Friday, December 26, 2014

செல்வ செழிப்பான வாழ்க்கையை தரும் ஸ்ரீசத்தியநாராயணா பூஜை!



Written by Niranjana

ஒரு ஊரில் வீப்ரதன் என்பவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவன் நல்ல உழைப்பாளியாக இருப்பினும் வறுமையில் வாடினான். தன் குடும்ப கஷ்டங்களை மனதில் சுமந்தப்படி கவலையுடன் சென்று கொண்டிருந்தான். வீப்ரதனின் கஷ்டங்களை அறிந்த மகான் ஒருவர், சோகத்துடன் வந்து கொண்டிருந்த வீப்ரதனை தடுத்து நிறுத்தினார்.

வீப்ரதாசௌக்கியமா”?

தாங்கள் யார்.? என்னுடைய பெயர் உங்களுக்கு எப்படி தெரியும்.? உங்களை நான் பார்த்ததேயில்லையே.?

இந்த உலகத்தில் இருப்பவர்கள் என்னை தினமும் பார்க்கிறார்கள். நானும் அவர்களை பார்த்து கொண்டேதான் இருக்கிறேன். நான் அவர்களிடம் பேசமாட்டேனா என்று ஏங்குபவர்கள் பல பேர். நீ என்ன புண்ணியம் செய்தாயோ, நானே உன்னை தேடி வந்து பேசுகிறேன்.” (பின்னே இருக்காதா. அந்த ஸ்ரீமன் நாராயணனே வந்து பேசுகிறார் என்றால் உண்மையிலேயே வீப்ரதன் புண்ணியம் செய்துதானே இருக்க வேண்டும்)

சரி அது போகட்டும். உன்னுடைய கஷ்டங்கள் என்ன என்று நீயே பலமுறை என்னிடம் வந்து முறையிட்டு இருக்கிறாய். அதனால் உனக்குமேலும் படிக்க

Wednesday, December 24, 2014

வம்ச விருத்திக்கு எளிய பரிகாரம்!


Written by Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

குடும்பம் செழிப்பாக இருந்தால் மட்டும் போதாது. அந்த வம்சத்தை இன்னும் செழிப்பாக்க புத்திர பாக்கியம் வேண்டும். ஆண்டி முதல் அரசர்வரை ஏங்குவது புத்திர பாக்கியத்திற்காகதான். உதாரணத்திற்கு, தசரதர் புத்திர பாக்கியத்திற்காக ஏங்கி புத்ர காமேஷ்டி யாகம செய்த பலனால் நான்கு பிள்ளைகளை பெற்றார்.

இப்படி வசதிபடைத்த அரசர்கள் யாகங்களும் பல தர்மங்களும் செய்து பிள்ளை பாக்கியம் பெற்றார்கள். சரி, வசதி இல்லாமல் இருப்பவர்களால் இப்படிப்பட்ட யாகங்கள் செய்ய முடியுமா? இதற்கு எளிய பரிகாரம்தான் என்ன?

சிலர் சொல்வார்கள், திருமணம் நடந்து ஐந்து வருடத்திற்கு மேல் ஆகிறது, இன்னும் வயித்துல ஒரு புழு புச்சி தங்கல என்று புலம்புவார்கள். இந்த புலம்பலை தயவு செய்து தவிர்க்க வேண்டும்....மேலும்படிக்க

Monday, December 22, 2014

ரசகுல்லா



தேவையானவை

பால் – 1 லிட்டர் பால்
மைதா – 1 டீஸ்பூன் மைதா
எலுமிச்சம் பழம் - 1
சீனி - 21/2 கப்
நீர் - 5 கப் 

செய்முறை 

முதலில்  பாலை கொதிக்கவிடவும். கொதிக்கின்ற பாலில் எலுமிச்சம்பழத்தை பிழிந்துவிட பால் திரிந்துப் போகும். திரிந்தப் பாலை ஒரு மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். நீர் இறங்கி பால் திரட்சிகள் துணியில் தங்கிவிடும். அதை அப்படியே ஒரு மூட்டையாகக் கட்டி, அதன் மீது அம்மிக்குழவி போன்ற ஏதாவதொரு ஒரு கனமான பொருளை வைத்தால். மிச்சமிருக்கும் நீரும் இறங்கிவிடும். இது பனீர். பனீரை நன்றாக பிசைந்து வைக்கவும். 

இந்த பனீர் 1 டீஸ்பூன் மைதாவைப் போட்டு நன்கு பிசைந்து கோலி வடிவத்தில் சின்னச்சின்னதாய் உருட்டிக் கொள்ளவும்.
தண்ணீர்விட்டு சீனியை காய்ச்சவேண்டும். பாகு இறுக இறுக அவ்வப்போது தண்ணீர் விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பாகு நன்கு கொதித்தக் கொண்டிருக்கும் பொழுதே, செய்து வைத்தள்ள பனீர் கோலியை அதில் போட வேண்டும். 

ரசகுல்லா வாசனையாக இருக்க வேண்டுமெனில், சீனிப் பாகில் உங்களுக்குப் பிடித்த ஏதாவதொரு எஸன்ஸை சேர்த்தக் கொள்ளலாம்.