான் உங்கள்
இராசிக்கு 10-ம் இடத்திற்கு பெயர்ச்சி
ஆகிறார். உங்களுக்கு சனி லாபாதிபதி. லாபாதிபதி
10-ல் இருப்பது வெகு விஷேசம். விரயஸ்தானத்தையும்,
சுகஸ்தானத்தையும், சப்தமஸ்தானத்தையும் பார்வை செய்வதால், இதுநாள்வரை
பீடித்த நோய் உங்களை விட்டு
விலகி விடும். மனகுழப்பம் நீங்கி
மகிழ்ச்சி பெருகும். வாகனம், வீடு அமையும்.
எப்பொழுது சொந்த வீடு அமையும்? என்று ஏங்கியவர்களுக்கு சொந்த
வீடு வாங்கி கிரகபிரவேசம் செய்யும்
யோகம் வந்துவிட்டது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் பிரமாதமாக நடக்கும். திருமணமான உங்கள் பிள்ளைகளுக்கு குழந்தை
பாக்கியம் ஏற்படும். போகாத கோயில் இல்லை
என்று திருமண வரனுக்காக சுற்றி
வந்தவர்களுக்கு குடும்ப வாழ்க்கை அமையும்.
பொன், பொருள் சேரும். ஆனால்,
சனி பகவான் விரயஸ்தானத்தை பார்ப்பதால்
வீண் விவகாரம் செய்ய வேண்டாம். மனதில்பட்டதை
பேசுவதை தவிர்க்கவும். 10-ம் இட சனி
பிரமாதமான வாழ்க்கை கொடுக்க போகிறான். கையில்
இருக்கும் வைரத்தை வைத்துக் கொண்டு
கண்ணாடி கல்லை தேட வேண்டாம்.
அதாவது, தேவையற்ற சிந்தனைகளால் மனதை சிதறடிக்க வேண்டாம்.
சுக்கிரன் சாரத்தில் வந்த சனிபகவான், உங்களை
பாக்கியசாலி, யோகசாலியாக்கும்.
உங்கள் இராசிக்கு சனிப்பெயர்ச்சி பரிகாரம்!
சனிக்கிழமையில்
ஸ்ரீஅனுமனை வணங்குங்கள். ஸ்ரீஆஞ்சநேயர் பாடல்களை பாடுங்கள். ஸ்ரீஆஞ்சனேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வணங்குங்கள். சனிக்கிழமையில் எள் சாதத்தை காக்கைக்கு வையுங்கள். விநாயகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வாருங்கள். சனிபகவானையும் சனிக்கிழமையில் வணங்கி வாருங்கள்.