Sunday, November 27, 2016
உங்கள் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை
div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here
Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here
RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal
2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan Click Here
சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும்
Written by NIRANJANA
ஒரு
ஜீவராசி வாழ்வதற்கு எது முக்கிய தேவை
என்றால் அது உயிர். அதுபோல,
ஒருவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது
அவர்களின் பிறந்த நட்சத்திரம். இருளை
விரட்டி வானத்திற்கு எப்படி நட்சத்திரம் அழகு
சேர்க்கிறதோ, அதுபோல பிறந்த நட்சத்திரம்
ஒருவரின் வாழ்வை நல்ல நிலைக்கு
மாற்றும் ஆற்றல் கொண்டிருக்கிறது.
இதை
தேவ முனிவர் ஒருவர் காமாட்சி
அம்மனிடம் விளக்கினார். அதை பற்றி விரிவாக
பார்ப்போம்.
விளையாட்டு
வினையாகும் என்பது போல, அன்னை
பார்வதிதேவி, சிவனின் கண்களை விளையாட்டாக
மூடியதால் சாபம் உண்டாகி சிவபெருமானைவிட்டு
பிரியும் நிலைக்கு ஆளானார். மீண்டும் தன் கணவருடன் இணைய
வேண்டும் என்று விரும்பிய பார்வதிதேவி,
காமாட்சி அம்மனாக ஊசி முனையில் கடும்
தவம் இருந்தார். இப்படி ஊசி முனையில்
பல மாதங்களாக தவம் இருக்கிறாரே என்று
மனம் வருந்திய தேவ முனிவர் ஒருவர்,
அம்பிகை முன் தோன்றி, உங்கள்
திரு நட்சத்திரத்தில் மணலால் சிவலிங்கம் செய்து
வழிபடுங்கள். இதனால் பாபம் நீங்கப்பெற்று
நிச்சயம் உங்கள் கணவருடன் சேர்ந்து
வாழும் நிலை உண்டாகும்” என்று
கூறினார் தேவ முனிவர்.
முனிவரின்
ஆலோசனைப்படி காமாட்சி அம்மன் தன் திருநட்சத்திரத்தில்
காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் மணலால் சிவலிங்கம் உருவாக்கி
வழிபட்டார். இதன் பயனால் சாபம்
விலகியது. மீண்டும் சிவபெருமானுடன் இணையும் பாக்கியத்தை பெற்றார்
அம்பாள்.
இந்த
சம்பவத்தின் மூலமாக, அவரவர் ஜென்ம
நட்சத்திரங்களில் செய்யும் பரிகாரங்களுக்கு பலனும் மகிமையும் அதிகம்
என உணர்த்தினார் இறைவன்.
பொதுவாக
27 நட்சத்திரங்களும் பெண் தேவதைகள் என்பதால்
அவரவர் பிறந்த நட்சத்திரத்தின் பெண்
தேவதைகளுக்கு பூஜை செய்தால் பலன்
கிடைக்கும்.
எப்படி
அந்த நட்சத்திரத்திற்கு உரிய பெண்தேவதைக்கு பூஜை
செய்வது என்றால்?
நீங்கள்
பிறந்த நட்சத்திரம் ஒவ்வொரு மாதத்திலும் எந்த
நாளில் வருகிறதோ அந்த நாளில் உங்கள்
நட்சத்திரத்தின் பெயரில் கோயிலில் அர்ச்சனை
செய்ய வேண்டும். இதனால் உங்கள் நட்சத்திரம்
பலவீனமாக இருந்தாலும் பலம் பெறும். பொதுவாக
மந்திரங்களை உச்சரிக்க உச்சரிக்க அந்த மந்திரத்திற்கு ஆற்றல்
வலுவடையும். அதுபோல, உங்கள் ஜென்ம
நட்சத்திரத்தை போற்றி வழிபாடுகள் செய்ய
செய்ய, அந்த நட்சத்திரத்திற்குரிய பெண்தேவதை உங்களுக்கு
ஆற்றலை அள்ளி தருவாள்.
காலையில்
சில நிமிடங்களாவது இறைவனை வணங்கிய பிறகே
வேலைகளை தொடங்குவது பலரின் வழக்கம் அச்சமயங்களில்
அவரவர் ஜென்ம நட்சத்திரத்தையும் மனதால்
நினைத்து, என் ஜென்ம நட்சத்திர
தேவதை என்றென்றும் துணை இருந்து காக்க
வேண்டும், என் வாழ்வை சிறப்பாக்குவாள்
என்று மனதால் மூன்று முறை
நினைத்து வழிபட்டால், நிச்சயம் பிரகாசமான எதிர்காலத்தை அடைவீர்கள்.
அதுபோல
ஒருவர் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலோ அல்லது கண் திருஷ்டி
இருந்தாலோ பெரிய முன்னேற்றத்தை அடையவிடமால்
இருக்கின்றபோது, அதற்கான பரிகாரம் என்ன என்பதை கண்திருஷ்டி பரிகாரம் என்ற கட்டுரையை படித்திருப்பீர்கள்.
அதில் வரும் தோஷங்கள் தீரும் பரிகாரங்களை உங்கள் ஜென்ம
நட்சத்திரத்தில் செய்து வழிபட்டால், தடைபடும்
செயல்கள் தடை விலகி வெற்றி
தரும்.
சிலருக்கு
அவர்களுடைய பிறந்த நட்சத்திரம் தெரியாமல்
இருக்கும். அதனால் அவர்களுடைய பெயர் இராசிக்குரிய நட்சத்திரத்தின்
தேவதையை மனதால் நினைத்து மேல்
வழிபாடுகள் செய்தும், பரிகாரங்களை செய்தும் வந்தால் பெரும் பலன்
கிடைக்கும்.
அவரவர்
ஜென்ம நட்சத்திரம் என்பது கண்கண்ட தெய்வம்.
திருமணம் மற்றும் அனைத்து சுபசெயல்களும்
நட்சத்திரத்தி்ன் அடிபடையில்தான் பார்க்கிறோம். அத்தகைய மகிமை வாய்ந்த
நமது ஜென்ம நட்சத்திரத்தை வணங்கி
வளம் பெறுவோம்.
Guru Peyarchi Palangal & Pariharam 2016-2017 All Rasi palangal Click Here
Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here
RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal
2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan Click Here
சாமுத்ரிகா லட்சணம் கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
© 2016 bhakthiplanet.com All
Rights Reserved
Labels:
Spiritual
பக்தர் டெண்டுல்கருக்கு பாபா தந்த உபதேசம்
Written
by NIRANJANA
பேடுல்
ஜில்லாவை சேர்ந்த டெண்டுல்கர் என்பவர்
ஷீரடிக்கு சென்று மகான் சாய்பாபாவை
தரிசிக்க வேண்டும் என்று விரும்பினார். இதனால்
பல தடவை ஷீரடிக்கு பயணம்
செய்ய நினைக்கும் போதேல்லாம் ஏதாவது ஒரு வேலை
வந்து தடை உண்டாகும். “ஷீரடிக்கு
செல்ல முடியாமல் நம்மை ஏதோ ஒரு
சக்தி தடுக்கிறது. அது தீய சக்தியாகதான்
இருக்கும். நமக்கு நன்மை ஏற்பாடாமல்
தடுக்கிறதே.” என்று மனம் வருந்தினார்
டெண்டுல்கர். ஒருநாள் அவர் கனவில்,
“நீ அன்னதானம் செய். உன் பாவம்
விலகும். அதன் பிறகு நீ
என்னை காண எந்த தடையும்
வராது” என்றார் சாய்பாபா.
தன்னுடைய
கனவை மறுநாள் நிறைவேற்ற முடிவு
செய்தார் டெண்டுல்கர். தன்னிடம் போதிய வசதி இருக்கும்
போது மற்றவர்களுக்கு அன்னதானம் செய்வார். பணம் இல்லாத சமயத்தில்
எறும்புகளுக்கு வெல்லம் அல்லது அரிசி
மாவு போடுவார். இப்படி பலமுறை செய்து
வந்தார் டெண்டுல்கர். ஒருநாள் டெண்டுல்கரின் நண்பர்
ஒருவர், “நான் ஷீரடிக்கு சென்று
பாபாவை தரிசிக்க போகிறேன். நீயும் என்னுடன் வந்தால்
நன்றாக இருக்கும்” என்றார். இதை கேட்ட டெண்டுல்கர்
மகிழ்ச்சியடைந்து உடனே அந்த நண்பருடன்
கிளம்பினார் சீரடிக்கு. சீரடிக்கு சென்று மகான் சாய்பாபாவை
கண்டதும் டெண்டுல்கரால் ஆனந்தத்தை அடக்க முடியாமல் மகிழ்ச்சியில்
“பாபா…” என்று ஆனந்த கண்ணீருடன்
கத்தினார்.
“உன்
பாவவினை நீங்கியதால் ஆனந்தம் அடைந்தாயா டெண்டுல்கர்.
நீ செய்த அன்னதானத்தின் மகத்துவத்தால்தான்
என்னை நீ சந்திக்க முடிந்தது”
என்று காந்த குரலில் சாய்பாபா
பேசியதை கேட்டதும், இன்னும் மகிழ்ச்சியின் எல்லைக்கே
சென்றார் டெண்டுல்கர். உடன் இருந்தவர்,
“பாபா…
தங்களுக்கு டெண்டுல்கரை முன்பே தெரியுமா?” என்றார்.
சாய்பாபா
புன்னகைத்தார்.
“உலகத்தில்
இருக்கும் ஜீவராசிகளை பற்றி பாபாவுக்கு தெரியாமலா
இருக்கும்” என்றார் பாபாவின் பக்கத்தில்
இருந்த பக்தர்களின் ஒருவர்.
“பாபா
நீங்கள் என் வீட்டுக்கு வர
வேண்டும். என் கையால் உணவை
உங்களுக்கு நான் பரிமார வேண்டும்.
அப்போதுதான் என் மனம் நிம்மதியடையும்.
அத்துடன் உங்கள் பாதம் என்
வீட்டில்பட்டால் எங்கள் வம்சமே மேன்மை
அடையும் என்கிற நம்பிக்கை இருக்கிறது”
என்றார் டெண்டுல்கர்.
“நிச்சயமாக
ஒருநாள் உன் வீட்டுக்கு வருகிறேன்
கவலைப்படாதே. ஆனால் தொடர்ந்து நீ
அன்னதானம் செய்வதை மட்டும் நிறுத்தி
விடாதே. நான் எப்போது வேண்டுமாலும்
எந்த உருவத்திலும் உன் வீடு தேடி
வருவேன். உன்னிடத்தில் உணவு கேட்பேன்.” என்றார்
டெண்டுல்கரிடம் சாய்பாபா.
சாய்பாபாவை
தரிசித்துவிட்டு தன் சொந்த ஊருக்கு
திரும்பினார்கள் டெண்டுல்கரும அவருடைய நண்பரும். சில
மாதங்கள் கழித்து ஒருநாள், பிச்சை
கேட்டபடி ஒரு சாது வந்துக்
கொண்டிருந்தார். அடுத்ததாக டெண்டுல்கர் வீட்டின் முன் நின்று,
“தம்பி…எனக்கு பசியாக இருக்கிறது.
உணவு வேண்டும்.” என்றார்.
“இது
இரவு நேரம் என்பதால் எல்லா
உணவும் காலியாகிவிட்டது. சற்று முன் வந்திருந்தால்
நிச்சயம் உணவு தந்திருப்பேன். இருந்தாலும்
பசி என்று கூறுகிறீர்கள். சற்று
பொறுங்கள். என் நண்பர்களின் வீட்டில்
உணவு இருந்தால் வாங்கி வருகிறேன்.” என்று
கூறி விட்டு, டெண்டுல்கர் தன்
நண்பர் வீட்டிற்கு சென்று உணவு வாங்கி
வந்தார். இதை கண்ட சாது
மகிழ்ச்சியடைந்தார்.
“எதற்காக
இத்தனை சிரமம் எடுக்கிறாய். உணவு
இல்லாத போது வீட்டில் எந்த
நேரமும் இருக்கும் வெல்லத்தை கொடுத்தாலே போதும். டெண்டுல்கர் நீ
நன்றாக தெரிந்து கொள். முடிந்த அளவு
உணவு தானம் செய்வதை மட்டும்
விட்டு விடாதே. உன் கைகளால்
தரும் உணவு தானத்தால் உன்
தலையெழுத்து நன்றாக அமையும். கர்ணன்,
பல தானம் செய்திருந்தாலும் அன்னதானம்
செய்யாததால் அவனால் சொர்க்கம் செல்ல
முடியாமல் திணறினான் என்பதையும் எக்காரணங்கொண்டும் மறக்காதே. ஒருநாளைக்கு ஒருவருக்காவது அன்னதானம் செய்வதால் அன்னபூரணி மகிழ்வாள். உனக்கு வரப் போகும்
பெரும் ஆபத்தில் இருந்து இறைவன் உன்னை
காப்பான். அன்னபூரணியின் அருளால் உன் வம்சத்திற்கே
பசி கொடுமை வராது” என்றார்
மகான் சாய்பாபா.
“என்
பெயரையும் இத்தனை நல்ல உபதேசமும்
செய்யும் தாங்கள் சாதாரண பிச்சைகாரனாக
இருக்க முடியாது. சொல்லுங்கள் அய்யா தாங்கள் யார்.?”
என்றார் டெண்டுல்கர்.
“நான்
யாரா… என்னை தெரிந்துக் கொண்டு
என்ன செய்யப் போகிறாய் டென்டுல்கர்.
நான் சொன்னதை மட்டும் கேள்.
அது போதும் இந்த பிச்சைகாரனுக்கு.”
என்று சிரித்து கொண்டே விடைப்பெற்றார். விடைபெற்றார்
என்பதை விட அந்த நிமிடமே
மாயமாக மறைந்தார். தன் வீட்டிற்கு நேரடியாக
வந்தது மகான் ஷீரடி சாய்பாபா
என்பதை அப்போதுதான் உணர்ந்தார் டெண்டுல்கர்.
Labels:
Spiritual
Subscribe to:
Posts (Atom)